கொரிய நாட்டுப் பைங்கிளியே.!
அகண்ட விழிகளால்
என்னை ஆட்கொண்ட
கொரிய நாட்டுப் பைங்கிளியே.!
கள்ளூரும் உந்தன்
ஒற்றைப் பார்வைதனில்
சிக்குண்டபின்னே
பசியோ ருசியோ அறிகிலேனடி...!
இதழ் விரித்து நீ பேசச் சிதறும்
எச்சில் என் ஸ்பரிசம் பட்டால்
என் ஆத்மா அன்றோ புனிதமடையும்..!
பார்த்தது போதும்.. பேசு...
உன்னை மானசீகமாய்
காதல் கொண்டவனிடத்து
என்ன வேண்டுமானாலும் வினவு... உனக்காக கடல் கடந்து வந்தாவது
உந்தன் காலடி சேர்த்து விட
மாட்டேன்னா என்ன?
சகியே..என் சக்தியே...!
இவ்வுயிர் இருக்குமட்டும்
உன் காதல் துதி பாடிட
சலிக்க மாட்டேனடி பெண்ணே...!
Comments
Post a Comment