அன்பே வா அருகிலே

"சித்ரா, நாளைக்கு காலையில, ஏர்லியரா கிளம்பணும், ட்ரைவரை நாலரை மணிக்கெல்லாம் வரச் சொல்லியிருக்கேன்.  மதுரையில் மீட்டிங் முடிச்சுட்டு, மேகமலை எஸ்டேட் வரை போகணும்.  ஷவரில், நனைவதற்கு முன் சொல்லி விட்டு, தாழிட, அவனை துண்டு கொடுக்கும் சாக்கில் இறுக்கி அணைத்தாள். 
"சித்து, தாலி குத்துதடி விடுடி" என்றவுடன் விருப்பமில்லாமல் விடுவித்தாள்.

அவர்களுக்கு திருமணமாகி 6 வாரங்களே ஆகின்றன.  OMR இல் பாஷ்யம் அப்பார்ட்மெண்ட் 14ஆவது தளத்தில், கடலைப் பார்த்த மாதிரி 4 BHK பிளாட் அவர்களுடையது.  கதிர், இன்போசிஸ் கம்பெனியில் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருக்கிறான்.  கல்யாணத்துக்கு முன், இரண்டு வருடங்கள் கனடாவில் ஒட்டாவா நகரில் ஆன்சைட் அசைன்மெண்டில் இருந்து வந்தான்.  அம்மாவின் பிடிவாதம் காரணமாக, கல்யாணத்திற்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டவன், சித்ராவை பார்த்ததும், முடிவை மாற்றிக் கொண்டவன்.  

சித்ரா, கதிர் முதன் முதலில் பார்த்ததை நினைத்துக் கொண்டாள்.  மாலை 6 மணியளவில், மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள் என, வீடே அல்லோகலப்பட்டது.  "சென்னையிலிருந்து ட்ரைவ் பண்ணிட்டே வா வற்றாங்க ?" பக்கத்து வீட்டு சித்ராவின் தந்தையிடம் கேட்க, அந்த தெருவின் முனையில் கருப்பு BMW  திரும்பும் சத்தமும் கூடவே ஒலிக்க, சித்ராவின் தந்தை, கேள்விக்கு பதில் அளிக்காமலே வாசலுக்கு விரைந்தார்.  காரில் இருந்து, நெடு நெடுவென புளு ஜீன்ஸ், ஸ்டோன் வாஷ் டி ஷர்ட்டும் என நல்ல சிவப்பு நிறத்தில் கதிர் இறங்கி நடக்க, மாடியின் ஜன்னலில் இருந்து அவனைப் பார்த்த அந்த  கணத்திலேயே மனதை பறி கொடுத்தாள்.  ஏதோ பல நாட்கள் பழகியது போல, பரிச்சயமான முகம்.  மீசை இல்லை, துரு துருவென கண்கள்.  விசாலமான மார்பு, டீ ஷர்ட்டில், TIME TO START SOMETHING GREAT என்று அச்சிடப்பட்டு இருந்தது.  கீழேயிருந்து அம்மா, "அவுங்க எல்லாரும் வந்துட்டாங்க, சித்ரா சீக்கிரம் ரெடியாகுமா" என்று அலற, கதிர், அந்த பங்களாவை நோட்டம் இட்டான்.  சித்ராவின் தந்தை, மதுரையில் ஒரு பெரிய பிசினஸ் மேன்.  தவிர, மேகமலையில், ஒரு டீ எஸ்டேட்டும் வைத்திருக்கிறார்.  ஆண் வாரிசு கிடையாது.  தனக்குப் பின், தன் மகளுக்கே எல்லாமும் என்று இருப்பவர்.  அவர்களது வசதியும், தரமும்,  அந்த பங்களாவின் எல்லா முடுக்குகளிலும் மிளிர்ந்தது.  படிகளில், சித்ராவுடன் இரு தோழிகளும் இறங்கி வர, கதிர் அம்மா, "வாம்மா, வந்து உக்காரம்மா" என்று பாசமாய் அழைத்தாள்.  கதிருக்குப் பிடித்தமான மேகக் கலரில், சாப்ட் சில்க் சாரி அணிந்திருந்தாள்.  எல்லாரும் எல்லாமும் பேசிக் கொண்டிருக்க, இருவரும் ஒருவரையொருவர் கண்களில் சந்தித்துக் கொண்டனர்.  கதிர், அவளது அப்பாவித்தனமான முகத்தில், சற்று வியர்த்திருக்கக் கண்டு, "ஆர், யூ ஓகே " யூ சீம் டு ஸ்வெட்டிங் எ பிட்" என்று, விருட்டென்று எழுந்து அவளருகில் வந்து, தன் கைக்குட்டையை எடுத்துக் கொடுக்கவும், எல்லோரும் சற்று நேரம் அதிர்ச்சியில் உறைய, கதிர் அம்மா மட்டும், "வாங்கிக்கம்மா" என்றாள்.  அருகில் வந்தவன், "யூ ஆர் வேரிங் மை பேவரிட் கலர்" என்றான்.  இருவரும் தனியே பேச அனுமதிக்கப்பட்டனர்.  ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்றனர்.  சம்மதங்கள் தெரிவிக்கப்பட்டன. எல்லாரும் கிளம்பிச் செல்ல, அவன் வந்த அந்த கருப்பு கார் தெருவில் திரும்பி செல்ல, அந்த காரின் எண் 8899 என்பது தெளிவாகத் தெரிந்தது.

அதற்கு அடுத்த மாதத்தில், மதுரையின் பிரதான மண்டபம் ஒன்றில் வெகு விமரிசையாக கல்யாணம் நடந்தேறியது.  தேனிலவுக்கு மொரிஷியஸ் சென்று வந்தார்கள்.  மேகக் கூட்டம் இடம் பெயர்ந்தது போல, எல்லாமும் முடிந்து, இதோ 6 வாரங்கள் ஓடிப் போய்விட்டன.  சென்னை வந்து 10 நாட்களே ஆகிறது.  இருவரும் காதலில் நனைந்து, காதலாய் வாழ்த்து, காதலுடன் கலந்து, இன்புற்று, உச்சம் தொட்டு, படுக்கைகளை கலைத்து, கசக்கி, ஒருவரையொருவர் வென்று, தோற்று, விட்டுக் கொடுத்து, பரவி, மிதந்து கொண்டிருக்க, நேற்று காலை, சித்ராவின் தந்தை போனில் அழைத்து, "சித்ரா, மாப்பிள்ளை கதிர் மட்டும் மேகமலை நாளைக்கு வர வேண்டியிருக்கும், ஒரு பிராபர்டி சம்மந்தமாம்மா" என்றார்.  சித்ரா, "அப்பா உங்கள மட்டும் மேகமலை வர சொல்றார், முடியுமாப்பா? " என்று கேட்க, "என்னவாம், திடீர்னு, சரி நாளை SEZ SIPCOT ப்ராஜக்ட் விஷயமா மதுரை போறேன், திரும்ப வரும் போது, டிரை பண்ணுறேன்" என சொல்ல, "சரிப்பா, வருவார்" எனச் சொல்லி போனை வைத்தாள்.

காலை டிரைவர் வந்ததும், ஏர்போர்ட் சென்று, ஸ்பைஸ் ஜெட் ஏர்பஸ் 320 ஐ பிடித்து, 8 மணிக்கெல்லாம் மதுரை வந்திறங்க, போனை ஆன் செய்து, சித்ராவிற்கு போன் ட்ரை செய்தான்.  வெகு நேரமாக, போன் எடுக்கவில்லை. அதற்குள், மாமாவிடமிருந்து போன் வர, "மதுரை வந்துட்டேன் மாமா, மாலைக்குள் எஸ்டேட் வந்துடுவேன்" என்று சொல்லிவிட்டு, ஓலா வைத்து, SIPCOT விரைந்தான்.  வழியில், அவளை 2-3 முறை அழைத்துப் பார்த்தான். பிறகு வேலையில் மூழ்கிட, மதியம் போன் ட்ரை செய்ய, அவனது போனில் சார்ஜ் போயிருந்தது.  அவசரமாக, லேப்டாப் பேகில், எப்போதும் வைத்திருக்கும் வர பேங்க்கைத் தேடித் பார்க்க, இல்லாது, ஏமாற, தன்னையே நொந்து கொண்டான்.  வேறு வழியில்லாது, மேகமலைக்குத் தன்னை அழைத்துச் செல்ல மாமா அனுப்பிய காரில் ஏறி அமர்ந்த அடுத்த நிமிடம் கார் சார்ஜரில் அவனது போனை செருக முயல, அந்த பின் இவனது ஐ போனுக்கு செட் ஆகாததால், நொந்து போனான்.  

"சாரி  சார், என் போனில் வேணும்னா டிரை பண்ணுங்க, ஆனா இங்க டவர் கிடைக்காது என்றான். வெளியே பார்த்தான்.  கார் பாதி மலையை கடந்து ஹேர் பின் பெண்டுகளில் வளைந்து வளைந்து வந்து கொண்டிருந்தது.  தலை வெகுவாக வலிக்கவே, ஒரு ஸாரிடன் போட்டுக் கொண்டு, தூங்க முயற்சி செய்தான்.  திடீரென பெரிய சப்தம் ஒன்று கேட்கவே, பதட்டமாய் எழுந்து பார்க்கும் பொது, ஒரு பெரிய கண்டெய்னர் ட்ரைலர் சென்று கொண்டிருந்தது.  வெளியே, சுத்தமாக இருட்டிப் போயிருந்தது.  இன்னும் எவ்வளவு நேரம்பா என்று கேட்க, அவ்வளவு தான் சார், இன்னும் 5 ஹேர் பின் பெண்டுகள் தான்.  மழை பெய்யத் தொடங்கிற்று. மேலே, எஸ்டேட் வந்து சேரும் பொது இரவு மணி 11 ஆகியிருந்தது.  வாசலில், சித்ராவின் அப்பா, காத்திருந்தார்.  "வாங்க மாப்பிள்ளை, ரொம்ப கஷ்டப்பட்டு வந்து இருக்கீங்க, சாப்பிடுங்க, காலையில பேசிக்கலாம்" என்றார்.  மாடியில் அவனது ரூமை சென்று காண்பித்து விட்டு, தன் ரூமுக்கு சென்று கதவை தாழிட, "மாமா சித்ரா ஏதும் பேசுனாளா "  என்றான் கதிர்.  நேற்று பேசினது தான்.  இன்னைக்கு புல்லா, நான் இந்த இடம் சம்மந்தமா லாயர் கூட இருந்ததால, பேச முடியல்ல.  

ரூமுக்கு சென்று முதல் வேலையாக, போனுக்கு சார்ஜ் போட்டான்.  பாத்ரூமில்  யாரோ குளிக்கும் சப்தம் கேட்டது.  வெளியே வந்து, கீழே எட்டிப் பார்த்து, "யாராவது இங்க பாத்ரூம் யூஸ் பன்றாங்களா" என்று கேட்டான்.  யாருமில்லை அய்யா என்றான் சண்முகம் .  மீண்டும் ரூமுக்கு வந்து, பாத் ரூம் அருகே சென்றவனுக்கு இந்த முறை வளையல் சத்தம் கேட்டது.  "யாரு உள்ளே ?" என்று கலக்கத்துடன் கேட்டான்.  நான் தாங்க சித்ரா, என்று சிரித்தாள்.  "ஏய் என்ன, அப்பாவும் மகளும் சேர்ந்து கிட்டு, சொல்லி வச்ச மாதிரி விளையாடுறீங்களா" என்று கடிந்து கொள்ள, கதவைத் திறந்து சித்ரா, நீராவி பரவ வெளியே வர,  அவனைப் பார்த்ததும், "சாரி கதிர், உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?  என்று கூறி, அவனை வழக்கமாக இறுக்கி அணைப்பது போல, அணைத்தாள்.  இம்முறை, அவனுக்கு தாலி குத்தவில்லை. அந்த வேளையில்,  கீழே இருந்து, சண்முகம் "அய்யா, அய்யா"  சென்னையிலிருந்து போன், உங்கள கேட்குறாங்க அய்யா என்று கத்த, அவளை விடுவித்து, வேகமாக சென்று, போனை வாங்கி பேசினான்.  "ஹலோ, நான் இங்க சோழிங்கநல்லூர் எஸ் ஐ பேசுறேன்.  பிளாக் BMW TN 12Q 8899 உங்க காரா சார்? என்றார்.  "ஆமாம் என்ன விஷயம் சொல்லுங்க என பதட்டமானான். எங்க சார் இருக்கீங்க, மதியானத்தில இருந்து ட்ரை பண்றோம், உங்கள ரீச் பண்ண முடியல்ல.  உங்க ஒய்ப் ஹாண்ட் பேகில் இருந்த டைரிய வச்சு தான், உங்கள புடிச்சோம்.  நியூஸ் பாக்கலையா நீங்க? வீ ஆர் சாரி டு இன்பார்ம் யூ, ஷி ஹாஸ் பீன் மர்டர்டு திஸ் மானிங் இங்க கேளம்பாக்கம்.... " சொல்லிக் கொண்டிருக்கும் போது,  சித்ரா அப்பா, "ஐயோ மாப்ள...."  கத்திக் கொண்டே, டிவியை ஆன் செய்தார்.  ஏறக்குறைய எல்லா சேனல்களிலும், ஒரே நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.

சென்னையில் புதிதாய் திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கேளம்பாக்கம் கோவளம் சாலை நடுவே பாலத்தின் கீழே எரித்து விட்டதாகவும், அந்தப் பெண் தன் வீட்டில் இருந்து தானே காரை ஒட்டிக் கொண்டு பியூட்டி பார்லர் வந்து விட்டு சென்றதாகவும், அதனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த, வெளி மாநில லாரி ஓட்டுநரும் அவனது கூட்டாளிகள் மூவரும், அந்தக் காரை பின் தொடர்ந்து சென்று, அந்தப் பெண்ணை மடக்கி, இந்த கொடுஞ்செயலை செய்து விட்டு, பின் எரித்து விட்டு, அங்கிருந்து தப்பி விட்டதாகவும், சிசி டிவி உதவியுடன், அந்த கும்பலை தனிப் படை அமைத்து காவலர் தேடி வருவதாகவும் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கதிர் நெஞ்சடைத்துப் போய், விரக்தியுடன் மேலே ஏறி சென்று பார்க்க, சித்ரா, அவனுக்குப் பிடித்தமான மேகக் கலர் சாப்ட் சில்க் சாரியைக் கட்டிக் கொண்டே, " அன்பே வா அருகிலே..."  என்று அவனைப் பார்த்து, இரு கைகளையும் சேர்த்து அழைத்தாள்.  























































Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை