அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..!
அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..!
வடக்கில் பால ராமனாய் அவதரித்தவன்,
தெற்கில் பால "தன்வீ"யாயன்றோ
இன்று மீண்டும் உதித்தனன்..!
மிதிலையின் அரசன் ஜனகனின்
சுவீகார புத்ரியை சுயம்வரம் செய்திட
சக்ரவர்த்தித் திருமகன் ராமன்
வில்லை உடைத்து அரங்கேறியது
சீதா கல்யாண வைபோகம் அன்று! வில்லெனும் தன் அழகிய கண்களால் "தன்வீ" ராமன்
காதலாய் சீதையை நோக்கிட
அடையாரில் அரங்கேறியது
மழலையர் சீதா கல்யாணம் இன்று!
இந்திய பெருநாட்டின்
மேன்மை மிகு அடையாளமாம்
அயோத்தி ராமர் கோவில்தம்
வசீகரத்தில் லயித்திருந்த
எங்களின் கண்களுக்கு,
தன் சின்னஞ்சிறு உடல் மொழியால்
மேடையில் விந்தையாய்
சீர்மிகு விருந்து வைத்தனள்
எங்கள் இல்லத்து இளவரசி தன்வீ..!
கற்சிலையேயாயினும்
கடவுளாய் ராமன் அயோத்தியில்
எழுந்தருளிய காட்சிதனை காணக்
கோடி மக்கள் தவமிருக்க,
இங்கே உயிர்பெற்ற சிலையாய்
ராமன் தன்வீயாய் வலம்வரும்
காட்சி கிடைத்திட
என்ன தவம் நாங்கள் செய்தோமடா??
Comments
Post a Comment