Posts

காதலியெனும் சிநேகிதியே...!

Image
காதலியெனும் என் சிநேகிதியே, ததும்பும் உன் மோகம்தனை ஒற்றைக் குவியப் புள்ளியில் உணர்ந்தவனாய், காமம் தலைக்கேறி  மேனிபடர்ந்து, ஆடை களைந்து நாணம் அணிவித்து, பிரளயமாய் பெருகி வெளியேறும் உன் வியர்வைக் கடலில் மூழ்கி சுட்டெரிக்கும் காதல் தணலை அவித்துக் கொள்ள அஞ்சாது  வீறு கொண்டெழுந்த  என் செங்கோலின் திடம் அறியும் முடிவிலா உன் சுரங்கப் பாதையில் என்னைத் தொலைத்து கதறி அழுதுச் சிந்திய என் உயிர்த் துளிகளாய் என்னுள் அடங்க மறுத்து பீறிட்ட  காதலைக் கொட்டியதும்  என் செவி வழிக் கேட்ட உன் அய்ர்ச்சியின் வலியுரைக்க,  மயக்கம் தெளிந்து  என்னை விடுவித்துக் கொள்ள  முற்படுகையில்,  மீண்டும் என்னை  இழுத்து அணைத்து  நெற்றியின் மையமாய் நீ அழுத்திக் கொடுத்த  ஒற்றை முத்தத்தில்  நான் மொத்தமாய் செத்துப் போனேனடி பெண்ணே, என்னை மறுபடியும் உயிர்ப்பிக்க விழைகிறேன்! விலையாக என்னையேத் தருகிறேன்! ஏற்றுக் கொள்! Reply Forward ...

'மழை'யாளக் கரையோரம்....!

Image
மலையாளக் கரையோரம் இன்று மழை 'ஆள'க் கலங்கி நிற்க, கடவுளின் சொந்த நாடு, இன்று முகவரியைத் தொலைத்திருக்க, பிரபஞ்சத்தின் பேய்மழையும் மொத்தமாய் கொட்டித் தீர்க்க, திரும்பிய திசையெல்லாம் கண்ணீர்த் தீவுகளாய்த் தத்தளிக்க, கனவுப் பள்ளத்தாக்கு நடத்திய மரண வேட்டை காண சகிக்காமல் மனம் மரத்து அயர்ந்த வேளையில், தூரத்தில் கேரள சகோதரி ஒருத்தி 'ரக்‌ஷிக்கனும் தெய்வமே' எனும் விசும்பும் குரல் கேட்டு விழித்துப் பார்க்க,   அது 'கனவல்ல நிஜம்' என்றுறைக்க, மனம் பதைத்து, சிதைந்து போனேன்!   ஈவு இரக்கமற்றதா இயற்கை? யாரைக் கேட்பது, புரியவில்லை!

கலைஞர் ...!

Image
இதோ ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது! தமிழக அரசியல் உண்மையில் இன்று அநாதையாகிவிட்டது! கலாமண்டபம் தன் செல்ல நாயகனை இழந்து விட்டது! தமிழ்த்தாய் தன் தலைமகனை காலனுக்கு தாரை வார்த்துவிட்டாள்! ஒரே ஒரு சூரியன் தான்! ஒரே ஒரு சந்திரன் தான்! அதுபோல   ஒரே ஒரு கலைஞர் தான்! மரணம் இன்று அவரைத் தழுவியிருந்தாலும்   அவர் புகழ் இந்த மண்ணில் என்றென்றும் சாகாவரம் பெற்றிருக்கும்!

யார் இந்த தாய்?

Image
யார் இந்த தாய்?   என்ன நினைக்கின்றாள் இப்பொழுது ?   யாருக்காக காத்திருக்கிறாள்?யாரால் புறக்கணிக்கப்பட்டாள்? நாளை வரும்; நல் சேதி வரும் எனும் நம்பிக்கை உந்துதலில் இன்னும் இவள் போல் எத்தனையோ முகமறியா தாய்மார்கள் ஆங்காங்கே தெருவோரங்களில் நாம் தினசரி கடந்து சென்றாலும் என்றாவது ஓர் நாள்   அவர்களை நினைவு கூற இச்சிறு கவிதை எனக்குதவட்டும்!

ஆஞா...!

Image
கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு இருக்கும்வரை ஆஞா எங்களுடன் எங்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது! அவர் எங்களுடன் இருந்த அந்த பத்து வருடங்கள் எங்களால் அவ்வளவு சுலபமாய் மறக்க இயலாது! நெடு நெடுவென உயரம்! இருட்டுக் கறுப்பு நிறம் ! வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா ! எந்த நேரமும் கைவிரலில் சிகரெட் ! அதன் சாம்பலை தட்டுவதற்கு அலுமினிய ஆஷ் டிரே! லொக்கு லொக்கு என இருமல் ! பச்சை பச்சையாய் சளி  என்று ஒரு அபூர்வ கலவைதான் ஆஞா ! 24 மணி நேரமும் "பிள்ளையாரப்பா, ஸ்ரீ ராமஜெயம் " என இறைவன் நாமத்தையோ அல்லது "தனலக்ஷ்மி தனலக்ஷ்மி " என இறந்துபோன மனைவியின் பெயரையோ முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்! அம்மாவிற்கு ஏதோ தன்னால் ஆன உதவிகளை செய்து கொண்டிருப்பார்! எங்கள் பாடப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுப்பார் ; காய்ந்த துணிமணிகளை அழகாய் மடித்து வைப்பார்! தினமும் மாலை மலைக்கோட்டையை சுற்றி வருவார் ; கருப்பண்ண சாமி, மாணிக்க விநாயகர் சன்னதி, சங்கடம...

திருச்சிராப்பள்ளி - சரித்திரம் சொல்லும் பூகோளம் !

Image
  நான் பிறந்து , தவழ்ந்து , வளர்ந்து , இருந்த மண் ! அதன் வாசம் , நேசம் , தாக்கம் , இல்லாமல் நான் இல்லை ! அதனைப் பற்றிய நினைவுகளில் லயிக்கும் போதெல்லாம்   ஏதோ ஒரு இனம் புரியாததோர் சிலிர்ப்பு ! ஒரு மண்ணின் பெருமையினை   அதன் பாரம்பரியமும் , கலாச்சாரமும் தான் பறைசாற்ற வேண்டும் என்பதில்லை ! அனுபவித்த விஷயங்களை , பழகிய மனிதர்களை , புழங்கிய இடங்களை   ஒற்றைச் சொற்கள் மூலமும் கூட விளக்கிட இயலும் ! அவ்வகையில் ,  நான் இருந்த காலகட்டத்தில் , 1985 - 1994 வருடங்களில் , நானும் என்னைச் சார்ந்தோரும் பிரயோகித்த ஒற்றை வார்த்தைகளின்   தொகுப்பை இங்கே வழங்குகிறேன் ! படித்துப் பாருங்கள் ! ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு குட்டி சரித்திரம் !   அது எங்களுக்கு மட்டுமே புரியும் ஒரு பூகோளம் ! ( பொறுப்புத்துறவல்  :   பதிவின் நோக்கம் எவரையும் புண்படுத்துவது அல்ல )     ·       மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம்   ·       ...