திண்டுக்கல் பிரியாணி
திண்டுக்கல் பிரியாணி திண்டுக்கல் என்றால் நினைவுக்கு வருவது பூட்டு - இது அந்தக் காலம்! இப்போது காலம் மாறி விட்டது! திண்டுக்கல் என்றால், இப்போதெல்லாம் பிரியாணி தான்! எல்லா நேரமும், விடியற்காலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு பன்னிரண்டு மணி வரை, நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில், சூடான பிரியாணி கிடைக்கிறது. சாப்பிடனும்னு உங்களுக்குத் தோன்றினாலே போதும்! பிரியாணி தயார்! தலப்பாக்கட்டி, வேணு கடை, பொன் ராம், ஜே பி, இப்படி கடைப்பெயர்கள் அங்கே பிரபலம்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை! ஆனால், எல்லாமே அருமை! திண்டுக்கல் சென்றால், அவசியம் பிரியாணியை ஒரு பிடி பிடித்து வாருங்கள்! நமக்கு ஜென்ம பலன் உறுதி!