Posts

Showing posts from February, 2024

வயசாயிடுச்சில்ல...!

Image
  ஆண்டு 1991..! மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறையும் கழிந்து புனித வளனார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு..  பதினேழு, பதினெட்டு வயது மட்டுமே நிரம்பிய என்னைப் போன்ற ஏராளமான இளைஞர் பலர் தங்கள் அரும்பு மீசை எட்டிப் பார்க்க முதல்நாள் அடியெடுத்து வைத்த நாள் இன்னும் பசுமையாய் நினைவுகளில்...! ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அமர்ந்து படித்த இயற்பியல் வகுப்பில் மர இருக்கைகளின் அரங்க அமைப்பு வகுப்பை மேலும் பிரமாண்டமாக காட்ட, மாணாக்கர்கள் ஆங்காங்கே  ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டிருக்க... திடீரென எனை நோக்கி நெடு நெடு உயரத்தில் ஓர் இளைஞன் திராவிட நிறத்தில் கண்களில் வசீகரம் மின்ன, உதட்டின் மெல்லிதாய் ஒரு சிறு  புன்னகையைய்த் தவழவிட்டுக் கொண்டு அருகில் வரவும், ஏதோ ஓர் சொல்லனா பரிச்சயம் இருவரிடத்தும் உணரப்பட்ட நிலையில், "ஃபிராங்க்ளின், பிரிட்டோ காலனி, மணிகண்டன், மலைகோட்டை" என கை குலுக்கிக் கொண்டு நலம் பரிமாற்றிக் கொண்டோம்..! இருவரும் பள்ளிப் பிராயத்தில்  பாராது "பார்த்துக்" கொண்டிருந்ததை அளவலாவிக் கொண்டோம்..! 10ஆம் வகுப்பில் மதிய இடைவேளைகளில

அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..!

Image
  அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..! வடக்கில் பால ராமனாய் அவதரித்தவன், தெற்கில் பால "தன்வீ"யாயன்றோ  இன்று மீண்டும் உதித்தனன்..! மிதிலையின் அரசன் ஜனகனின் சுவீகார புத்ரியை சுயம்வரம் செய்திட சக்ரவர்த்தித் திருமகன் ராமன்  வில்லை உடைத்து அரங்கேறியது சீதா கல்யாண வைபோகம் அன்று! வில்லெனும் தன் அழகிய கண்களால் "தன்வீ" ராமன் காதலாய் சீதையை நோக்கிட அடையாரில் அரங்கேறியது  மழலையர் சீதா கல்யாணம் இன்று! இந்திய பெருநாட்டின்  மேன்மை மிகு அடையாளமாம் அயோத்தி ராமர் கோவில்தம் வசீகரத்தில் லயித்திருந்த எங்களின் கண்களுக்கு, தன் சின்னஞ்சிறு உடல் மொழியால் மேடையில் விந்தையாய் சீர்மிகு விருந்து வைத்தனள் எங்கள் இல்லத்து இளவரசி தன்வீ..! கற்சிலையேயாயினும் கடவுளாய் ராமன் அயோத்தியில் எழுந்தருளிய காட்சிதனை காணக் கோடி மக்கள் தவமிருக்க, இங்கே உயிர்பெற்ற சிலையாய் ராமன் தன்வீயாய் வலம்வரும் காட்சி கிடைத்திட என்ன தவம் நாங்கள் செய்தோமடா??

கொரிய நாட்டுப் பைங்கிளியே.!

Image
அகண்ட விழிகளால்  என்னை ஆட்கொண்ட கொரிய நாட்டுப் பைங்கிளியே.! கள்ளூரும் உந்தன் ஒற்றைப் பார்வைதனில் சிக்குண்டபின்னே பசியோ ருசியோ அறிகிலேனடி...! இதழ் விரித்து நீ பேசச் சிதறும் எச்சில் என் ஸ்பரிசம் பட்டால்  என் ஆத்மா அன்றோ புனிதமடையும்..! பார்த்தது போதும்.. பேசு... உன்னை மானசீகமாய்  காதல் கொண்டவனிடத்து  என்ன வேண்டுமானாலும் வினவு... உனக்காக கடல் கடந்து வந்தாவது உந்தன் காலடி சேர்த்து விட மாட்டேன்னா என்ன? சகியே..என் சக்தியே...! இவ்வுயிர் இருக்குமட்டும் உன் காதல் துதி பாடிட சலிக்க மாட்டேனடி பெண்ணே...!