காதல் மழை




மழை பொழியும் நேரம் 
மனம் குளிரும் காலம் 
இதழ் விரியா தூரம் 
இனம் புரியா மோகம் 

சாரல் மழை எந்தன் மேலே விழ
தூறல் எங்கும் உந்தன் மேலே பட 
என்னில் காதல் மழையாய் கொட்டுதடி 
உன்னைக் காணா ஏக்கம் கொல்லுதடி 

ஆகாய வீதிதனில் 
மேகத்துக் கூட்டத்தில் 
பூபாள பாடல் ஒன்று ஒலிக்கின்றது 
அதுவே மழையாக மாறித் தான் பொழிகின்றது 

தீராத விரதத்தில் 
மாறாத தாபத்தில் 
என்னுள்ளே காதல் ஒன்று இருக்கின்றது 
அது உன்னைத் தான் வந்தடையத்  துடிக்கின்றது 

போதும் போதும் 
உன்கொல்லும் மவுனம் 
காலம் மாறும் 
இனி மண்ணில் தூவானம் 

மழை முடியும் தருணம் 
என் மனதுக்குள் நீ வரணும் 
கார் காலம் முழுதும் 
நம் காதல் கதை தொடரட்டும் ...!




 


Comments

Popular posts from this blog

தங்கத் தாரகை

அக்னி குஞ்சொன்று கண்டேன்!

உள்ளேன் அய்யா!