அக்னி குஞ்சொன்று கண்டேன்!
அக்னி குஞ்சொன்று கண்டேன்!
இன்று அதிகாலை
என் வீட்டின் முகவறையில்
தங்க ஜ்வாலையாக
அக்னி குஞ்சொன்று பிரவேசிக்கக் கண்டேன்!
கண்டதும் பேரானந்தம் கொண்டேன்!
கைகளினில் அள்ளி மேனி முழுமையும் பூசிக்கொண்டேன்!
முப்பாட்டன் பாரதியே என்னைத் தழுவியதாய் எண்ணி,
உடல் சிலிர்த்து போனேன்!
சமூக கோபங்கள் ரணங்களாய் எரித்தாலும்,
அவன் தழுவியதில் அவையாவும்
சாம்பலாய் பறக்கக் கண்டேன்!
ஆம், பாரதி ஒரு அமரன்!
அவன் கண்டெடுத்த அக்னி குஞ்சொன்றை
பார்க்கப் பெற்றதனால்,
நானும் அவனுடன் சேர்ந்து அமரனாகிப் போனேன்!
arumai.
ReplyDelete//கைகளினில் அள்ளி மேனி முழுமையும் பூசிக்கொண்டேன்!
ReplyDeleteமுப்பாட்டன் பாரதியே என்னைத் தழுவியதாய் எண்ணி,
உடல் சிலிர்த்து போனேன்!
//
அருமையான வெளிப்பாடு , தொடர்க .
அருமையான கவிதை மணி!
ReplyDeleteகடைசி நான்கு வரிகள் சற்று குளறுபடி என்று நினைக்கிறேன், அல்லது எனது அறியாமையின் காரணமாக விளங்காமல் போயிருக்கலாம்.
நண்பர் தமிழ்க்காதலன் விமர்சனத்துக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஉங்கள்தம் உற்சாகம்; அடியேனுக்கு உத்வேகம்!
மீண்டும் நன்றி!
என்னாத பேரானந்தம். சென்னைல எப்போ பார்த்தாலும் அக்னி நட்சத்திரம் போல தான் இருக்கு. இதுல இவரு சூரிய ஒளியை
ReplyDeleteதங்க ஜுவாலையாக வர்ணனை செய்வது எல்லாம் கொஞ்சம் ஓவெர்த்தான் ..பூரா பயலும் இப்படி பூசி தான் கரு கரு இருக்ாங்க போல..