புரட்சி வெடிக்கட்டும்!



இதோ ஒரு புரட்சிக்கான விதை விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது !
ஒரு எழுச்சிச்சிக்கான முன்னோட்டம் விரியத் தொடங்கியிருக்கிறது!
மாற்றத்திற்கான அச்சாரம் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது!
தமிழன் இனியும் இளிச்சவாயன் இல்லை
என உலகம் உணரத் துவங்கிவிட்டது!
தமிழன் குட்ட குட்ட குனியும் மானெங்கெட்டவனில்லை
என பாரே பார்க்கத் தயாராகிவிட்டது!
தமிழனின் கலாசாரத்தைப் பாதுகாக்க இனி யாரும் தேவையில்லை
என வீரத் தமிழனின் பிள்ளைகள் அகிம்சை வழியில்
தானே தன்னெழுச்சியாய் புறப்பட்டு விட்டனர்!
"சல்லிக்கட்டு" எனும் ஒரு ஒற்றைப்புள்ளியில் குவிந்து
இன்று மாற்றத்தை நோக்கி இளைய சமுதாயம்
வீறு நடை போட்டுக் கிளம்பி விட்டது!
"ஏறு தழுவுதல்" ஏதோ தமிழனின் பாரம்பரிய விளையாட்டு மட்டுமில்லை
சமூக அவலங்களை தட்டிக் கேட்க தன்னை தயார்படுத்தும்
"மல்லு கட்டுதல்" என்றோ நினைக்க தோன்றுகின்றது ?
மீசை வைத்த பாரதி வாழ்ந்த தேசத்தில்
இன்னும் ரோசம் மிஞ்சி இருக்கத்தான் செய்கிறது!
நாளையின் விடியல் நமக்கு நல்ல சேதியைத் தரட்டும்!
புரட்சியின் வீரியம் எங்கெங்கும் பரவட்டும்!
வாழ்க தமிழன் பண்பாடு!  வெல்க அவனது சீரிய நோக்கம்!




Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்