கடற்கரைக் கவிதை...!
ஓயாது ஆர்ப்ப்ரிக்கும் கடற்கரையை, உற்றுநோக்கும் தங்கத் தாரகையே!
எங்கிருந்து வந்தாய் நீ?
விண்ணைத்
தாண்டி வந்தாயோ??
இல்லை,
விடியா என் இரவுகளின்
விண்மீனாய் வந்தாயோ?
என்ன சொல்ல நினைக்கிறாய் நீ,
என்னைக் கொல்லாமல் கொல்லும் தீ...!
ஆதவனே உதிக்காது போனாலும்,
ஓயாத அலைகள் நின்றாலும்
உன் மீது நான் கொண்ட காதல்,
மாறாது, தீராது..!
வா பெண்ணே,
என் கைகோர்த்துக் கொள்!
முடிவிலிகளாம் நம் பயணங்கள்!
அதனை மீண்டும் தொடர்வோம்...!
பா.மணிகண்டன்
Comments
Post a Comment