Posts

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் என் காதலே! ❤️

Image
  என் அன்பான மனோ ❤️ என் வாழ்வின் அழகான தருணங்கள் அனைத்திலும், அவற்றின் அர்த்தமாய் நீ இருக்கிறாய்! இன்பத்திலும் துன்பத்திலும், சிரிப்பிலும் கண்ணீரிலும், என் உற்ற தோழியாய், உறுதுணையாய், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரமாய் நீ இருக்கிறாய்! நம் பயணம் எப்போதும் பூக்கள் நிறைந்த பாதையாக இருந்ததில்லை, சில தடைகள், சில சோதனைகள், சில கண்ணீர்த் துளிகள்... ஆனாலும், உன் கரம் பிடித்து நான் கடந்த ஒவ்வொரு அடியும் என் வாழ்வின் அழகான நினைவுகளாகவே மாறின! என்னை இத்தனை மென்மையாய் நேசித்ததற்கும், என் குறைகளைப் பொறுமையுடன் ஏற்றதற்கும், எதையும் எதிர்பாராமல் என்னுடன் இருந்ததற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, நீ நீயாகவே இருப்பதற்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்! நாளை நமக்கு என்ன தரப்போகிறது என்று தெரியாது, ஆனால் நாளையையும் உன் கரம் பிடித்தே சந்திக்க விரும்புகிறேன். இதுவரை நாம் பகிர்ந்த ஒவ்வொரு நாளையும் நேசித்ததைப் போல, இனி வரும் ஒவ்வொரு நாளையும் உன்னோடு வாழ விரும்புகிறேன்! இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் என் காதலே! ❤️ நாம் இணைந்து உருவாக்கிய இந்த வாழ்க்கைக்கும், நாம் சேர்ந்து கட்டியெழுப்பிய இந்த அழகான உறவிற்கும், ...

நேபாள சேதம், பூபாள சோகம்..!

Image
  ஆகஸ்ட் மாதம் 26 தேதி  அன்று காலை  எல்லோருக்கும் போலவே  உள்ளூர்வாசிகள்  சுற்றுலாப் பயணிகள்  அந்நிய நாட்டினர்  அரசு ஊழியர் என்று  நேபாள் - சீனா எல்லைப் பகுதியில்  குழுமியிருந்த அவர்களுக்கும் விடிந்திருக்கும்...! கிராங் சோதனை மையத்தின்  இருபுறமும், முன்னும் பின்னும், அழகிய பனிமலைகள்  ஆர்ப்பரித்து ஓடும் ஆறு என்று  வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்க ஆங்கே தொலைவில்  பின்னே ஓங்கி உயிர்ந்த  பனிமலையின் ஒரு பகுதி  காலநிலை மாற்றத்தால்  கடல் மட்டத்திலிருந்து  ஐயாயிரம் மீட்டருக்கும் மேலிருந்து  தானாக பெயர்ந்து  கீழே 2000 மீட்டர் பள்ளத்தில்  திரிசூலி நதிமுலத்தில்  செங்குத்தாய் விழ பொங்கிப் பிரளயமாய்  வெளிப்பட்டதோர் ஆழிப் பேரலை கண்ணிமைக்கும் நேரத்தில்  விஸ்வரூபம் எடுத்து  நதியின் கரை நெடுகிலும்  பன்னெடுங்காலமாய் இருந்துவந்த  குடியிருப்புப் பகுதி முழுமைதனையும்  கபளீகரம் செய்து  தன் பெரும்பசியை ஆற்றிக் கொண்டது! எத்தனையோ கனவுகளுடனும்  எதிர்காலத் திட்டங்களுடனும்...

என் இனிய கிரெட்டா...!

Image
  உன்னோட நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்  மரணப் படுக்கையிலும்  மறவாது கிரெட்டாவே...! பத்து வருடங்களுக்கு முன் உன் கொரிய அண்ணன் "வெர்ணா"  நான்கு வருட பந்த பாசத்திலிருந்து எங்களை விட்டு பிரிந்து சென்ற சோகத்தினை சில நாட்களிலேயே அழகிய உன் "செவ்வண்ணச்" சிரிப்பால் மறந்திடச் செய்தாய்...! *என்னால்" இயக்குவதிலிருந்து "தன்னால்" இயங்குபவனாய் ஆன  எந்திரனைப் பெற்ற உன்னை இயக்குவது எவ்வளவு சுலபம் என வந்த சில நாட்களில் சொல்லாமல் சொல்லி எங்களை சொக்க வைத்தாய்...! தென்குமரி, வட திருப்பதி தொடங்கி நெல்லூர், அதிரம்பள்ளி, பெங்களுர் ஆகிய அண்டை மாநிலங்கள் வரை அம்பை, பம்பை என பம்பரமாய்ச் சுழன்று நீ எங்களை கூ(ஓ)ட்டிச் செல்லாத இடம் தான் உண்டோ...? ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிலோமீட்டர்கள் என்கிறது உன் ஓடோமீட்டர்...! வருடங்கள் பத்து ஆயிற்று நீ வந்து என காலம் உணர்த்துகிறது...! ஆனாலும் மனம் அதை ஏனோ ஒத்துக் கொள்ள மறுக்கிறது...! எரிபொருளில் 20 சதவிகிதம் எத்தனாலை அரசாங்கம் படிப்படியாக  கலந்திடத் துணிந்ததால் உன் இதயத்திற்கு அபாயம் என உணரத் துவங்குவதற்கு சாட்சியாக உன் செயல்பாட்டில் சற்றே ...

அடுத்த நொடிப் பொழுதின் ஆச்சர்யங்கள்

Image
எல்லாமும் மாறிப் போகும் ஒரு நொடிப் பொழுதினில்...! வாழ்க்கை எவ்வளவு அழகானாதோ அதைவிடப் பன்மடங்கு  கோரமானதும் கூட..! தங்களது ஆதர்ச நாயகனையும் அவர்கள் வென்று வந்த வெற்றிக் கோப்பையினையும் ஒரு முறையாவது தரிசித்துவிட  கண்களில் ஏக்கத்துடனும் நெஞ்சினில் ஆர்வத்துடனும் பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் பரிதவித்த அந்த 11 உயிர்களுக்குத் தெரியாது  தாம் இன்னும் ஒரு சில மணித் துளிகளில்  ஜன நெருக்கடியில் சிக்கி சிதைந்து சின்னாபின்னமாகி மாயப் போகின்றோம் என்று...! தேனிலவுக்கு வந்த இடத்தில் சிரபுஞ்சி சாரலில் அருவியின் அழகை பார்த்து பரவசமடைந்து கொண்டிருந்த அப்பாவி மாப்பிள்ளைக்குத் தெரியாது நாம் இன்னும் சிறிது நேரத்தில் அக்னி சாட்சியாய் தொட்டு தாலியிட்ட மனைவியின் சதியால் படுகொலை செய்யப்படுவோம் என்று..! லண்டனில் மென்பொருள் பொறியராக ஆறேழு வருடங்கள் பணி செய்து வந்து கொண்டிருந்த தன்னுடன் இந்தியாவில் மருத்துவராய் இருக்கும் தன் மனைவியையும் பணியை ராஜினாமா செய்துவிடச் செய்துவிட்டு அழகிய மூன்று குழந்தைகளுடன் நிரந்தரமாக அங்கேயே குடியேற முடிவு செய்து கனவுகளுடன் ஆனந்தமாய் விமான உட்புறத்தில்  செல்ஃ...

திருப்பள்ளியெழுச்சி

Image
நான் தினமும் காலையில் விழிக்கும் பொழுது... அருகில் நீ இன்னும்  நித்திரை கலையாதிருக்கின்றாய்... கலைந்து கிடக்கும் உன் கேசம்... அதில் முழுவதுமாய் வியாபித்திருக்கும்  பெண்ணே உன் வாசம்...! உன்னை எழுப்ப மனமில்லாமல் உன் முகம் பார்த்து காத்திருப்பேன்.. நான் முழித்தது உணர்ந்து மெல்லிதாய் விழித்தும் விழிக்காமல் கண்களைத் திறந்து மூடிக்கொள்வாய்.. "இன்னும் கொஞ்சம் நேரம்ப்பா" உன் குரல் கொஞ்சலாய் கெஞ்சும்... நெற்றிப் பொட்டு இடம் மாறி இமைதனில் ஒட்டிக் கொண்டிருக்கும்.. சிரித்துக் கொள்வேன்... வறண்டிருக்கும் உன் இதழ்களுக்கு முத்தங்களால் ஈரம் நனைத்திட்டு என்னை மெதுவாய் உன்னிடத்திலிருந்து  விடுவித்திக் கொள்ள முயற்சிப்பேன்... மீண்டும் என்னை  இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு செல்லமாய் வன்முறை செய்கின்றாய்..! என்னை தினசரி  கொல்லாமல் கொல்கின்றாய்..! "தோழியே ....காதலியே...!  போதும் எழுந்திடு..!" எனக் கரையும் உன் காதலனின்  திருப்பள்ளியெழுச்சி  உன் செவிதனில் விழவில்லையா?? நம் காதலின் செய்திகள் தரவில்லையா?? பா. மணிகண்டன்

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

Image
  சமீபத்தில் புதுச்சேரியில்  அரங்கேறிய நிகழ்வு, தலைநகரின் 'நிர்பயா' சம்பவம் விளைவித்த அதிர்வலைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல...! பிஞ்சுகளையும் புசிக்கத் தயங்கா காமுகர்களின் அரக்க குணம் போதை வஸ்துவின் புழக்கத்தால் தூண்டப்பட்ட ஒன்று எனக் காரணம் அறியப்பட்டாலும், பலியான அந்த குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தம் எப்படித் தேடுவது? என்ன பாவம் செய்தது  அந்தப் பெண் குழந்தை?? அதனைப் பாதுகாக்கத் தவறியது யார் குற்றம்? அதனைப் பெற்றோரா? இல்லை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்தச் சுயநல சமூகமா? சட்டம் ஒழுங்கை கண்காணிக்கத்  தவறிய காவல் துறையா? இல்லை அந்தக் காவலர்களை தங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாதுகாப்பு செய்திடப் பணித்த அரசியல்வாதிகளா? இல்லை இவற்றினையெல்லாம் அரங்கேற்றி வேடிக்கை பார்க்கும் அந்த மகா சக்தியா? இல்லை அப்படி ஒன்று தான் உளதா? கேவலமான இந்த அவலங்களைப் வெறும் செய்தியாக  கேட்டுக் கடந்து போகாமல், பாட்டன் பாரதிதாசன் சொன்னது போல... "பண்ணப் பழகடா பச்சை படுகொலை" எனும் அடிப்படையில், இதன் ஆணிவேர் எதுவோ, யாரோ.... அதனை பாரபட்சம் காட்டாது வேரோடு உடனடியாக...

வயசாயிடுச்சில்ல...!

Image
  ஆண்டு 1991..! மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறையும் கழிந்து புனித வளனார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு..  பதினேழு, பதினெட்டு வயது மட்டுமே நிரம்பிய என்னைப் போன்ற ஏராளமான இளைஞர் பலர் தங்கள் அரும்பு மீசை எட்டிப் பார்க்க முதல்நாள் அடியெடுத்து வைத்த நாள் இன்னும் பசுமையாய் நினைவுகளில்...! ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அமர்ந்து படித்த இயற்பியல் வகுப்பில் மர இருக்கைகளின் அரங்க அமைப்பு வகுப்பை மேலும் பிரமாண்டமாக காட்ட, மாணாக்கர்கள் ஆங்காங்கே  ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டிருக்க... திடீரென எனை நோக்கி நெடு நெடு உயரத்தில் ஓர் இளைஞன் திராவிட நிறத்தில் கண்களில் வசீகரம் மின்ன, உதட்டின் மெல்லிதாய் ஒரு சிறு  புன்னகையைய்த் தவழவிட்டுக் கொண்டு அருகில் வரவும், ஏதோ ஓர் சொல்லனா பரிச்சயம் இருவரிடத்தும் உணரப்பட்ட நிலையில், "ஃபிராங்க்ளின், பிரிட்டோ காலனி, மணிகண்டன், மலைகோட்டை" என கை குலுக்கிக் கொண்டு நலம் பரிமாற்றிக் கொண்டோம்..! இருவரும் பள்ளிப் பிராயத்தில்  பாராது "பார்த்துக்" கொண்டிருந்ததை அளவலாவிக் கொண்டோம்..! 10ஆம் வகுப்பில் மதிய இடைவேளை...

அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..!

Image
  அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..! வடக்கில் பால ராமனாய் அவதரித்தவன், தெற்கில் பால "தன்வீ"யாயன்றோ  இன்று மீண்டும் உதித்தனன்..! மிதிலையின் அரசன் ஜனகனின் சுவீகார புத்ரியை சுயம்வரம் செய்திட சக்ரவர்த்தித் திருமகன் ராமன்  வில்லை உடைத்து அரங்கேறியது சீதா கல்யாண வைபோகம் அன்று! வில்லெனும் தன் அழகிய கண்களால் "தன்வீ" ராமன் காதலாய் சீதையை நோக்கிட அடையாரில் அரங்கேறியது  மழலையர் சீதா கல்யாணம் இன்று! இந்திய பெருநாட்டின்  மேன்மை மிகு அடையாளமாம் அயோத்தி ராமர் கோவில்தம் வசீகரத்தில் லயித்திருந்த எங்களின் கண்களுக்கு, தன் சின்னஞ்சிறு உடல் மொழியால் மேடையில் விந்தையாய் சீர்மிகு விருந்து வைத்தனள் எங்கள் இல்லத்து இளவரசி தன்வீ..! கற்சிலையேயாயினும் கடவுளாய் ராமன் அயோத்தியில் எழுந்தருளிய காட்சிதனை காணக் கோடி மக்கள் தவமிருக்க, இங்கே உயிர்பெற்ற சிலையாய் ராமன் தன்வீயாய் வலம்வரும் காட்சி கிடைத்திட என்ன தவம் நாங்கள் செய்தோமடா??

கொரிய நாட்டுப் பைங்கிளியே.!

Image
அகண்ட விழிகளால்  என்னை ஆட்கொண்ட கொரிய நாட்டுப் பைங்கிளியே.! கள்ளூரும் உந்தன் ஒற்றைப் பார்வைதனில் சிக்குண்டபின்னே பசியோ ருசியோ அறிகிலேனடி...! இதழ் விரித்து நீ பேசச் சிதறும் எச்சில் என் ஸ்பரிசம் பட்டால்  என் ஆத்மா அன்றோ புனிதமடையும்..! பார்த்தது போதும்.. பேசு... உன்னை மானசீகமாய்  காதல் கொண்டவனிடத்து  என்ன வேண்டுமானாலும் வினவு... உனக்காக கடல் கடந்து வந்தாவது உந்தன் காலடி சேர்த்து விட மாட்டேன்னா என்ன? சகியே..என் சக்தியே...! இவ்வுயிர் இருக்குமட்டும் உன் காதல் துதி பாடிட சலிக்க மாட்டேனடி பெண்ணே...!

அன்பே வா அருகிலே

"சித்ரா, நாளைக்கு காலையில, ஏர்லியரா கிளம்பணும், ட்ரைவரை நாலரை மணிக்கெல்லாம் வரச் சொல்லியிருக்கேன்.  மதுரையில் மீட்டிங் முடிச்சுட்டு, மேகமலை எஸ்டேட் வரை போகணும்.  ஷவரில், நனைவதற்கு முன் சொல்லி விட்டு, தாழிட, அவனை துண்டு கொடுக்கும் சாக்கில் இறுக்கி அணைத்தாள்.  "சித்து, தாலி குத்துதடி விடுடி" என்றவுடன் விருப்பமில்லாமல் விடுவித்தாள். அவர்களுக்கு திருமணமாகி 6 வாரங்களே ஆகின்றன.  OMR இல் பாஷ்யம் அப்பார்ட்மெண்ட் 14ஆவது தளத்தில், கடலைப் பார்த்த மாதிரி 4 BHK பிளாட் அவர்களுடையது.  கதிர், இன்போசிஸ் கம்பெனியில் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருக்கிறான்.  கல்யாணத்துக்கு முன், இரண்டு வருடங்கள் கனடாவில் ஒட்டாவா நகரில் ஆன்சைட் அசைன்மெண்டில் இருந்து வந்தான்.  அம்மாவின் பிடிவாதம் காரணமாக, கல்யாணத்திற்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டவன், சித்ராவை பார்த்ததும், முடிவை மாற்றிக் கொண்டவன்.   சித்ரா, கதிர் முதன் முதலில் பார்த்ததை நினைத்துக் கொண்டாள்.  மாலை 6 மணியளவில், மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள் என, வீடே அல்லோகலப்பட்டது.  "சென்னையிலிருந்து ட்ரைவ் பண்...

உயிர்ப்பறவை

இன்று பிப்ரவரி 14...  நேரம் மாலை 5:40... சென்னை 2028..! மேகா வந்து அரை மணி நேரமாகி விட்டது.  அடையாறு கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில், பாதி அழிந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு அவள் வந்து அரை மணிக்கும் மேலாகத் தான் ஆகி விட்டிருந்தது.  பாலத்தின் அடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.   "அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றது அந்த நீலப்பாவாடைச் சட்டை அணிந்திருந்த சிறுமி.  மேகா, இலேசாக புன்முறுவல் செய்தாள்.  முழுமையாய் அவளால் சிரிக்க முடியவில்லை.  காரணம், ஆகாஷ்.  மதியம் பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பும் போது, இன்று மாலை 5 மணிக்கு அவர்களுடைய பேவரிட் ஸ்பாட் - பட்டினப்பாக்கம் பழைய பாலத்தில் சந்திப்பது என்று ஆகாஷ் சொல்லியிருந்தான்.  அதனால் தான் நிற்கிறாள்.  அவன் வருகைக்காக காத்திருக்கிறாள்.   காற்று பலமாக வீசுகிறது  நெற்றியில் கற்றையாய் முடி மீண்டும் மீண்டும் விழ, அதை சரி செய்து சரி செய்து தோற்றுப் போனாள்.  வெளிர் நீல குர்தாவும், ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்தாள். கண்களில், "ரே பான்" அவளை மேலும் ந...

புறவழிச்சாலை

தேநீர்க்கடை மழை அப்பொழுது தான் விட்டிருக்க வேண்டும்.  சாலையெங்கும் நீர்த் தெப்பங்களாயிருந்தது. அருகாமை பெரிய கட்டிடங்கள், தேங்கியிருந்த தண்ணீரில் தலைகீழாய் தெரிந்தன.  வானம் இன்னும் மேகத் திரள்களாய்த் தெரிந்தது. மழை மீண்டும் வரலாம்.  வராமலும் போகலாம்.  விடியற்காலையாதலால், அதிக நடமாட்டமில்லை.  அந்த சாலையின் இடது திருப்பத்தில் ஒரு தேனீர்க்கடை இயங்குவதுத் தெரிகிறது.  மெல்லியதாய் கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்கின்றது.   அருகில் செல்லச் செல்ல ஒலியின் அளவு கூடிற்று. ஒரு போலீஸ்காரர் ஸ்டூலில் இருந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். "அண்ணா, ஒரு டீ, சுகர் கம்மியா" அந்தப் பெண் கேட்டதும், கடைக்காரர் ஆச்சர்யமாய் பார்த்தார்.  டீ ஆற்றிக் கொண்டு அவளை அரைகுறையாய் நோட்டம் விட்டார்.  மாநிறம், சராசரிக்கு சற்று உயரம்.  சுடிதார்  அணிந்திருந்தாள்.  தலை வகிடின் ஆரம்பத்தில் குங்குமம் கலைந்திருந்தது. நெற்றியில் போட்டு இல்லை. கைகளில் ஒரு சிறிய பை. அதில் செல்போன் செருகியிருந்தாள். பெரிதாக நகைகள் ஏதுமில்லை. வயது நடுத்தரமாக இருக்கலாம். கண்கள் சிவந்திருந்தது...

அந்தி மழை பொழிகிறது ...!

அந்தி மழை பொழிகிறது ...! மண் வாசமும் உன் வாசமும் கலவையாய் காதலாய்... உன் அருகாமை நெருக்கத்தில்  புறப்பட்ட தனலோ என்னில் புயலாய் வீச   பொங்கிய வியர்வைத் துளிகளை ஒற்றிக் கொள்ள  உன் முந்தானையை அன்றோ தேடுகிறது மனம்..!!! "பாப்பா அழுகின்றாள்"  என விருட்டென எழுந்து சென்றாய் ... நீயெழுந்த வேகத்தில், சேலையின் முந்தியில்  என்னில் எழுந்த விரகத் தீயினை  முழுதாய் அணைத்திட அன்றோ துணிந்தாய்...! இல்லறம் பேணும் நல்லறம்  தாம்பத்திய சமரசங்களால் ஆனதேயாயினும்  அதிலும் ஓர் சுகமன்றோ இருக்கிறது ...! பாவமாய் உனை நான் காதல் யாசிக்க , "குழந்தையை விடவா ?"  என நீ  செல்லமாய் அதட்டினாலும்  வெட்கச் செறிவினை கவிதையாய்  கண்கள் பேசிட , என் வேட்கையின் தாகம் தீர  அழுத்தியணைத்து இதழ் பதித்து முத்தமிட்டால்  ஜீவ சாபல்யமன்றோ அடைவேன் ...! மகளை தூங்கச் செய்தாயெனின் விரைந்து வா , காதலாய் காத்திருக்கிறேன், நிலவு பொழிகிறதடி பெண்ணே ...! 

ஐயப்பன் துதி

  ஒப்பில்லா இறைவன் நீ ...! உலகாளும் அரசன் நீ  எண்ணிலா அடியவர் நெஞ்சில்  ஆட் சி செய்யும் தலைவன் நீ ..! விண்ணிலும் மண்ணிலும்  வேதப் பொருள் யாவிலும்  என்னிலும் உன்னிலும்  யாவையுமாய் நிறைந்தவன் நீ...! உனையின்றி வேற்றொன்றும் அறியேன் நான்  உன் நினைவன்றி யாதொன்றும் உய்யேன் நான்  உன் திருநாமம் சொல்லாமல் வாழ்வேது  மணிகண்டா நீயின்றி நானேது? வாழ்வது ஓர் வாழ்க்கை நீ தந்தது  உன்னை வாழ்த்தாமல் என் வாழ்வு ஓயாது  உன் சன்னதி வாராத வாழ்வென்று  எந்நாளும் என் மனம் அறியாதது ...!

தங்கத் தாரகை

  தங்கத் தாரகை  திகட்டாத பூமழை  விண்மீன் வானிலே  ஒளிரும் புன்னகை  அன்பின் சிகரம் நீ  அழகின் உச்சம் நீ  காந்தக் கண்ணினால்  கவரும் கவிதை நீ  உன்னைப் பார்த்த  அந்த முதல் பொழுது  மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன்  எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன்  நீ பேசும் ஓர் மௌன மொழி  ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி  நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை  இந்த பூமி எங்கும் பூக்களடி  நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி  தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...

காதல் மழை

Image
மழை பொழியும் நேரம்  மனம் குளிரும் காலம்  இதழ் விரியா தூரம்  இனம் புரியா மோகம்  சாரல் மழை எந்தன் மேலே விழ தூறல் எங்கும் உந்தன் மேலே பட  என்னில் காதல் மழையாய் கொட்டுதடி  உன்னைக் காணா ஏக்கம் கொல்லுதடி  ஆகாய வீதிதனில்  மேகத்துக் கூட்டத்தில்  பூபாள பாடல் ஒன்று ஒலிக்கின்றது  அதுவே மழையாக மாறித் தான் பொழிகின்றது  தீராத விரதத்தில்  மாறாத தாபத்தில்  என்னுள்ளே காதல் ஒன்று இருக்கின்றது  அது உன்னைத் தான் வந்தடையத்  துடிக்கின்றது  போதும் போதும்  உன்கொல்லும் மவுனம்  காலம் மாறும்  இனி மண்ணில் தூவானம்  மழை முடியும் தருணம்  என் மனதுக்குள் நீ வரணும்  கார் காலம் முழுதும்  நம் காதல் கதை தொடரட்டும் ...!  

காதல் (க)விதை ...!

Image
  கண்ணுக்குள் காதல் விதைத்தாய் ..! கண்ணே என் கண்ணில் கலந்தாய் ... இன்னும் என்ன வெல்லாம் புரிவாய் ... என்னை ஏதோ ஏதோ செய்தாய் ..! பூந்தளிரே ... புதுப் புயலே ... காதல் செய்யடி ..!! என்னைக் காதல் கொள்ளடி ...! யார் யாரோ வருவார் , யார் யாரோ செல்வார்  நீ மட்டும் என்னை விலகாதே  என் காதல் உன்னை வருத்தாதே  இந்த மண்ணில் வாழும் மட்டும்  நாம் இருவரும் இணைந்திருப்போம்  பூந்தளிரே ... புதுப் புயலே ... காதல் செய்யடி ..!! என்னைக் காதல் கொள்ளடி ...!

நினைவிருக்கா...??

Image
  அன்று நல்ல மழை பெய்து விட்டிருந்தது...!ஜன்னல் கம்பிகளில் இன்னும் நீர்த் திவிலைகள் சொட்டிக் கொண்டிருந்தன...!புறாக்கள் தண்ணீர் தடாகங்களில் குளியலிட்டுக் கொண்டிருந்தன...! மாலை தேநீரைப் பருகியபடியே வழியில் செல்வோரை எல்லாம் நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க... தெரு முனையில் தேங்கியிருந்த நீரில் வெளிர் நீலக் கலரில் உன் சேலையின் நிழல் தெரிய உன்னைப் பார்க்கும் அவசரத்தில் விரலைச் சுட்டுக்கொண்டேன்..! நல்ல உயரம் நீ... ஒல்லியுமில்லை, பூசினமாதிரியும் இல்லாததாய் ஒரு தேகம்... உன் வயதை பருவம் சொல்லாமல் சொல்ல, கழுத்தில் நீளமாய் ஒரு தங்கச் சங்கிலி, மேட்டுப் பிரதேசத்தின் மத்தியில் கர்வமாய் ஆடிக் கொண்டிருக்க, கண்களைத் தாண்டி மையின் கருமையும், இதழ்கள் முழுதும் மெலிர் வண்ணப் பூச்சு உறுத்தாமலும் படிந்திருக்க, நெற்றியில் கோவிப் பொட்டிருந்தது...! தூவானமே ஆனாலும் அந்த மங்கியப் பொழுதில் நீ மட்டும் என் ரசனைகேற்றவளாய் அழகாய்த் தெரிந்தாய்...! மழை நீரைச் சேலை நனைக்காதிருக்க சற்றே கெண்டைக் கால்களின் மேலே ஒரு கையில் தூக்கியபடி  நீ கடக்க முயல எதிர்பாராமல் வந்த மகிழுந்து உன் மேல் மழை நீரை வாரியடித்து விர...

கட்டுமரம்

Image
  1991 ஆம் ஆண்டு ...! பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வில் நான் வாங்கிய மதிப்பெண்கள் மதிப்புடையதாயிருப்பினும் அண்ணன் பாரதி படித்த ஆர் இ சியில் சேருமளவுக்கு அதற்குத் தகுதியில்லை என அப்பா எனக்கு   மாற்று வாய்ப்பை அமைத்துத் தராது போயினும் , கிடைத்ததே போதும் எனக் கருதி என்னை திருச்சி   புனித வளனார் கல்லூரியில் இளங்கலை இயற்பியலில் சேர்த்துக் கொண்டு , மூன்று வருடங்கள்   தவமாய் படித்து   தனிச்சிறப்புடன் முதல் வகுப்பில் தேர்வான எனக்கு , அந்த மதிப்பெண்கள் மட்டும் என் சொந்தக் கல்லூரியிலேயே எம் சி ஏ படிப்பதற்கு உதவாது , அதற்கு பணமோ அல்லது சிபாரிசோ தேவை என்றும் அது என் அப்பாவால் கொண்டுவர முடியாது என்றும் தெரியாது ...!   1994 ஆம் ஆண்டு ...! கூடப் படித்தவர்கள் எல்லாரும் சாமர்த்தியமாய் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டு பயணிக்கத் துவங்கிய பொழுது திக்குத் தெரியாமல் எந்தப் பக்கம் போவது என்று நிலைதடுமாறி என் செய்வது என்று அறியாமல்   பொறியியல் படிப்பினும் கடினமானதும் , கல்லூரிகளில் ...