ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன?
ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன?
இடுகை எழுதும் எல்லோருக்கும் வணக்கம்!
இவ்விடுகையின் நோக்கம் பெரிதாய் ஒன்றும் இல்லை!
ஆனால் ஏதும் இல்லாமலும் இல்லை!
இடுகை எழுதும் அவசியம் என்ன? என
என்னையே நான் கேட்டுக்கொள்ளும் அவசியம்
வந்தபடியால் இவ்விடுகை எழுதியாக வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்!
காரணம் சொல்லும் அளவுக்கு காரணங்கள்
இல்லாது போனாலும், ஏதாவது ஒரு காரணம்
கிடைக்காது போய்விடாதா என்ன?
தினமும் ஒன்று என்றது போயி,
வாரம் கட்டாயம் ஒன்று என்று முடிவெடுத்து,
கடைசியில் கண்டிப்பாக மாதத்திற்கு இருமுறை என்றாகி,
இப்பொழுது, நண்பன் ஜோ, "மவனே, எழுதுறியா இல்லையா?"
என்று கொலை மிரட்டல் விடுத்ததும்,
எழுதியே தீர்வது என்று முடிவு எடுத்ததும்,
மண்டையில் ஒரு மண்ணும் உதிக்காததால்
ஏற்பட்ட விபத்து, இவ்விடுகை!
ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன?
வெரிகுட்
ReplyDeleteஉங்கள் பதிவில் எழுத்துப் பிழைகளே இல்லை.
நல்ல எழுத்து நடை
அடிக்கடி எழுதுங்கள்
//
ReplyDeleteஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன?
//
That's a very good question.
Please write the chain post about your school experiences and invite another blogger.
Thank you,
Yours faithfully,
Joe