எதார்த்தம் என்பது யாதெனில்...!
சுய கெளரவம், நேர்மை இரண்டையும்
குழி தோண்டி புதைத்து விட்டு,
நம்மைச் சுற்றி நடக்கும் சுரண்டல்கள், அத்துமீறல்கள்,
பித்தலாட்டங்கள், அசிங்கங்கள் யாவற்றையும்
மனதார அனுமதித்து, செயற்கையாய் ஒரு வேடம்தனை
மனமுவந்து அணிந்து கொள்வோமேயானால்
அதுவே எதார்த்தம்
அதற்கு மற்றொரு பெயரும் உண்டு - பிழைக்கத் தெரிதல்!
இதை செய்யாது போனால்,
இவ்வுலகம் நம்மை கை கொட்டி சிரிக்கும்!
பொல்லாப்பு தூற்றும்!
மூடன் என்று நிந்தனை செய்யும்!
இந்த சங்கடத்திலிருந்து தள்ளியிருக்க முயன்றால்,
அதற்கும் கோழை எனும் பட்டம் தரும்!
பாரதி வேண்டியது போல,
பராசக்தி தாயிடம் என் மன்றாட்டம் ஒன்றே ஒன்று தான்!
தேவியே என்னை விடுதலை செய்!
மரணம் எனும் மகத்துவத்தை எனக்கு அருள் செய்!
அருமை நண்றே....
ReplyDeleteதொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...