Posts

Showing posts from February, 2013

என் பார்வையில் " கடல்"

Image
                                                        சமீபத்தில் வெளியான கடல் திரைப்படம் பற்றிய பல தரப்பு விமர்சனங்களைப் படித்து மனம் கலங்கி, என் ஆதர்ச நெறியாளுனர் திரு. மணிரத்தினம் அவர்களது ஆத்மார்த்த ரசிகனாய் எனது கருத்துக்களை பதிவு செய்வது கடமையென உணர்கிறேன். கடல் . . . . !  சமுத்திரம் எவ்வளவு ஆழமும், கொந்தளிப்பும், சீற்றமும், அழகும் மற்றும் அமைதியும் கொண்டதோ அது போலவே இத்திரைப்படமும் என்பதே என் வாதம். புனித விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பெரும்பான்மை கருத்துக்களை எனக்குத் தெரிந்து இத்துனை நேர்த்தியாக எவராலும், காட்சி ஊடகத்தில், திறம்பட சொல்லியிருப்பர்களா என்றால் இல்லை என்பதே உண்மை! சம காலத்துடன் பொருத்தி, கதையின் தன்மைக்கேற்ப பின்புலத்தில், நிஜக் கடலையே ஒரு கதாபாத்திரமாய் உருவாக்கி, அதன் நிற பரிணாமங்களை, தோற்ற இடையூறு இன்றி, சம்பவங்களின் தாக்கங்களுக்காக, பொங்கி எழ வைத்து, ஆர்பரிக்கச் செய்து, காண்போரை, கட்டி போட்டு வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல! " பாடல்களையெல்லாம் வீணடித்து விட்டார் மணி ரத்தினம்" எனும் குற்றச்சாட்டு, அதனை எழுப்பிய ரசிகனின் ஆதங்க வ