Posts

Showing posts from September, 2026

நேபாள சேதம், பூபாள சோகம்..!

Image
  ஆகஸ்ட் மாதம் 26 தேதி  அன்று காலை  எல்லோருக்கும் போலவே  உள்ளூர்வாசிகள்  சுற்றுலாப் பயணிகள்  அந்நிய நாட்டினர்  அரசு ஊழியர் என்று  நேபாள் - சீனா எல்லைப் பகுதியில்  குழுமியிருந்த அவர்களுக்கும் விடிந்திருக்கும்...! கிராங் சோதனை மையத்தின்  இருபுறமும், முன்னும் பின்னும், அழகிய பனிமலைகள்  ஆர்ப்பரித்து ஓடும் ஆறு என்று  வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்க ஆங்கே தொலைவில்  பின்னே ஓங்கி உயிர்ந்த  பனிமலையின் ஒரு பகுதி  காலநிலை மாற்றத்தால்  கடல் மட்டத்திலிருந்து  ஐயாயிரம் மீட்டருக்கும் மேலிருந்து  தானாக பெயர்ந்து  கீழே 2000 மீட்டர் பள்ளத்தில்  திரிசூலி நதிமுலத்தில்  செங்குத்தாய் விழ பொங்கிப் பிரளயமாய்  வெளிப்பட்டதோர் ஆழிப் பேரலை கண்ணிமைக்கும் நேரத்தில்  விஸ்வரூபம் எடுத்து  நதியின் கரை நெடுகிலும்  பன்னெடுங்காலமாய் இருந்துவந்த  குடியிருப்புப் பகுதி முழுமைதனையும்  கபளீகரம் செய்து  தன் பெரும்பசியை ஆற்றிக் கொண்டது! எத்தனையோ கனவுகளுடனும்  எதிர்காலத் திட்டங்களுடனும்...