Saturday, December 4, 2010

"கார்"காலம்
புலி வருது; புலி வருது போல்,
இந்தோ வருது; அந்தோ வருதுன்னு,
எனக்கும் கொஞ்ச நாள்ல காரும் வரத்தான் போகிறது போல!
நினச்சா பெருமையா இருந்தாலும்;
கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது முக்கியம்னு உள்ளூர மனசு சொன்னாலும்,
வாய்னு ஒன்ணு கீதே!
அது சும்மா கிடக்காம, சாதி சனம் எல்லார் கையிலயும் சொல்லிக்கினு தான் திரியுது!
அல்லாம் சரி, நிஜமாலுமே காரு வந்துட்டா...!
நம்ம ஆதம் தெருவுல,
எங்கே கொண்டு போயி அப்பால நிறுத்தறதுன்னு,
ஒரே கவலையா கீதுபா!
பேசாம காரு பார்கிங்கோட ஒரு வீட்ட பாத்துடலாம்னா,
வாடகை மவனே எக்குத்தப்பா கீது!
இன்னா பண்றது???
நயினா, யாராவது ஒரு நல்ல ஐடியா கொடுங்கபா!
புண்ணியமா போகும்!
"நயினா, காரு தானே வேணும், இந்தா பிடின்னு"
மவன் அகிலன் ஒரு விளையாட்டு கார கையில கொடுக்கவும்,
நமக்கு லேசா மயக்கம் தெளிஞ்ச மாதிரி இருந்துச்சு!
மெய்யாலவும், காரு வரத்தான் போகுதா?????

Wednesday, October 13, 2010

தியோசொபிகல் சொசைடியில் ஒரு நாள்...!
தியோசொபிகல் சொசைடியில் ஒரு நாள்...!

நேற்று சென்னை அடையாரில் உள்ள தியோசொபிகல் சொசைட்டிக்கு ஒரு பணி நிமித்தமாகி முதன் முறையாகச் சென்று வந்தேன்! என்னை முற்றிலுமாகத் தொலைத்து வந்தேன்! SEEING IS BELIEVING என்று சொல்வார்கள்! அது 100 சதவிகிதம் உண்மை! நகரச் சந்தடிகளுக்கு நடுவே, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், இயற்கை, அதன் பொலிவு மாறாமல் ரம்மியமாய் நிரம்பி வழிந்து கொண்டு, எங்கும் மரச் செரிவுகளும், அடர் பசுமைகளும் என அமைதியாய் ஒரு வனச் செழுமை அந்த இடத்தில் வியாபித்து இருந்ததைப் பார்த்து, என்னை முற்றிலுமாகத் தொலைத்து வந்தேன் என்பேன்! சென்னையில் எத்தனையோ இடங்கள் பார்ப்பதற்கு இருப்பினும், இப்படி ஒரு அதிசயமும் உள்ளதை நினைக்கையில் பெருமையாகவும், நிறைவாகவும் இருக்கத்தான் செய்கிறது!

http://www.ts-adyar.org/ - இந்த வலைத்தளம் உங்களை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை!

THERE IS NO RELIGION HIGHER THAN TRUTH - உண்மை தானே???!!

Monday, September 20, 2010

இளைப்பாறல்கள்!


கொஞ்சம் தேநீர்!
நிறைய ஆசுவாசம்!
பொங்கிய வியர்வை
அடங்கும்! புத்துணர்வு பிறக்கும்!
நாளை வரும்! நல் வேளை வரும்!
நலமாய் நாலு சேதி வரும்!
நம்பிக்கை தானே வாழ்க்கை!
இளைப்பாறல்கள்!
இனிதே; இனிதே!

Saturday, January 16, 2010


நாலு நாள் காலி; பாக்க போலாம் ஜோலி!!!!இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு,
இந்தோ வந்திருச்சி, நாளையிலிருந்து ஜாலியா
நாலு நாள் பொங்கல் லீவுன்னு,
அவனவன் ஊரப்பாத்து போனாலும்,
இன்னைக்கு ஞாயித்துக்கிழமை,
மவனே லேசா வவுறு கலக்கல?
"நாலு நாள் காலி, பாக்க போலாம் ஜோலின்னு"
பேசாம கம்ம்னு கிளம்பி
வந்துடுங்கன்னா!
பொங்கல் இதோ இன்னும் 362 நாட்கள்ல ஓடி வந்துடப் போகுது!
மறுபடியும் ஜாலி தான்!

ஆஞா...!

கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...