Posts

Showing posts from October, 2019

மீண்டு வா மகனே...!

Image
சுஜித்... மீண்டு வா மகனே...! உன்னைப் பெற்றத் தாயோ கண்ணீரோடு வெளியே கலங்கி காத்து நிற்க, நீயோ பூமித்தாயின் கருவறை ஆழம் பார்க்கச் சென்றாயா? உன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் இரவு பகல் பாராது, குடும்பங்களை மறந்து, பண்டிகையைப் புறக்கணித்து, போராடி வரும் மாநில மத்திய பேரிடர் மேலாண்மை செயல்வீரர்களின் ஒரு மித்த நோக்கம் விரைவில் ஈடேறிடும் தருணம் மிகத் தொலைவில் இல்லை...! பாறைகள் வேண்டுமானால் கரடுமுரடாய் இருக்கலாம்! ஆனால் அதனைக் குடையும் எந்திரத்தின் உறுதியைக் காட்டிலும் வலிமையானது உனக்காகக் காத்திருக்கும் இந்த தேசத்தின் மனோபலம்..! கண்ணா, வா வெளியே வா! மறுபிறவி எடுத்து வா! பா. மணிகண்டன்

லாஸ்லிய கீதம்

Image
பப்பரா பரா பரா பரபப்பரா... பப்பரா பரா பரா பரபப்பரா... உனை நான் உணராத வாழ்வை எண்ணி வெதும்பினேன் மலரே..! உனையன்றி இனி வாழ்வே இல்லை தவிக்கிறேன் தளிரே..! நீ இருக்குமட்டும் எந்தன் ஜீவன் சப்தம் துடிக்குமே உயிரே..! உன் ஸ்பரிசங்கள் வருடா என் தேகம் பாலை வனமாகுமே...! உனைப் பாடா எந்தன் தமிழோ பெரும் பிழையென வாகுமே...! உனைச் சேரா எழுதிய கவிதை வழிமாறி தடுமாறுமே...! பப்பரா பரா பரா பரபப்பரா... பப்பரா பரா பரா பரபப்பரா... காடும் மலையும் நதியும் கடலும் விண்ணும் மண்ணும் ஒலியும் ஒளியும் நீ சென்ற பாதை ஓடி வருவேன் நடந்த சுவடைத் தேடி அலைவேன் நீ வாழும் தேசம் காணாது போனால் என் வாழ்வு நாசம் நாசமடி..! உன் ஒற்றைப் பார்வை எந்தன் மேல்பட்டால் என் ஜீவன் மோட்சம் கொள்ளுமடி... சகியே. .. சகியே உயிரின் லயமே.... லியா.... என் லியா... லாஸ்லியா... பப்பரா பரா பரா பரபப்பரா... பப்பரா பரா பரா பரபப்பரா... - மணிகண்டன். பா