Posts

அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..!

Image
  அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..! வடக்கில் பால ராமனாய் அவதரித்தவன், தெற்கில் பால "தன்வீ"யாயன்றோ  இன்று மீண்டும் உதித்தனன்..! மிதிலையின் அரசன் ஜனகனின் சுவீகார புத்ரியை சுயம்வரம் செய்திட சக்ரவர்த்தித் திருமகன் ராமன்  வில்லை உடைத்து அரங்கேறியது சீதா கல்யாண வைபோகம் அன்று! வில்லெனும் தன் அழகிய கண்களால் "தன்வீ" ராமன் காதலாய் சீதையை நோக்கிட அடையாரில் அரங்கேறியது  மழலையர் சீதா கல்யாணம் இன்று! இந்திய பெருநாட்டின்  மேன்மை மிகு அடையாளமாம் அயோத்தி ராமர் கோவில்தம் வசீகரத்தில் லயித்திருந்த எங்களின் கண்களுக்கு, தன் சின்னஞ்சிறு உடல் மொழியால் மேடையில் விந்தையாய் சீர்மிகு விருந்து வைத்தனள் எங்கள் இல்லத்து இளவரசி தன்வீ..! கற்சிலையேயாயினும் கடவுளாய் ராமன் அயோத்தியில் எழுந்தருளிய காட்சிதனை காணக் கோடி மக்கள் தவமிருக்க, இங்கே உயிர்பெற்ற சிலையாய் ராமன் தன்வீயாய் வலம்வரும் காட்சி கிடைத்திட என்ன தவம் நாங்கள் செய்தோமடா??

கொரிய நாட்டுப் பைங்கிளியே.!

Image
அகண்ட விழிகளால்  என்னை ஆட்கொண்ட கொரிய நாட்டுப் பைங்கிளியே.! கள்ளூரும் உந்தன் ஒற்றைப் பார்வைதனில் சிக்குண்டபின்னே பசியோ ருசியோ அறிகிலேனடி...! இதழ் விரித்து நீ பேசச் சிதறும் எச்சில் என் ஸ்பரிசம் பட்டால்  என் ஆத்மா அன்றோ புனிதமடையும்..! பார்த்தது போதும்.. பேசு... உன்னை மானசீகமாய்  காதல் கொண்டவனிடத்து  என்ன வேண்டுமானாலும் வினவு... உனக்காக கடல் கடந்து வந்தாவது உந்தன் காலடி சேர்த்து விட மாட்டேன்னா என்ன? சகியே..என் சக்தியே...! இவ்வுயிர் இருக்குமட்டும் உன் காதல் துதி பாடிட சலிக்க மாட்டேனடி பெண்ணே...!

அன்பே வா அருகிலே

"சித்ரா, நாளைக்கு காலையில, ஏர்லியரா கிளம்பணும், ட்ரைவரை நாலரை மணிக்கெல்லாம் வரச் சொல்லியிருக்கேன்.  மதுரையில் மீட்டிங் முடிச்சுட்டு, மேகமலை எஸ்டேட் வரை போகணும்.  ஷவரில், நனைவதற்கு முன் சொல்லி விட்டு, தாழிட, அவனை துண்டு கொடுக்கும் சாக்கில் இறுக்கி அணைத்தாள்.  "சித்து, தாலி குத்துதடி விடுடி" என்றவுடன் விருப்பமில்லாமல் விடுவித்தாள். அவர்களுக்கு திருமணமாகி 6 வாரங்களே ஆகின்றன.  OMR இல் பாஷ்யம் அப்பார்ட்மெண்ட் 14ஆவது தளத்தில், கடலைப் பார்த்த மாதிரி 4 BHK பிளாட் அவர்களுடையது.  கதிர், இன்போசிஸ் கம்பெனியில் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருக்கிறான்.  கல்யாணத்துக்கு முன், இரண்டு வருடங்கள் கனடாவில் ஒட்டாவா நகரில் ஆன்சைட் அசைன்மெண்டில் இருந்து வந்தான்.  அம்மாவின் பிடிவாதம் காரணமாக, கல்யாணத்திற்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டவன், சித்ராவை பார்த்ததும், முடிவை மாற்றிக் கொண்டவன்.   சித்ரா, கதிர் முதன் முதலில் பார்த்ததை நினைத்துக் கொண்டாள்.  மாலை 6 மணியளவில், மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள் என, வீடே அல்லோகலப்பட்டது.  "சென்னையிலிருந்து ட்ரைவ் பண்...

உயிர்ப்பறவை

இன்று பிப்ரவரி 14...  நேரம் மாலை 5:40... சென்னை 2028..! மேகா வந்து அரை மணி நேரமாகி விட்டது.  அடையாறு கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில், பாதி அழிந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு அவள் வந்து அரை மணிக்கும் மேலாகத் தான் ஆகி விட்டிருந்தது.  பாலத்தின் அடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.   "அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றது அந்த நீலப்பாவாடைச் சட்டை அணிந்திருந்த சிறுமி.  மேகா, இலேசாக புன்முறுவல் செய்தாள்.  முழுமையாய் அவளால் சிரிக்க முடியவில்லை.  காரணம், ஆகாஷ்.  மதியம் பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பும் போது, இன்று மாலை 5 மணிக்கு அவர்களுடைய பேவரிட் ஸ்பாட் - பட்டினப்பாக்கம் பழைய பாலத்தில் சந்திப்பது என்று ஆகாஷ் சொல்லியிருந்தான்.  அதனால் தான் நிற்கிறாள்.  அவன் வருகைக்காக காத்திருக்கிறாள்.   காற்று பலமாக வீசுகிறது  நெற்றியில் கற்றையாய் முடி மீண்டும் மீண்டும் விழ, அதை சரி செய்து சரி செய்து தோற்றுப் போனாள்.  வெளிர் நீல குர்தாவும், ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்தாள். கண்களில், "ரே பான்" அவளை மேலும் ந...

புறவழிச்சாலை

தேநீர்க்கடை மழை அப்பொழுது தான் விட்டிருக்க வேண்டும்.  சாலையெங்கும் நீர்த் தெப்பங்களாயிருந்தது. அருகாமை பெரிய கட்டிடங்கள், தேங்கியிருந்த தண்ணீரில் தலைகீழாய் தெரிந்தன.  வானம் இன்னும் மேகத் திரள்களாய்த் தெரிந்தது. மழை மீண்டும் வரலாம்.  வராமலும் போகலாம்.  விடியற்காலையாதலால், அதிக நடமாட்டமில்லை.  அந்த சாலையின் இடது திருப்பத்தில் ஒரு தேனீர்க்கடை இயங்குவதுத் தெரிகிறது.  மெல்லியதாய் கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்கின்றது.   அருகில் செல்லச் செல்ல ஒலியின் அளவு கூடிற்று. ஒரு போலீஸ்காரர் ஸ்டூலில் இருந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். "அண்ணா, ஒரு டீ, சுகர் கம்மியா" அந்தப் பெண் கேட்டதும், கடைக்காரர் ஆச்சர்யமாய் பார்த்தார்.  டீ ஆற்றிக் கொண்டு அவளை அரைகுறையாய் நோட்டம் விட்டார்.  மாநிறம், சராசரிக்கு சற்று உயரம்.  சுடிதார்  அணிந்திருந்தாள்.  தலை வகிடின் ஆரம்பத்தில் குங்குமம் கலைந்திருந்தது. நெற்றியில் போட்டு இல்லை. கைகளில் ஒரு சிறிய பை. அதில் செல்போன் செருகியிருந்தாள். பெரிதாக நகைகள் ஏதுமில்லை. வயது நடுத்தரமாக இருக்கலாம். கண்கள் சிவந்திருந்தது...

அந்தி மழை பொழிகிறது ...!

அந்தி மழை பொழிகிறது ...! மண் வாசமும் உன் வாசமும் கலவையாய் காதலாய்... உன் அருகாமை நெருக்கத்தில்  புறப்பட்ட தனலோ என்னில் புயலாய் வீச   பொங்கிய வியர்வைத் துளிகளை ஒற்றிக் கொள்ள  உன் முந்தானையை அன்றோ தேடுகிறது மனம்..!!! "பாப்பா அழுகின்றாள்"  என விருட்டென எழுந்து சென்றாய் ... நீயெழுந்த வேகத்தில், சேலையின் முந்தியில்  என்னில் எழுந்த விரகத் தீயினை  முழுதாய் அணைத்திட அன்றோ துணிந்தாய்...! இல்லறம் பேணும் நல்லறம்  தாம்பத்திய சமரசங்களால் ஆனதேயாயினும்  அதிலும் ஓர் சுகமன்றோ இருக்கிறது ...! பாவமாய் உனை நான் காதல் யாசிக்க , "குழந்தையை விடவா ?"  என நீ  செல்லமாய் அதட்டினாலும்  வெட்கச் செறிவினை கவிதையாய்  கண்கள் பேசிட , என் வேட்கையின் தாகம் தீர  அழுத்தியணைத்து இதழ் பதித்து முத்தமிட்டால்  ஜீவ சாபல்யமன்றோ அடைவேன் ...! மகளை தூங்கச் செய்தாயெனின் விரைந்து வா , காதலாய் காத்திருக்கிறேன், நிலவு பொழிகிறதடி பெண்ணே ...! 

ஐயப்பன் துதி

  ஒப்பில்லா இறைவன் நீ ...! உலகாளும் அரசன் நீ  எண்ணிலா அடியவர் நெஞ்சில்  ஆட் சி செய்யும் தலைவன் நீ ..! விண்ணிலும் மண்ணிலும்  வேதப் பொருள் யாவிலும்  என்னிலும் உன்னிலும்  யாவையுமாய் நிறைந்தவன் நீ...! உனையின்றி வேற்றொன்றும் அறியேன் நான்  உன் நினைவன்றி யாதொன்றும் உய்யேன் நான்  உன் திருநாமம் சொல்லாமல் வாழ்வேது  மணிகண்டா நீயின்றி நானேது? வாழ்வது ஓர் வாழ்க்கை நீ தந்தது  உன்னை வாழ்த்தாமல் என் வாழ்வு ஓயாது  உன் சன்னதி வாராத வாழ்வென்று  எந்நாளும் என் மனம் அறியாதது ...!