காதலியெனும் சிநேகிதியே...!
- Get link
- X
- Other Apps
காதலியெனும் என் சிநேகிதியே,
ததும்பும் உன் மோகம்தனை
ஒற்றைக் குவியப் புள்ளியில் உணர்ந்தவனாய்,
காமம் தலைக்கேறி மேனிபடர்ந்து,
ஆடை களைந்து நாணம் அணிவித்து,
பிரளயமாய் பெருகி வெளியேறும்
உன் வியர்வைக் கடலில் மூழ்கி
சுட்டெரிக்கும் காதல் தணலை
அவித்துக் கொள்ள அஞ்சாது வீறு கொண்டெழுந்த
என் செங்கோலின் திடம் அறியும்
முடிவிலா உன் சுரங்கப் பாதையில்
என்னைத் தொலைத்து கதறி
அழுதுச் சிந்திய என் உயிர்த் துளிகளாய்
என்னுள் அடங்க மறுத்து பீறிட்ட
காதலைக் கொட்டியதும்
என் செவி வழிக் கேட்ட உன் அய்ர்ச்சியின் வலியுரைக்க,
மயக்கம் தெளிந்து என்னை விடுவித்துக் கொள்ள முற்படுகையில்,
மீண்டும் என்னை இழுத்து அணைத்து
நெற்றியின்மையமாய் நீ அழுத்திக் கொடுத்த
ஒற்றை முத்தத்தில் நான் மொத்தமாய் செத்துப் போனேனடி பெண்ணே,
என்னை மறுபடியும்
உயிர்ப்பிக்க விழைகிறேன்!
விலையாக என்னையேத் தருகிறேன்! ஏற்றுக் கொள்!
|
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment