அந்தி மழை பொழிகிறது ...!

அந்தி மழை பொழிகிறது ...!

மண் வாசமும் உன் வாசமும் கலவையாய் காதலாய்...

உன் அருகாமை நெருக்கத்தில் 

புறப்பட்ட தனலோ என்னில் புயலாய் வீச  

பொங்கிய வியர்வைத் துளிகளை ஒற்றிக் கொள்ள 

உன் முந்தானையை அன்றோ தேடுகிறது மனம்..!!!


"பாப்பா அழுகின்றாள்" 

என விருட்டென எழுந்து சென்றாய் ...

நீயெழுந்த வேகத்தில், சேலையின் முந்தியில் 

என்னில் எழுந்த விரகத் தீயினை 

முழுதாய் அணைத்திட அன்றோ துணிந்தாய்...!


இல்லறம் பேணும் நல்லறம் 

தாம்பத்திய சமரசங்களால் ஆனதேயாயினும் 

அதிலும் ஓர் சுகமன்றோ இருக்கிறது ...!

பாவமாய் உனை நான் காதல் யாசிக்க ,

"குழந்தையை விடவா ?"  என நீ 

செல்லமாய் அதட்டினாலும் 

வெட்கச் செறிவினை கவிதையாய்  கண்கள் பேசிட ,

என் வேட்கையின் தாகம் தீர 

அழுத்தியணைத்து இதழ் பதித்து முத்தமிட்டால் 

ஜீவ சாபல்யமன்றோ அடைவேன் ...!

மகளை தூங்கச் செய்தாயெனின் விரைந்து வா ,

காதலாய் காத்திருக்கிறேன், நிலவு பொழிகிறதடி பெண்ணே ...! 













Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

ஏலே மக்கா...!