Posts

Showing posts from 2018

காதலியெனும் சிநேகிதியே...!

Image
காதலியெனும் என் சிநேகிதியே, ததும்பும் உன் மோகம்தனை ஒற்றைக் குவியப் புள்ளியில் உணர்ந்தவனாய், காமம் தலைக்கேறி  மேனிபடர்ந்து, ஆடை களைந்து நாணம் அணிவித்து, பிரளயமாய் பெருகி வெளியேறும் உன் வியர்வைக் கடலில் மூழ்கி சுட்டெரிக்கும் காதல் தணலை அவித்துக் கொள்ள அஞ்சாது  வீறு கொண்டெழுந்த  என் செங்கோலின் திடம் அறியும் முடிவிலா உன் சுரங்கப் பாதையில் என்னைத் தொலைத்து கதறி அழுதுச் சிந்திய என் உயிர்த் துளிகளாய் என்னுள் அடங்க மறுத்து பீறிட்ட  காதலைக் கொட்டியதும்  என் செவி வழிக் கேட்ட உன் அய்ர்ச்சியின் வலியுரைக்க,  மயக்கம் தெளிந்து  என்னை விடுவித்துக் கொள்ள  முற்படுகையில்,  மீண்டும் என்னை  இழுத்து அணைத்து  நெற்றியின் மையமாய் நீ அழுத்திக் கொடுத்த  ஒற்றை முத்தத்தில்  நான் மொத்தமாய் செத்துப் போனேனடி பெண்ணே, என்னை மறுபடியும் உயிர்ப்பிக்க விழைகிறேன்! விலையாக என்னையேத் தருகிறேன்! ஏற்றுக் கொள்! Reply Forward

'மழை'யாளக் கரையோரம்....!

Image
மலையாளக் கரையோரம் இன்று மழை 'ஆள'க் கலங்கி நிற்க, கடவுளின் சொந்த நாடு, இன்று முகவரியைத் தொலைத்திருக்க, பிரபஞ்சத்தின் பேய்மழையும் மொத்தமாய் கொட்டித் தீர்க்க, திரும்பிய திசையெல்லாம் கண்ணீர்த் தீவுகளாய்த் தத்தளிக்க, கனவுப் பள்ளத்தாக்கு நடத்திய மரண வேட்டை காண சகிக்காமல் மனம் மரத்து அயர்ந்த வேளையில், தூரத்தில் கேரள சகோதரி ஒருத்தி 'ரக்‌ஷிக்கனும் தெய்வமே' எனும் விசும்பும் குரல் கேட்டு விழித்துப் பார்க்க,   அது 'கனவல்ல நிஜம்' என்றுறைக்க, மனம் பதைத்து, சிதைந்து போனேன்!   ஈவு இரக்கமற்றதா இயற்கை? யாரைக் கேட்பது, புரியவில்லை!

கலைஞர் ...!

Image
இதோ ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது! தமிழக அரசியல் உண்மையில் இன்று அநாதையாகிவிட்டது! கலாமண்டபம் தன் செல்ல நாயகனை இழந்து விட்டது! தமிழ்த்தாய் தன் தலைமகனை காலனுக்கு தாரை வார்த்துவிட்டாள்! ஒரே ஒரு சூரியன் தான்! ஒரே ஒரு சந்திரன் தான்! அதுபோல   ஒரே ஒரு கலைஞர் தான்! மரணம் இன்று அவரைத் தழுவியிருந்தாலும்   அவர் புகழ் இந்த மண்ணில் என்றென்றும் சாகாவரம் பெற்றிருக்கும்!

யார் இந்த தாய்?

Image
யார் இந்த தாய்?   என்ன நினைக்கின்றாள் இப்பொழுது ?   யாருக்காக காத்திருக்கிறாள்?யாரால் புறக்கணிக்கப்பட்டாள்? நாளை வரும்; நல் சேதி வரும் எனும் நம்பிக்கை உந்துதலில் இன்னும் இவள் போல் எத்தனையோ முகமறியா தாய்மார்கள் ஆங்காங்கே தெருவோரங்களில் நாம் தினசரி கடந்து சென்றாலும் என்றாவது ஓர் நாள்   அவர்களை நினைவு கூற இச்சிறு கவிதை எனக்குதவட்டும்!