Posts

Showing posts from 2023

அன்பே வா அருகிலே

"சித்ரா, நாளைக்கு காலையில, ஏர்லியரா கிளம்பணும், ட்ரைவரை நாலரை மணிக்கெல்லாம் வரச் சொல்லியிருக்கேன்.  மதுரையில் மீட்டிங் முடிச்சுட்டு, மேகமலை எஸ்டேட் வரை போகணும்.  ஷவரில், நனைவதற்கு முன் சொல்லி விட்டு, தாழிட, அவனை துண்டு கொடுக்கும் சாக்கில் இறுக்கி அணைத்தாள்.  "சித்து, தாலி குத்துதடி விடுடி" என்றவுடன் விருப்பமில்லாமல் விடுவித்தாள். அவர்களுக்கு திருமணமாகி 6 வாரங்களே ஆகின்றன.  OMR இல் பாஷ்யம் அப்பார்ட்மெண்ட் 14ஆவது தளத்தில், கடலைப் பார்த்த மாதிரி 4 BHK பிளாட் அவர்களுடையது.  கதிர், இன்போசிஸ் கம்பெனியில் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருக்கிறான்.  கல்யாணத்துக்கு முன், இரண்டு வருடங்கள் கனடாவில் ஒட்டாவா நகரில் ஆன்சைட் அசைன்மெண்டில் இருந்து வந்தான்.  அம்மாவின் பிடிவாதம் காரணமாக, கல்யாணத்திற்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டவன், சித்ராவை பார்த்ததும், முடிவை மாற்றிக் கொண்டவன்.   சித்ரா, கதிர் முதன் முதலில் பார்த்ததை நினைத்துக் கொண்டாள்.  மாலை 6 மணியளவில், மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள் என, வீடே அல்லோகலப்பட்டது.  "சென்னையிலிருந்து ட்ரைவ் பண்ணிட்டே வா வற்றாங்க ?" பக்கத்த

உயிர்ப்பறவை

இன்று பிப்ரவரி 14...  நேரம் மாலை 5:40... சென்னை 2028..! மேகா வந்து அரை மணி நேரமாகி விட்டது.  அடையாறு கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில், பாதி அழிந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு அவள் வந்து அரை மணிக்கும் மேலாகத் தான் ஆகி விட்டிருந்தது.  பாலத்தின் அடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.   "அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றது அந்த நீலப்பாவாடைச் சட்டை அணிந்திருந்த சிறுமி.  மேகா, இலேசாக புன்முறுவல் செய்தாள்.  முழுமையாய் அவளால் சிரிக்க முடியவில்லை.  காரணம், ஆகாஷ்.  மதியம் பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பும் போது, இன்று மாலை 5 மணிக்கு அவர்களுடைய பேவரிட் ஸ்பாட் - பட்டினப்பாக்கம் பழைய பாலத்தில் சந்திப்பது என்று ஆகாஷ் சொல்லியிருந்தான்.  அதனால் தான் நிற்கிறாள்.  அவன் வருகைக்காக காத்திருக்கிறாள்.   காற்று பலமாக வீசுகிறது  நெற்றியில் கற்றையாய் முடி மீண்டும் மீண்டும் விழ, அதை சரி செய்து சரி செய்து தோற்றுப் போனாள்.  வெளிர் நீல குர்தாவும், ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்தாள். கண்களில், "ரே பான்" அவளை மேலும் நவீனமாய்க் காட்டியது.  ஒரு கை பாலத்தின் மதில் சுவரையும்

புறவழிச்சாலை

தேநீர்க்கடை மழை அப்பொழுது தான் விட்டிருக்க வேண்டும்.  சாலையெங்கும் நீர்த் தெப்பங்களாயிருந்தது. அருகாமை பெரிய கட்டிடங்கள், தேங்கியிருந்த தண்ணீரில் தலைகீழாய் தெரிந்தன.  வானம் இன்னும் மேகத் திரள்களாய்த் தெரிந்தது. மழை மீண்டும் வரலாம்.  வராமலும் போகலாம்.  விடியற்காலையாதலால், அதிக நடமாட்டமில்லை.  அந்த சாலையின் இடது திருப்பத்தில் ஒரு தேனீர்க்கடை இயங்குவதுத் தெரிகிறது.  மெல்லியதாய் கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்கின்றது.   அருகில் செல்லச் செல்ல ஒலியின் அளவு கூடிற்று. ஒரு போலீஸ்காரர் ஸ்டூலில் இருந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். "அண்ணா, ஒரு டீ, சுகர் கம்மியா" அந்தப் பெண் கேட்டதும், கடைக்காரர் ஆச்சர்யமாய் பார்த்தார்.  டீ ஆற்றிக் கொண்டு அவளை அரைகுறையாய் நோட்டம் விட்டார்.  மாநிறம், சராசரிக்கு சற்று உயரம்.  சுடிதார்  அணிந்திருந்தாள்.  தலை வகிடின் ஆரம்பத்தில் குங்குமம் கலைந்திருந்தது. நெற்றியில் போட்டு இல்லை. கைகளில் ஒரு சிறிய பை. அதில் செல்போன் செருகியிருந்தாள். பெரிதாக நகைகள் ஏதுமில்லை. வயது நடுத்தரமாக இருக்கலாம். கண்கள் சிவந்திருந்தது. முகத்தில் கவலை தெரிந்தது.  "இந்தாம்மா, டீ எடுத்

அந்தி மழை பொழிகிறது ...!

அந்தி மழை பொழிகிறது ...! மண் வாசமும் உன் வாசமும் கலவையாய் காதலாய்... உன் அருகாமை நெருக்கத்தில்  புறப்பட்ட தனலோ என்னில் புயலாய் வீச   பொங்கிய வியர்வைத் துளிகளை ஒற்றிக் கொள்ள  உன் முந்தானையை அன்றோ தேடுகிறது மனம்..!!! "பாப்பா அழுகின்றாள்"  என விருட்டென எழுந்து சென்றாய் ... நீயெழுந்த வேகத்தில், சேலையின் முந்தியில்  என்னில் எழுந்த விரகத் தீயினை  முழுதாய் அணைத்திட அன்றோ துணிந்தாய்...! இல்லறம் பேணும் நல்லறம்  தாம்பத்திய சமரசங்களால் ஆனதேயாயினும்  அதிலும் ஓர் சுகமன்றோ இருக்கிறது ...! பாவமாய் உனை நான் காதல் யாசிக்க , "குழந்தையை விடவா ?"  என நீ  செல்லமாய் அதட்டினாலும்  வெட்கச் செறிவினை கவிதையாய்  கண்கள் பேசிட , என் வேட்கையின் தாகம் தீர  அழுத்தியணைத்து இதழ் பதித்து முத்தமிட்டால்  ஜீவ சாபல்யமன்றோ அடைவேன் ...! மகளை தூங்கச் செய்தாயெனின் விரைந்து வா , காதலாய் காத்திருக்கிறேன், நிலவு பொழிகிறதடி பெண்ணே ...! 

ஐயப்பன் துதி

  ஒப்பில்லா இறைவன் நீ ...! உலகாளும் அரசன் நீ  எண்ணிலா அடியவர் நெஞ்சில்  ஆட் சி செய்யும் தலைவன் நீ ..! விண்ணிலும் மண்ணிலும்  வேதப் பொருள் யாவிலும்  என்னிலும் உன்னிலும்  யாவையுமாய் நிறைந்தவன் நீ...! உனையின்றி வேற்றொன்றும் அறியேன் நான்  உன் நினைவன்றி யாதொன்றும் உய்யேன் நான்  உன் திருநாமம் சொல்லாமல் வாழ்வேது  மணிகண்டா நீயின்றி நானேது? வாழ்வது ஓர் வாழ்க்கை நீ தந்தது  உன்னை வாழ்த்தாமல் என் வாழ்வு ஓயாது  உன் சன்னதி வாராத வாழ்வென்று  எந்நாளும் என் மனம் அறியாதது ...!

தங்கத் தாரகை

  தங்கத் தாரகை  திகட்டாத பூமழை  விண்மீன் வானிலே  ஒளிரும் புன்னகை  அன்பின் சிகரம் நீ  அழகின் உச்சம் நீ  காந்தக் கண்ணினால்  கவரும் கவிதை நீ  உன்னைப் பார்த்த  அந்த முதல் பொழுது  மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன்  எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன்  நீ பேசும் ஓர் மௌன மொழி  ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி  நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை  இந்த பூமி எங்கும் பூக்களடி  நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி  தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...

காதல் மழை

Image
மழை பொழியும் நேரம்  மனம் குளிரும் காலம்  இதழ் விரியா தூரம்  இனம் புரியா மோகம்  சாரல் மழை எந்தன் மேலே விழ தூறல் எங்கும் உந்தன் மேலே பட  என்னில் காதல் மழையாய் கொட்டுதடி  உன்னைக் காணா ஏக்கம் கொல்லுதடி  ஆகாய வீதிதனில்  மேகத்துக் கூட்டத்தில்  பூபாள பாடல் ஒன்று ஒலிக்கின்றது  அதுவே மழையாக மாறித் தான் பொழிகின்றது  தீராத விரதத்தில்  மாறாத தாபத்தில்  என்னுள்ளே காதல் ஒன்று இருக்கின்றது  அது உன்னைத் தான் வந்தடையத்  துடிக்கின்றது  போதும் போதும்  உன்கொல்லும் மவுனம்  காலம் மாறும்  இனி மண்ணில் தூவானம்  மழை முடியும் தருணம்  என் மனதுக்குள் நீ வரணும்  கார் காலம் முழுதும்  நம் காதல் கதை தொடரட்டும் ...!  

காதல் (க)விதை ...!

Image
  கண்ணுக்குள் காதல் விதைத்தாய் ..! கண்ணே என் கண்ணில் கலந்தாய் ... இன்னும் என்ன வெல்லாம் புரிவாய் ... என்னை ஏதோ ஏதோ செய்தாய் ..! பூந்தளிரே ... புதுப் புயலே ... காதல் செய்யடி ..!! என்னைக் காதல் கொள்ளடி ...! யார் யாரோ வருவார் , யார் யாரோ செல்வார்  நீ மட்டும் என்னை விலகாதே  என் காதல் உன்னை வருத்தாதே  இந்த மண்ணில் வாழும் மட்டும்  நாம் இருவரும் இணைந்திருப்போம்  பூந்தளிரே ... புதுப் புயலே ... காதல் செய்யடி ..!! என்னைக் காதல் கொள்ளடி ...!

நினைவிருக்கா...??

Image
  அன்று நல்ல மழை பெய்து விட்டிருந்தது...!ஜன்னல் கம்பிகளில் இன்னும் நீர்த் திவிலைகள் சொட்டிக் கொண்டிருந்தன...!புறாக்கள் தண்ணீர் தடாகங்களில் குளியலிட்டுக் கொண்டிருந்தன...! மாலை தேநீரைப் பருகியபடியே வழியில் செல்வோரை எல்லாம் நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க... தெரு முனையில் தேங்கியிருந்த நீரில் வெளிர் நீலக் கலரில் உன் சேலையின் நிழல் தெரிய உன்னைப் பார்க்கும் அவசரத்தில் விரலைச் சுட்டுக்கொண்டேன்..! நல்ல உயரம் நீ... ஒல்லியுமில்லை, பூசினமாதிரியும் இல்லாததாய் ஒரு தேகம்... உன் வயதை பருவம் சொல்லாமல் சொல்ல, கழுத்தில் நீளமாய் ஒரு தங்கச் சங்கிலி, மேட்டுப் பிரதேசத்தின் மத்தியில் கர்வமாய் ஆடிக் கொண்டிருக்க, கண்களைத் தாண்டி மையின் கருமையும், இதழ்கள் முழுதும் மெலிர் வண்ணப் பூச்சு உறுத்தாமலும் படிந்திருக்க, நெற்றியில் கோவிப் பொட்டிருந்தது...! தூவானமே ஆனாலும் அந்த மங்கியப் பொழுதில் நீ மட்டும் என் ரசனைகேற்றவளாய் அழகாய்த் தெரிந்தாய்...! மழை நீரைச் சேலை நனைக்காதிருக்க சற்றே கெண்டைக் கால்களின் மேலே ஒரு கையில் தூக்கியபடி  நீ கடக்க முயல எதிர்பாராமல் வந்த மகிழுந்து உன் மேல் மழை நீரை வாரியடித்து விருட்டென செ

கட்டுமரம்

Image
  1991 ஆம் ஆண்டு ...! பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வில் நான் வாங்கிய மதிப்பெண்கள் மதிப்புடையதாயிருப்பினும் அண்ணன் பாரதி படித்த ஆர் இ சியில் சேருமளவுக்கு அதற்குத் தகுதியில்லை என அப்பா எனக்கு   மாற்று வாய்ப்பை அமைத்துத் தராது போயினும் , கிடைத்ததே போதும் எனக் கருதி என்னை திருச்சி   புனித வளனார் கல்லூரியில் இளங்கலை இயற்பியலில் சேர்த்துக் கொண்டு , மூன்று வருடங்கள்   தவமாய் படித்து   தனிச்சிறப்புடன் முதல் வகுப்பில் தேர்வான எனக்கு , அந்த மதிப்பெண்கள் மட்டும் என் சொந்தக் கல்லூரியிலேயே எம் சி ஏ படிப்பதற்கு உதவாது , அதற்கு பணமோ அல்லது சிபாரிசோ தேவை என்றும் அது என் அப்பாவால் கொண்டுவர முடியாது என்றும் தெரியாது ...!   1994 ஆம் ஆண்டு ...! கூடப் படித்தவர்கள் எல்லாரும் சாமர்த்தியமாய் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டு பயணிக்கத் துவங்கிய பொழுது திக்குத் தெரியாமல் எந்தப் பக்கம் போவது என்று நிலைதடுமாறி என் செய்வது என்று அறியாமல்   பொறியியல் படிப்பினும் கடினமானதும் , கல்லூரிகளில் படிப்பிக்க இயலாததுமான ஏ எம் ஐ