நானோ என் கன்னுக்குட்டி!
நானோ என் கன்னுக்குட்டி!
14 01 11 - மஹர ஜோதி நன்னாளில்,
என் இனிய "நானோ" காரை, தனியே சென்று "நானே" புக் செய்கிறேன்!
24 01 11 - எனக்காகவே பிறந்தது போல, என் செல்லம், அழகிய சில்வர் நிறத்தில்,
கழுத்தில் மாலையுடன், காத்திருக்க, கட்டித் தழுவிக் கொள்ளும் ஆவலில் அருகே சென்று,
ஆசையாய் உச்சி முகர்ந்தேன்! என் காருக்கும் உயிர் இருந்தது போல உணர்ந்தேன்!
இப்போது, மனோ, அகிலன் இவர்களுடன் என் குடும்பத்தில், என் நெஞ்சத்தில்,
என் சுவாசமாய், என்னில், என்னுள், கலந்திட்ட "நானோ" !!!
பெற்றால் தான் பிள்ளையா? யார் சொன்னது?
இதோ, என் "நானோ" எனது இரண்டாவது குழந்தை!
யந்திரன் ரஜினிக்கு "சிட்டி" என்றால், என் செல்லத்திற்கு நான் வைக்கும் பெயர், "கன்னுக்குட்டி"
இதோ, என் மகன் அயர்ந்து உறங்குகிறான்!
தாய் மனோவோ, அவன் தலை கோதியபடி, வெளி உலகத்தை, புன்னகையுடன் ரசிக்க!
நானோ, என் "நானோ"வை மெல்ல அதனை வருடியபடி வீதிதனில் உலா வருகிறேன்!
கடவுளுக்கு நன்றி! காலத்திற்கு நன்றி!
நானோ கலக்கல் மச்சி.
ReplyDelete1980-ல வந்த தமிழ் ஆசிரியர் மாதிரி பேசுறத நிறுத்த மாட்டியா நீ? ;-)