Posts

Showing posts from 2009

திண்டுக்கல் பிரியாணி

Image
திண்டுக்கல் பிரியாணி திண்டுக்கல் என்றால் நினைவுக்கு வருவது பூட்டு - இது அந்தக் காலம்! இப்போது காலம் மாறி விட்டது! திண்டுக்கல் என்றால், இப்போதெல்லாம் பிரியாணி தான்! எல்லா நேரமும், விடியற்காலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு பன்னிரண்டு மணி வரை, நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில், சூடான பிரியாணி கிடைக்கிறது. சாப்பிடனும்னு உங்களுக்குத் தோன்றினாலே போதும்! பிரியாணி தயார்! தலப்பாக்கட்டி, வேணு கடை, பொன் ராம், ஜே பி, இப்படி கடைப்பெயர்கள் அங்கே பிரபலம்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை! ஆனால், எல்லாமே அருமை! திண்டுக்கல் சென்றால், அவசியம் பிரியாணியை ஒரு பிடி பிடித்து வாருங்கள்! நமக்கு ஜென்ம பலன் உறுதி!

நாளை அக்டோபர் 25!

Image
நாளை அக்டோபர் 25! முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால், திருச்சி தில்லைநகர் சகுந்தலா நர்சிங் ஹோமில், அன்புத் தாய் தேவ மனோகரிக்கு பிறந்தது ஒரு அழகிய ஆண் குழந்தை! சரி அதுக்கு என்ன இப்போ? நீங்கள் கேட்பது புரிகிறது! ஒன்றுமில்லை அந்த குழந்தை பெரிதாய் ஒன்றும் சாதிக்க விட்டாலும் ஏதோ இந்த பதிவை எழுதும் மட்டுமாவது கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறது! அவ்வளவுதான்!

பசுமையான அந்த பத்து வருடங்கள்!

Image
பசுமையான அந்த பத்து வருடங்கள்! 1985 ஆம் ஆண்டு, முதன் முதலில் காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி மாநகருக்கு எங்கள் ஜாகை மாற்றப்பெற்றது! அப்பா, முனிசிபல் பொறியாளராய் இருந்தவர், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாற்றம் பெற்றார்! அப்பாவுக்கு ஒரு பழக்கம். எங்கெல்லாம் அவருக்கு மாற்றல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எங்களையும் உடன் கூட்டிக்கொண்டு சென்று விடுவார்! திருச்சி வரும் முன்னர், நான் காரைக்குடி, மார்த்தாண்டம், சென்னை அம்பத்தூர், தேவகோட்டை என்றெல்லாம் சுற்றியிருக்கிறேன்! அப்பாவுக்கு நன்றி! நான் ஒரு கலா ரசிகனாய் இருப்பதற்கு ஒருவேளை இது கூட அச்சாரமாய் இருந்திருக்கலாம்! திருச்சியில், முதலில் நாங்கள் செக்கடித் தெருவில், பாப்பாக்கா வீட்டு மாடியில், நான்கு புறமும் சுவர், தலைக்கு மேல் மூங்கில் கீற்று கொட்டகை, தகர டின் தடுப்பு குளியல் மற்றும் கழிவறை, மழை வந்தால் ஆங்காங்கே சொட்டும் தண்ணீரை நிரப்ப அலுமினிய பாத்திரங்கள், வெயில் அடித்தால் தரை எங்கும் ஜொலிக்கும் சூரிய வெளிச்ச வைரங்கள் என ஒரு அட்டகாசமான சூழலில் தான் வாழத் துவங்கினோம்! அந்த வீட்டுக்கு வராத நண்பர்களும், உறவினர்களும் இல்லை; அந்த வீட்ட

ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன?

Image
ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன? இடுகை எழுதும் எல்லோருக்கும் வணக்கம்! இவ்விடுகையின் நோக்கம் பெரிதாய் ஒன்றும் இல்லை! ஆனால் ஏதும் இல்லாமலும் இல்லை! இடுகை எழுதும் அவசியம் என்ன? என என்னையே நான் கேட்டுக்கொள்ளும் அவசியம் வந்தபடியால் இவ்விடுகை எழுதியாக வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்! காரணம் சொல்லும் அளவுக்கு காரணங்கள் இல்லாது போனாலும், ஏதாவது ஒரு காரணம் கிடைக்காது போய்விடாதா என்ன? தினமும் ஒன்று என்றது போயி, வாரம் கட்டாயம் ஒன்று என்று முடிவெடுத்து, கடைசியில் கண்டிப்பாக மாதத்திற்கு இருமுறை என்றாகி, இப்பொழுது, நண்பன் ஜோ, "மவனே, எழுதுறியா இல்லையா?" என்று கொலை மிரட்டல் விடுத்ததும், எழுதியே தீர்வது என்று முடிவு எடுத்ததும், மண்டையில் ஒரு மண்ணும் உதிக்காததால் ஏற்பட்ட விபத்து, இவ்விடுகை! ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன?

ஆந்திர முதல்வர் YSR ரெட்டி எங்கே?

Image
ஆந்திர முதல்வர் YSR ரெட்டி எங்கே? நேற்று காலை ஒன்பது மணியிலிருந்து மாயமான YSR ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் இந்தியா ராணுவமும் ஆந்திர அரசும் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கும் இந்த பொழுதில், அவருக்காகவும், அவருடன் பயணித்த 2 விமானிகள், 2 அதிகாரிகள் ஆகியோரது நலத்துக்காகவும், நாம் அனைவரும் ஒருமித்த இந்திய உணர்வோடு, பிரார்த்திப்போம்!

மறக்க இயலா விநாயகர் சதுர்த்தி!

Image
இந்த இடுகையை நான் இன்றைய அதிகாலை மணி மூன்று முப்பதுக்கு எழுதத் துவங்குகிறேன். அயர்ந்து தூங்கும் என் மனைவியும் மகனும் இந்த விநாயகர் சதுர்த்திக்கு என்னுடன் சென்னையில் இருக்கின்றனர். வருடம் தவறாமல் இந்த பண்டிகை வந்து போனாலும், சற்றேறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் எல்லோரும் திருச்சியில் வசித்து வந்த பொழுது வந்த ஒரு விநாயகர் சதுர்த்தியை என்னால் மறக்க இயலாது. எங்களுக்கு மலைக்கோட்டைக்கு மிக அருகில், தாயுமானவர் சுவாமி கோவிலின் வெளிப் பிரகாரத்தில் அப்போது வீடு இருந்தது. நான் பத்தாம் வகுப்பு படித்து வந்தேன். மறு நாள், பண்டிகை என்றால், முதல் நாள் அதன் தாக்கம் எங்கெங்கும் களைகட்டி இருக்கும்! காவிரி ஆற்றுப் படுகையிலிருந்து, களிமண் எடுத்து வரப்பட்டு வீதியோரங்களில், சிறிதும் பெரிதுமாக, எல்லா அளவுகளிலும், பிள்ளையார் உருவாகி கொண்டு இருப்பார்! அவருக்கு, யார் அவரை உருவாக்குகிறார்கள் என்றெல்லாம் கவலை கிடையாது. ஒரு பிடி களிமண், யானை முகம், காலில் ஒரு மூஞ்சுறு, கைகளில் மோதகம், எருக்கம்பூ மாலை, அருகம்புல் போதும், பிள்ளையார் ரெடி! வருடம் முழுமையும் டவுன் ஸ்டேசனுக்கு பின்புறம், சீந்துவார

அம்பாசமு(ரி)த்திரம்!

Image
சொர்க்கம் எங்கே என்று தேடி செல்வது, அம்பாசமுத்திரம் செல்லாதவர்கள் செய்யும் வேலை! நெல்லை மாவட்டத்தில் ஊர்ப்பெண்டுகள் "அம்பை" என்று செல்லமாக சொல்லக்கேட்கையில், வரும் சுகமே ஒரு அலாதி! வானுயர்ந்த சோலைகளும், தாமிரபரணி ஆற்றின் சலசலப்பும், ஆங்கிலேயர்களின் அழகிய இரும்புப் பாலங்களும், இயற்கையின் எழில் கொஞ்சும் இயல்புடன், எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென, கம்பளம் விரித்தாற்போல் வயல்வெளிகளும், மரங்களின் அடர்த்தியும், சொரிமுத்தையன் கோவிலும், வீ கே புரமும், அகஸ்தியர் அருவியும், பாபநாசம் சிவன் சன்னதியும், இன்னும் சிலவும், விட்டுபோனப் பலவும், மனதில் அழியாமல் ஒட்டிகொண்டுவிடக்கூடிய விஷயங்கள்! நகரத்து அவசரங்கள் புளித்து போகும் போது, நாகரிகத் தேடல்கள் முடிவிலிகளாய் மாறும் போது, நம் சந்ததிகள் சுபிக்ஷம் பெற, கடவுளின் அநுக்ரஹம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை! அம்பாசமுத்திரம் சென்று வாருங்கள்! அது ஒரு இயற்கையின் அக்ஷயபாத்திரம்!

நீங்குமோ காரை மாநகரின் நினைவுகள்!

Image
அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். நாங்கள் எல்லாம் காரைக்குடியில் வசித்து வந்தோம். அப்பா நகராட்சிப் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நகரத்தார் வாழும் ஊரென்பதால் திரும்பிய பக்கமெல்லாம் செட்டியார் வீடுகள், அரண்மனைகள் போல் கம்பீரமாய் வீதி எங்குமிருக்கும். எங்கள் வீடும் அப்படிப்பட்ட இரு அரண்மனைகளுக்கு இடையே, ஒரு மினி பங்களா போல இருந்ததாக ஞாபகம். கொப்புடையம்மன் கோவில், குஞ்சு கிருஷ்ணன் பிள்ளை வீடு, நடராஜா தியேட்டர், மேலவூரணி, LFRC school என சொல்லிக் கொண்டே போகலாம். அப்பா ஒரு பச்சைக் கலர் லாம்ப்ரடா ஸ்கூட்டர் வைத்திருந்தார். எங்கள் நாலு பேரையும் எப்போவாவது ஒரு முறை அதில் உக்கார வைத்துக் கொண்டு, சினிமாவுக்கு கூட்டிப் போவார். அப்படியொரு முறை நாங்கள் எல்லோரும் அதில் பயணித்தபோது, அம்மா சேலை சக்கரத்தில் மாட்டி கீழே விழுந்து கைகளில் சிராய்ப்பு, ரத்தம் வழிய வழிய, என்னுடைய சினிமா கனவு தகர்ந்து போனது. நான் இரவு முழுதும் அழுது கொண்டிருந்தது இன்னும் நினைவில் பசுமையாய்... எங்கள் அடுத்த வீட்டில் எப்போதும் ஒரு கொலுசுச் சத்தமும், கலகலவென சிரிப்பொலியும், மல்லிகை வாசமுமென கவிதையாய் ஒரு சூழல் நிலவ

அக்னி குஞ்சொன்று கண்டேன்!

Image
அக்னி குஞ்சொன்று கண்டேன்! இன்று அதிகாலை என் வீட்டின் முகவறையில் தங்க ஜ்வாலையாக அக்னி குஞ்சொன்று பிரவேசிக்கக் கண்டேன்! கண்டதும் பேரானந்தம் கொண்டேன்! கைகளினில் அள்ளி மேனி முழுமையும் பூசிக்கொண்டேன்! முப்பாட்டன் பாரதியே என்னைத் தழுவியதாய் எண்ணி, உடல் சிலிர்த்து போனேன்! சமூக கோபங்கள் ரணங்களாய் எரித்தாலும், அவன் தழுவியதில் அவையாவும் சாம்பலாய் பறக்கக் கண்டேன்! ஆம், பாரதி ஒரு அமரன்! அவன் கண்டெடுத்த அக்னி குஞ்சொன்றை பார்க்கப் பெற்றதனால், நானும் அவனுடன் சேர்ந்து அமரனாகிப் போனேன்!

யார் இவர்கள்?

Image
யார் இவர்கள்? களங்கமில்லா இந்த பிஞ்சுள்ளங்களின் சாதனைகள் யாவை? இந்த பிரபஞ்சம் இவர்களுக்கு நாளை பணிக்கவிருப்பது யாது? இதைப் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலைகள் இல்லை! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்! ஆத்மார்த்தமான இவர்கள்தம் மகிழ்ச்சிதனில் மூழ்கி, வாருங்கள், கவலைகளை மறப்போம்! தற்காலிகமாய்...!

சென்னையில் ஒரு மழைக்காலம்!

Image
தலைப்பை படிக்கும் போதே சுகமாயிருக்கும் போது, அனுபவித்தால் எப்படி இருக்கும், நண்பர்களே !!! ஆம், சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இன்று வருண பகவானின் கருணையினால் விடுமுறை கொடுக்கப்பட்டு விட்டது! சென்னையில் இன்று மழை கொட்டியது! வீதியெங்கும் வெள்ளம் (சாக்கடை) பெருகி ஓடியது !

கடவுள் இருக்கிறார்!

Image
ஒவ்வொரு முறை நான் வீழும் போதும் என்னை மீண்டெழச் செய்யும் என் நம்பிக்கை டானிக்,மகன் அகிலனின் ஒரு உத்வேகச் சிரிப்பு! கடவுள்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை; அவர்கள் நம் குழந்தைகளாய் நம்முடனே இருக்கத்தான் செய்கிறார்கள்!

உள்ளேன் அய்யா!

Image
வணக்கம். இது எனது முதல் இடுகை. கன்னி முயற்சி என்பதால் பிழையேதும் இருப்பின் மன்னிக்கவும். இன்று நான் மீண்டும் பிறந்ததை உணரும் தருவாயில், என்னில் என்னை மீண்டும் கண்டுகொண்டதை அறியும் பொழுதில், ஏறக்குறைய வெற்றி பெற்று விட்டேன் என்றே சொல்லலாம்! "பதிவுதனில் இணைவதன் வாயிலாய்... மத்தளத்தின் ஒலி, வெறும் சத்தமாய் இல்லாமல், இசையாக இருக்க வேண்டுமென்பதே எனதாசை! " .... மீண்டும் ஒலிக்கும்!