நடைப்பயிற்சிக் கவிதை
விடியலில் மொட்டுகள்
துளிர்க்கும் தருணம்..!
வானம் வெட்கிச் சிவக்கும்;
மனமோ, செங்கொன்றைப்பூச் சிவப்பாய் பற்றி எரிய,
அங்கே வெள்ளை
மலர்ப் பாதைதனில்
என்னை கொள்ளை கொண்டு போனவளின் கால்தடம் தேடித்திரிய,
அடங்க மறுக்கும் காதல் எரிதழலைத் தணிக்கும் மருந்தாய்
சிந்தும் அவளின் இனம்புரியா
ஓர் குளிர்ப் புன்னகை!
அழகுப் பெண்கள் எவராயினும்
கவிஞர்கள்களின் கற்பனையில்
காதலிகள் தானே....!
பா. மணிகண்டன்
Comments
Post a Comment