எதார்த்தம் என்பது யாதெனில் ...! சுய கெளரவம் , நேர்மை இரண்டையும் குழி தோண்டி புதைத்து விட்டு , நம்மைச் சுற்றி நடக்கும் சுரண்டல்கள் , அத்துமீறல்கள் , பித்தலாட்டங்கள் , அசிங்கங்கள் ய ாவற்றையும் மனதார அனுமதித்து , செயற்கையாய் ஒரு வேடம்தனை மனமுவந்து அணிந்து கொள்வோமேயானால் அதுவே எதார்த்தம் அதற்கு மற்றொரு பெயரும் உண்டு - பிழைக்கத் தெரிதல் ! இதை செய்யாது போனால் , இவ்வுலகம் நம்மை கை கொட்டி சிரிக்கும் ! பொல்லாப்பு தூற்றும் ! மூடன் என்று நிந்தனை செய்யும் ! இந்த சங்கடத்திலிருந்து தள்ளியிரு க்க முயன்றால் , அதற்கும் கோழை எனும் பட்டம் தரும் ! பாரதி வேண்டியது போல , பராசக்தி தாயிடம் என் மன்றாட்டம் ஒன்றே ஒன்று தான் ! தேவியே என்னை விடு தலை செய் ! மரணம் எனும் மகத்துவத்தை எனக்கு அருள் செய் !
Posts
Showing posts from 2011
இன்னொரு அத்தியாயம்!
- Get link
- X
- Other Apps
ஏதேதோ கடந்து போனாலும் ; எல்லாமும் தொலைந்து போனாலும் ; மிச்சமிருக்கிற வாழ்க்கைதனை , மீண்டுமொருமுறை தொற்றிக்கொள்ள , இன்னொரு அத்தியாயத்தைத் துவங்கத் தான் வ ேண்டியுள்ளது ! எது நமக்கு பிடிக்கிறது , எது நமக்கு பிடிக்காதிருக்கிறது என்பதெல்லாம் இந்த ஜடத்துக்கு இனியும் தேவையில்லை ஆதலால் , புரியாதிருக்கும் புதிராம் இவ்வாழ்க்கை , அது புரியும் முன்னர் , அதை புரிந்து கொண்டதாய் , சற்றேனும் நடிக்க கற்றுக் கொண்டேன் ஆயின் , இனியெல்லாம் நலமே , நலமே ! துவங்கிற்று இன்னுமொரு அத்தியாயம் !
புதுக் குடித்தனம்!
- Get link
- X
- Other Apps
சித்திரைத் திங்கள் முதல் நாளன்று (14 04 11 ) புதுக் குடித்தனம் புகுந்தேன்! மயிலாப்பூரில் ஆதம் தெருவிலிருந்து, கச்சேரித் தெரு சமீபமிருக்கும் பரிபூரண விநாயகர் கோவில் தெருவுக்கு, இடம் பெயர்ந்தேன்! "நானோ" வுக்கும், பைக் -கிற்கும் ஒரு விமோசனம் என்றே சொல்லலாம்! வசதிகள் ஏராளம் கூடவே வாடகையும் தாராளம்! நண்பர்கள் நேரம் கிட்டும் போது, அவசியம் வர வேண்டும்!
"நானோ" வுடன் ஒரு பயணம்!
- Get link
- X
- Other Apps
வெறும் ஆயிரம் கிலோமீட்டர்களே ஓடியிருக்கும் என் இனிய நானோ - வுடன், அழகிய என் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு, குளித்தலைக்கு சென்ற வாரம் சென்று வந்தேன்! இனிமையான அனுபவம்! சென்று வர மொத்தம் 750 கிலோமீட்டர்கள்! நான்கு முறை தலா ரூபாய் 500 க்கு, மொத்தமாக ரூபாய் 2000 க்கு பெட்ரோல் போட்டேன்! பயண தொலைவில், 75 % AC யையும் போட்டுக்கொண்டு ஓட்டிய போதினும், மணிக்கு சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் வரை எங்கும் தங்கு தடையின்றி, எவ்வித அதிர்வுகளுமின்றி இயங்க முடிகிற நானோவால், சுலபமாக 22 KMPL மைலேஜ் தர இயலுகிறது! புதிதாய் கார் வாங்க முனைவோருக்கு, குறிப்பாக நடுத்தர பொருளாதார குடும்பத்தினருக்கு, நானோ கண்டிப்பாக ஒரு வரப்பிரசாதம் எனச் சொன்னால் அது மிகையில்லை! நானோவை நம்பினார்; கைவிடப்படார்!
நானோ என் கன்னுக்குட்டி!
- Get link
- X
- Other Apps
நானோ என் கன்னுக்குட்டி! 14 01 11 - மஹர ஜோதி நன்னாளில், என் இனிய "நானோ" காரை, தனியே சென்று "நானே" புக் செய்கிறேன்! 24 01 11 - எனக்காகவே பிறந்தது போல, என் செல்லம், அழகிய சில்வர் நிறத்தில், கழுத்தில் மாலையுடன், காத்திருக்க, கட்டித் தழுவிக் கொள்ளும் ஆவலில் அருகே சென்று, ஆசையாய் உச்சி முகர்ந்தேன்! என் காருக்கும் உயிர் இருந்தது போல உணர்ந்தேன்! இப்போது, மனோ, அகிலன் இவர்களுடன் என் குடும்பத்தில், என் நெஞ்சத்தில், என் சுவாசமாய், என்னில், என்னுள், கலந்திட்ட "நானோ" !!! பெற்றால் தான் பிள்ளையா? யார் சொன்னது? இதோ, என் "நானோ" எனது இரண்டாவது குழந்தை! யந்திரன் ரஜினிக்கு "சிட்டி" என்றால், என் செல்லத்திற்கு நான் வைக்கும் பெயர், "கன்னுக்குட்டி" இதோ, என் மகன் அயர்ந்து உறங்குகிறான்! தாய் மனோவோ, அவன் தலை கோதியபடி, வெளி உலகத்தை, புன்னகையுடன் ரசிக்க! நானோ, என் "நானோ"வை மெல்ல அதனை வருடியபடி வீதிதனில் உலா வருகிறேன்! கடவுளுக்கு நன்றி! காலத்திற்கு நன்றி!