Posts

Showing posts from July, 2020

மதம் பெயரில் அரசியல் எதற்கு?

Image
கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்க் கடவுள் முருகனைத் துதித்து, தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசத்தில் வரும் சில வரிகளை விமர்சித்து பேசிய காணொளியைக் காரணம் காட்டி, எழுந்துள்ள எதிர்ப்பலையினால், அதனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டி, அந்த காணொளியைய் பார்த்தேன்.  அந்த நபர் குறிப்பிட்ட படி, கவசத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகளும், அதற்கான பொருளும் சரியே.  ஆனால், அதை எடுத்துக்காட்டிய விதம், சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.  அதன் வெளிப்பாடே, தற்போது ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலை.  நானும் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் தான்.  ஆனால் எனக்கு அந்த நபர் மீது எந்த வருத்தமும் இல்லை.  ஏனெனில், அது அவரது கருத்து சுதந்திரம்.  அதற்கு எதிர்வினையாற்றியாகிய வேண்டிய கட்டாயம் எவர்க்கும் தேவையுமில்லை.  சில விஷயங்களை பெரிதுபடுத்துவதாலேயே அவற்றுக்கு அவசியமற்ற முக்கியத்துவம் கிடைத்து விடுகிறது.  என்னுடைய பார்வையில், அந்த நபருக்காகவும், அவரது வெறுப்பாளர்களுக்காகவும், நான் சொல்ல விரும்புவது இதைத் தான். கடவுளிடம் ஒரு பக்தன் தனக்காகவும் மற்றும் தன் குடும்பத்தில் உள்ள

தாங்கிக் கொள்(ல்)வாயடி...!

Image
தோழியே, என் காதலியே..! என் மனச்சுமையை இறக்க உன் மார்சுமையில் முகம் பதித்தேன், மூர்ச்சையானேன்! விம்மும் உன் தேகத் தலையணைகளில் என்னை அணைத்துப் புதைத்துக் கொண்டு மோட்சம் அன்றோ தந்தாய்...! என் நெஞ்சக் குமுறல்களின் வலி தாளாது நான் துவள உன் பருவ மேடுகளில்  வழிந்தோடிய என் கண்ணீர் பொங்கும் உன் காம தகதகப்பில் சுவடின்றி ஆவியாய்ப் போனதடி! ஆடையாய் எனைப்  போர்த்திக் கொண்டு, மோகத் தடம்பதிக்க உன் இடையின் இடைவெளியில் நிரந்தரப் பள்ளத்தாக்கில்  என் உயிரின் உதிரத்தை வாஞ்சையாய் நிரப்பிக் கொண்டாய்...! எண்ணிலாத் துயர் வரினும் என்னிலே துயர் வரினும் உன் மேனிதன்னில் கண் மூடிக் கிடந்தால் போதுமடி! என் சாபமும் விரக தாபமும் ஒன்றாய்ச் சேர்ந்துத் தீருமடி...! சகியே..! என்னைச் சகித்துக் கொண்டவளே..! வா, எனை ஆசுவாசப்படுத்து! அசுத்தமாயிருக்கும் என் மனப் பிரதேசத்தை உன் இதழின் ஈரத்தால் துடைத்துச் சுத்தப்படுத்து..! நாளையின் புதிய விடியலாவது நமக்கு நம்பிக்கை பாய்ச்சட்டும்..! மணிகண்டன். பா