என்ன தவம் செய்தேன் நான்!
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது ! அதனினும் அரிது என் பெற்றோர்களுக்கு மகனாய் பிறக்கும் வரத்தைப் பெற்றல் அரிது ! எதிலிருந்து துவங்குவது என்றுத் தெரியவில்லை ! முக்கியமான எதையும் விட்டுவிடக் கூடும் பாவம் செய்யும் துணிச்சலும் எனக்கு இல்லை ! பதிவுகள் பலவும் பலகாலம் நான் எழுதி வந்தாலும் இப்பதிவு எழுதும் அவசியம் இப்பொழுது வந்தாகி விட்டதா எனவும் விளங்கவில்லை ! இருப்பினும் இனியும் எழுதாது தாமத்திதால் என் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் என்று எனக்குத் தோணவில்லை ! ஆதலால் துளியும் தள்ளிபோடாது எழுதக் கடவுவது என எனக்கே ஒரு கட்டுப்பாடை வரைந்துக் கொண்டுத் துவங்குகிறேன் ! வருடம் 1970! அந்த இளைஞனுக்கு வயது இருபத்தியொன்பது ! அந்த யுவதிக்கோ இருபத்தியொன்று இருந்திருக்கலாம் ! சொந்தமே ஆனாலும் காதல் செய்வது எனக் கருதி முறைப் பெண்ணிற்கு " கள்ளோ காவியமோ " பரிசளிக்கின்றான் ! காதலியின் கன்னத்தில் வெட்கச் சிவப்பு மறையும் முன் ...
Comments
Post a Comment