மீண்டு வா மகனே...!
சுஜித்... மீண்டு வா மகனே...!
உன்னைப் பெற்றத் தாயோ கண்ணீரோடு வெளியே கலங்கி காத்து நிற்க,
நீயோ பூமித்தாயின் கருவறை ஆழம் பார்க்கச் சென்றாயா?
உன்னை மீட்டெடுக்கும் முயற்சியில்
இரவு பகல் பாராது,
குடும்பங்களை மறந்து,
பண்டிகையைப் புறக்கணித்து,
போராடி வரும்
மாநில மத்திய
பேரிடர் மேலாண்மை செயல்வீரர்களின் ஒரு மித்த நோக்கம் விரைவில் ஈடேறிடும் தருணம் மிகத் தொலைவில் இல்லை...!
பாறைகள் வேண்டுமானால் கரடுமுரடாய் இருக்கலாம்!
ஆனால் அதனைக் குடையும் எந்திரத்தின் உறுதியைக் காட்டிலும் வலிமையானது உனக்காகக் காத்திருக்கும் இந்த தேசத்தின் மனோபலம்..!
கண்ணா, வா வெளியே வா!
மறுபிறவி எடுத்து வா!
பா. மணிகண்டன்
Comments
Post a Comment