இன்னொரு அத்தியாயம்!
ஏதேதோ கடந்து போனாலும்;
எல்லாமும் தொலைந்து போனாலும்;
மிச்சமிருக்கிற வாழ்க்கைதனை,
மீண்டுமொருமுறை தொற்றிக்கொள்ள,
இன்னொரு அத்தியாயத்தைத்
துவங்கத் தான் வேண்டியுள்ளது!
எது நமக்கு பிடிக்கிறது, எது நமக்கு பிடிக்காதிருக்கிறது
என்பதெல்லாம் இந்த ஜடத்துக்கு
இனியும் தேவையில்லை ஆதலால்,
புரியாதிருக்கும் புதிராம் இவ்வாழ்க்கை,
அது புரியும் முன்னர்,
அதை புரிந்து கொண்டதாய்,
சற்றேனும் நடிக்க கற்றுக் கொண்டேன் ஆயின்,
இனியெல்லாம் நலமே, நலமே!
துவங்கிற்று இன்னுமொரு அத்தியாயம்!
Comments
Post a Comment