திருப்பள்ளியெழுச்சி




நான் தினமும் காலையில்

விழிக்கும் பொழுது...

அருகில் நீ இன்னும் 

நித்திரை கலையாதிருக்கின்றாய்...

கலைந்து கிடக்கும் உன் கேசம்...

அதில் முழுவதுமாய் வியாபித்திருக்கும் 

பெண்ணே உன் வாசம்...!

உன்னை எழுப்ப மனமில்லாமல்

உன் முகம் பார்த்து காத்திருப்பேன்..

நான் முழித்தது உணர்ந்து

மெல்லிதாய் விழித்தும் விழிக்காமல்

கண்களைத் திறந்து மூடிக்கொள்வாய்..

"இன்னும் கொஞ்சம் நேரம்ப்பா"

உன் குரல் கொஞ்சலாய் கெஞ்சும்...

நெற்றிப் பொட்டு இடம் மாறி

இமைதனில் ஒட்டிக் கொண்டிருக்கும்..

சிரித்துக் கொள்வேன்...

வறண்டிருக்கும் உன் இதழ்களுக்கு

முத்தங்களால் ஈரம் நனைத்திட்டு

என்னை மெதுவாய் உன்னிடத்திலிருந்து

 விடுவித்திக் கொள்ள முயற்சிப்பேன்...

மீண்டும் என்னை 

இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு

செல்லமாய் வன்முறை செய்கின்றாய்..!

என்னை தினசரி 

கொல்லாமல் கொல்கின்றாய்..!

"தோழியே ....காதலியே...! 

போதும் எழுந்திடு..!"

எனக் கரையும் உன் காதலனின் 

திருப்பள்ளியெழுச்சி 

உன் செவிதனில் விழவில்லையா??

நம் காதலின் செய்திகள் தரவில்லையா??


பா. மணிகண்டன்

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை