வாரங்கள் மூன்று ஆயிற்று, இப்படி நான் இருந்து நானே என்னைப் பார்த்ததில்லை! பசி தெரியவில்லை! தூக்கம் சரியில்லை. வாரம் முழுக்க சட்டை மாற்றவில்லை... முகச்சவரம் தவறியிருக்கிறது. நான் நானாக இல்லை. ஏனென்று புரியவில்லை! ஆனாலும் இது எனக்கு ஒருவிதமாய் பிடிக்கத்தான் செய்கிறது! பிரபலத் தமிழ்தொலைக்காட்சியில் இந்த வருடம் உலகநாயகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி வண்ணமயமாயிருக்கின்றது! காரணம் அழகுப்பெண்களின் சங்கமமா? இருக்கலாம்! அதிலும் புலம்பெயர்த் தமிழச்சியின் வருகை, என்னைப் போன்றவர்களையும் தடுமாறச் செய்கிறது! அந்தத் தடுமாற்றம் சுகமானச் சங்கடமாயிருக்கிறது...! அந்த அழகுச் செறிவின் தாக்கம், அவளின் பேச்சினிலும், சிந்தும் புன்னகையினிலும், 'கவி'த்துவமான ஊடலிலும், பொங்கும் கண்ணீரினிலும், சினத்தினுலும், ஆற்றாமைத் தயக்கத்தினிலும், ஓர் ஈழத் தேசத்து சோக அத்தியாயங்களின் ஆறா ரணக் கீற்றுப் பிளம்பாய், என்னையும் காயப்படுத்தக் கண்டேன்! திமிரும் அவளின் இளமையின் கணம் உணரத் தெளிந்தேன்! மாற்றான் தோட்டத்து மல்லிகையல்ல அவள்! ...