நேபாள சேதம், பூபாள சோகம்..!
ஆகஸ்ட் மாதம் 26 தேதி அன்று காலை எல்லோருக்கும் போலவே உள்ளூர்வாசிகள் சுற்றுலாப் பயணிகள் அந்நிய நாட்டினர் அரசு ஊழியர் என்று நேபாள் - சீனா எல்லைப் பகுதியில் குழுமியிருந்த அவர்களுக்கும் விடிந்திருக்கும்...! கிராங் சோதனை மையத்தின் இருபுறமும், முன்னும் பின்னும், அழகிய பனிமலைகள் ஆர்ப்பரித்து ஓடும் ஆறு என்று வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்க ஆங்கே தொலைவில் பின்னே ஓங்கி உயிர்ந்த பனிமலையின் ஒரு பகுதி காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்திலிருந்து ஐயாயிரம் மீட்டருக்கும் மேலிருந்து தானாக பெயர்ந்து கீழே 2000 மீட்டர் பள்ளத்தில் திரிசூலி நதிமுலத்தில் செங்குத்தாய் விழ பொங்கிப் பிரளயமாய் வெளிப்பட்டதோர் ஆழிப் பேரலை கண்ணிமைக்கும் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்து நதியின் கரை நெடுகிலும் பன்னெடுங்காலமாய் இருந்துவந்த குடியிருப்புப் பகுதி முழுமைதனையும் கபளீகரம் செய்து தன் பெரும்பசியை ஆற்றிக் கொண்டது! எத்தனையோ கனவுகளுடனும் எதிர்காலத் திட்டங்களுடனும்...