லாஸ்லிய கீதம்
பப்பரா பரா பரா பரபப்பரா...
பப்பரா பரா பரா பரபப்பரா...
உனை நான் உணராத வாழ்வை எண்ணி
வெதும்பினேன் மலரே..!
உனையன்றி இனி வாழ்வே இல்லை
தவிக்கிறேன் தளிரே..!
நீ இருக்குமட்டும் எந்தன் ஜீவன் சப்தம்
துடிக்குமே உயிரே..!
உன் ஸ்பரிசங்கள் வருடா என் தேகம்
பாலை வனமாகுமே...!
உனைப் பாடா எந்தன் தமிழோ
பெரும் பிழையென வாகுமே...!
உனைச் சேரா எழுதிய கவிதை
வழிமாறி தடுமாறுமே...!
பப்பரா பரா பரா பரபப்பரா...
பப்பரா பரா பரா பரபப்பரா...
காடும் மலையும்
நதியும் கடலும்
விண்ணும் மண்ணும்
ஒலியும் ஒளியும்
நீ சென்ற பாதை ஓடி வருவேன்
நடந்த சுவடைத் தேடி அலைவேன்
நீ வாழும் தேசம் காணாது போனால்
என் வாழ்வு நாசம் நாசமடி..!
உன் ஒற்றைப் பார்வை எந்தன் மேல்பட்டால்
என் ஜீவன் மோட்சம் கொள்ளுமடி...
சகியே. .. சகியே
உயிரின் லயமே....
லியா.... என் லியா... லாஸ்லியா...
பப்பரா பரா பரா பரபப்பரா...
பப்பரா பரா பரா பரபப்பரா...
- மணிகண்டன். பா
Comments
Post a Comment