'மழை'யாளக் கரையோரம்....!





மலையாளக் கரையோரம் இன்று
மழை 'ஆள'க் கலங்கி நிற்க,
கடவுளின் சொந்த நாடு, இன்று
முகவரியைத் தொலைத்திருக்க,
பிரபஞ்சத்தின் பேய்மழையும்
மொத்தமாய் கொட்டித் தீர்க்க,
திரும்பிய திசையெல்லாம்
கண்ணீர்த் தீவுகளாய்த் தத்தளிக்க,
கனவுப் பள்ளத்தாக்கு நடத்திய
மரண வேட்டை காண சகிக்காமல்
மனம் மரத்து அயர்ந்த வேளையில்,
தூரத்தில் கேரள சகோதரி ஒருத்தி
'ரக்‌ஷிக்கனும் தெய்வமே'
எனும் விசும்பும் குரல் கேட்டு விழித்துப் பார்க்க, 
அது 'கனவல்ல நிஜம்' என்றுறைக்க, மனம் பதைத்து,
சிதைந்து போனேன்! 
ஈவு இரக்கமற்றதா இயற்கை?
யாரைக் கேட்பது, புரியவில்லை!

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை