Posts

திருச்சிராப்பள்ளி - சரித்திரம் சொல்லும் பூகோளம் !

Image
நான்பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, இருந்தமண்! அதன்வாசம், நேசம், தாக்கம், இல்லாமல்நான்இல்லை! அதனைப்பற்றியநினைவுகளில்லயிக்கும்போதெல்லாம் ஏதோஒருஇனம்புரியாததோர்சிலிர்ப்பு!
ஒருமண்ணின்பெருமையினை அதன்பாரம்பரியமும், கலாச்சாரமும்தான்பறைசாற்றவேண்டும்என்பதில்லை! அனுபவித்த

ஸ்ருதி !

ஸ்ருதி !

பூவை பறித்தால் தான் என்றில்லை,
பறிக்காமல் போனாலும் வாடித் தான் போகும்!

பூச்சூடும் பாவை உன் முகம் மட்டும்
உயிர் பறிக்கப்பட்டும் வாடாமல் இருப்பதென்ன?

எதை மறைத்தாய் எதை புதைத்தாய் ஆள் மனதில் புரியவில்லை!
உனைப் புதைக்க இன்று கூடியுள்ளோம் காரணம் தெரியவில்லை!

பருவப் பெண் நீ சாகும் பருவமா இது!
உருவக் குறைச் சொல்ல உன்னிடத்தில் இருப்பது தான் ஏது!

தெய்வக் குழந்தையடி உன்னை பறி கொடுத்து
தெய்வக் குற்றம் ஆனதென்னை?

கள்ளம் கபடம் இல்லா உன் சிரிப்பை காலன்
கொள்ளை கொண்டு போனதென்ன?

யார் செய்த பிழைக்கோ நீ வந்து பிறந்தாய்!
ஊர் செய்த பிழைக்கு உன் உயிரையும் துறந்தாய்!

நாகரிகக் கோமாளிகள் வாழும் இவ்வுலகில்
நாகரிகம் சற்றே மறந்திருந்தாய்!

கண்ணில் ஆயிரம் கனாக்களுடன் எங்களைச் சுற்றி சுற்றி வந்தாய்!
வண்ணத்துப்பூச்சி போல் சிறகடித்து எங்கோ பறந்து சென்றாய்!

மண்ணுக்கு மரம் பாரமா இல்லை நிழல் தான் பாரமா !
யாருக்கு நீ பாரம் என எங்களைத் தவிக்க விட்டாய் பாரம்மா !

காலங்கள் கனியும் உன் கோலங்கள் மாறும் என்று காத்து இருந்தோம்!
கோலங்கள் அழியத்தான் வேண்டும் என்று விதி மதித்து
சொல்லாமல் சொல்லிச் சென்றாயோ?

மனிதம் மறந்து  ப…

விண்ணைத் தாண்டி வருவாளா?

Image
தங்க நிலா...!
கும்மிருட்டு...!
முடிவிலா பாதை!
பயணம் வெகுதூரம் ....!
கைகோர்த்து செல்ல
தேவை ஒரு காதலி !
அவள் விண்ணைத் தாண்டி வருவாளா??
இவ்விரவின் நிசப்தம்தனை
தன் பெருமூச்சுக் காற்றால் கலைப்பாளா?
காத்திருக்கிறேன்!
யாருக்குத் தெரியும் ??!!
சற்று நேரத்தில்
நிலவின் கதவு திறக்ககலாம்...!
என்னவள் அதிலிருந்து தோன்றலாம்!
நம்பிக்கை தானே வாழ்க்கை!

புரட்சி வெடிக்கட்டும்!

Image
இதோ ஒரு புரட்சிக்கான விதை விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது !
ஒரு எழுச்சிச்சிக்கான முன்னோட்டம் விரியத் தொடங்கியிருக்கிறது!
மாற்றத்திற்கான அச்சாரம் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது!
தமிழன் இனியும் இளிச்சவாயன் இல்லை
என உலகம் உணரத் துவங்கிவிட்டது!
தமிழன் குட்ட குட்ட குனியும் மானெங்கெட்டவனில்லை
என பாரே பார்க்கத் தயாராகிவிட்டது!
தமிழனின் கலாசாரத்தைப் பாதுகாக்க இனி யாரும் தேவையில்லை
என வீரத் தமிழனின் பிள்ளைகள் அகிம்சை வழியில்
தானே தன்னெழுச்சியாய் புறப்பட்டு விட்டனர்!
"சல்லிக்கட்டு" எனும் ஒரு ஒற்றைப்புள்ளியில் குவிந்து
இன்று மாற்றத்தை நோக்கி இளைய சமுதாயம்
வீறு நடை போட்டுக் கிளம்பி விட்டது!
"ஏறு தழுவுதல்" ஏதோ தமிழனின் பாரம்பரிய விளையாட்டு மட்டுமில்லை
சமூக அவலங்களை தட்டிக் கேட்க தன்னை தயார்படுத்தும்
"மல்லு கட்டுதல்" என்றோ நினைக்க தோன்றுகின்றது ?
மீசை வைத்த பாரதி வாழ்ந்த தேசத்தில்
இன்னும் ரோசம் மிஞ்சி இருக்கத்தான் செய்கிறது!
நாளையின் விடியல் நமக்கு நல்ல சேதியைத் தரட்டும்!
புரட்சியின் வீரியம் எங்கெங்கும் பரவட்டும்!
வாழ்க தமிழன் பண்பாடு!  வெல்க அவனது சீரிய நோக்கம்!
தோழர் முரளி ...!

Image
தோழர் முரளி ...!

மிஞ்சிப் போனால் என்ன ஒரு வருடம் இருக்குமா..?
எனக்கு அவரும்; அவருக்கு நானும் அறிமுகமாகி...!
ஏதோ பல வருடப் பழக்கம்போல் உணர்வு மேலிடத்தான் செய்கிறது,
ஒவ்வொரு முறை அவரிடத்து பேசும் போதும், பழகும் போதும்!

நண்பர்கள், நல விரும்பிகள் என எல்லோரையும் போல
சிநேகிதர்கள் பலர் என் வாழ்க்கையிலும் வந்து போனாலும்,
பெரியதாய் சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு நட்பு வட்டாரம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை!
அதற்கு காரணமாக இந்தத் தலைமுறை சங்கடங்களை
குற்றம் சொல்வதா இல்லை சொல்லாமல் விடுவதா? புரியவில்லை !
பால்ய காலத்திலிருந்தே விரல் விட்டு
எண்ணி விடும் அளவுக்குத் தான் நண்பர்கள்  எனக்கு!
பள்ளி பிராயத்திலிருந்தே, நண்பன் ஜோ!
கல்லூரி காலத்திலிருந்து, நண்பன் பிராங்க்ளின்,
பணியிடத்தில், நண்பர் ராஜேஷ்!
இப்பொழுது வசிப்பிடத்தில் தோழர் முரளி!

எங்களது முதல் சந்திப்பு,
இன்னும் எனக்கு பசுமையாய் நினைவிருக்கிறது...!
அது ஒரு சிறு தூறல் பெய்து கொண்டிருந்த முன்பனிக் காலம்!
வசிக்கும் குடியிருப்பின் பொதுப் பணிகளில்
என்னை அதிகமாய் ஈடுபடுத்திக்கொண்டிருந்த காலம்!
கண்காணிப்பு குழுவுடன் தீவிர விவாதத்தில் நான்!
கண்களில் எச…

கபாலி

Image
வெகுஜன, இணைய, பத்திரிக்கை மற்றும் வாய்ச்சொல்
விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு
திறந்த மனதோடு கபாலி படம் பார்க்க நேற்றுச் சென்றிருந்தேன்!
கனத்த மனதோடு திரும்பி வந்தேன்!

இப்படி ரஜினியைப் பார்த்து தான்
எவ்வளவு நாளாயிற்று!
சிறையில் புத்தகம் படிப்பதில் துவங்கி
இறுதியில் நிறைவாய் தன் குடும்பத்தினருடன்
மனதிற்குப் பிடித்தமான வாழ்க்கையைத் வாழத் துவங்கும் வரை
எவ்வளவு இயல்பாய், நேர்மையாய், யதார்த்தமாய்
அந்த கதாபாத்திரம் பயணிக்கிறது!!
"தன் அன்பு மனைவியைத் தேடுதல்"
எனும் ஒற்றை நோக்கத்திலிருந்து துளியும் பிறழாமல்
கண்ணில் தேடலையும் நெஞ்சில் வலியையும்
நடை உடை பாவனையில் மிடுக்கையும் தவற விடாது
அடுத்தடுத்த காட்சிகளில்
தன்னுடன் இருப்பவர்கள் முதல்
தன்னை திரையில் பார்க்க வந்திருக்கும் ரசிகர்கள் வரை
அனைவரையும் தன்னோடு அரவணைத்துச் செல்ல
வைத்திருக்கும் படியான ஒரு ஈர்ப்பினை
படத்தின் ஜீவநாடியாய் உலவ விட்டிருப்பத்தில்
இயக்குனர் பா ரஞ்சித் தன்னை அடுத்த கட்டத்திற்கு
எடுத்துச் சென்றிருப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்
என்றால் அது மிகையில்லை!

இது ரஜினி படமா இல்லை ரஞ்சித்தின் படமா என்றால்
என்னைப் பொறுத்த வரை…

ஏலே மக்கா...!

Image
"ஆச்சிக்கு வயது 97 நடக்கிறது!
இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு முன்பு போல முடிவதில்லை!
கண்கள் ஒத்துத்துழைத்தாலும் காதுகள்...?
அடிக்கடி "சிவ சிவா"வைத் தவிர
வாயும் அதிகம் வார்த்தைகளை உதிர்ப்பதில்லை!
அவர்களால் முடிந்தால் அழைத்து செல்லுங்கள்!"
மாமா சென்ற திங்கள் சொன்னது இன்னமும்
என் காதுகளில் ஒலிக்கத் தான் செய்கிறது!

இருந்தாலும் பிடிவாதமாய் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தேன்!
அப்போது தெரியாது இதுவே ஆச்சியின் இறுதி வருகை என்று..!
என் வீட்டில் அவர்கள் கடைசியாக இருந்து சென்ற
அந்த இரெண்டு நாட்களில்
அவர்கள் நின்றதும், நடந்ததும், பேசிய ஓரிரு சொற்களும்
பசுமையாய் ஞாபகத்தில் இன்னும் இருக்கிறது!
தலையில் பொடுகோ அல்லது பேனோ
அவர்களை அதிகம் படுத்தி இருக்க வேண்டும்,
"கோலம் இங்கே கொஞ்சம் தலையைப் பாரு"
அரை ஜீவனாய் தன் மகள் பெயர் சொல்லி அவர்கள் ஒலிக்க,
நெற்றிச் சுருக்கங்களை இறுக்கமாய்
பற்றிக் கொண்டிருக்கும் விபூதி,
விடாமல் தலையை சொறிவதால்
சற்றே கொஞ்சம் மங்கித் தெரிந்தது!

ஆச்சி ஒரு வைராக்கிய பெண்மணி!
தெற்கில் குமரி மாவட்டத்தில் பிறந்ததனாலோ என்னவோ
குமரி அன்னையின் பெயர் "பகவதி&q…