Posts

"கார்"காலம்

Image
புலி வருது; புலி வருது போல், இந்தோ வருது; அந்தோ வருதுன்னு, எனக்கும் கொஞ்ச நாள்ல காரும் வரத்தான் போகிறது போல! நினச்சா பெருமையா இருந்தாலும்; கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது முக்கியம்னு உள்ளூர மனசு சொன்னாலும், வாய்னு ஒன்ணு கீதே! அது சும்மா கிடக்காம, சாதி சனம் எல்லார் கையிலயும் சொல்லிக்கினு தான் திரியுது! அல்லாம் சரி, நிஜமாலுமே காரு வந்துட்டா...! நம்ம ஆதம் தெருவுல, எங்கே கொண்டு போயி அப்பால நிறுத்தறதுன்னு, ஒரே கவலையா கீதுபா! பேசாம காரு பார்கிங்கோட ஒரு வீட்ட பாத்துடலாம்னா, வாடகை மவனே எக்குத்தப்பா கீது! இன்னா பண்றது??? நயினா, யாராவது ஒரு நல்ல ஐடியா கொடுங்கபா! புண்ணியமா போகும்! "நயினா, காரு தானே வேணும், இந்தா பிடின்னு" மவன் அகிலன் ஒரு விளையாட்டு கார கையில கொடுக்கவும், நமக்கு லேசா மயக்கம் தெளிஞ்ச மாதிரி இருந்துச்சு! மெய்யாலவும், காரு வரத்தான் போகுதா?????

தியோசொபிகல் சொசைடியில் ஒரு நாள்...!

Image
தியோசொபிகல் சொசைடியில் ஒரு நாள்...! நேற்று சென்னை அடையாரில் உள்ள தியோசொபிகல் சொசைட்டிக்கு ஒரு பணி நிமித்தமாகி முதன் முறையாகச் சென்று வந்தேன்! என்னை முற்றிலுமாகத் தொலைத்து வந்தேன்! SEEING IS BELIEVING என்று சொல்வார்கள்! அது 100 சதவிகிதம் உண்மை! நகரச் சந்தடிகளுக்கு நடுவே, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், இயற்கை, அதன் பொலிவு மாறாமல் ரம்மியமாய் நிரம்பி வழிந்து கொண்டு, எங்கும் மரச் செரிவுகளும், அடர் பசுமைகளும் என அமைதியாய் ஒரு வனச் செழுமை அந்த இடத்தில் வியாபித்து இருந்ததைப் பார்த்து, என்னை முற்றிலுமாகத் தொலைத்து வந்தேன் என்பேன்! சென்னையில் எத்தனையோ இடங்கள் பார்ப்பதற்கு இருப்பினும், இப்படி ஒரு அதிசயமும் உள்ளதை நினைக்கையில் பெருமையாகவும், நிறைவாகவும் இருக்கத்தான் செய்கிறது! http://www.ts-adyar.org/ - இந்த வலைத்தளம் உங்களை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை! THERE IS NO RELIGION HIGHER THAN TRUTH - உண்மை தானே???!!

இளைப்பாறல்கள்!

Image
கொஞ்சம் தேநீர்! நிறைய ஆசுவாசம்! பொங்கிய வியர்வை அடங்கும்! புத்துணர்வு பிறக்கும்! நாளை வரும்! நல் வேளை வரும்! நலமாய் நாலு சேதி வரும்! நம்பிக்கை தானே வாழ்க்கை! இளைப்பாறல்கள்! இனிதே; இனிதே!
Image
நாலு நாள் காலி; பாக்க போலாம் ஜோலி!!!! இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, இந்தோ வந்திருச்சி, நாளையிலிருந்து ஜாலியா நாலு நாள் பொங்கல் லீவுன்னு, அவனவன் ஊரப்பாத்து போனாலும், இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, மவனே லேசா வவுறு கலக்கல? "நாலு நாள் காலி, பாக்க போலாம் ஜோலின்னு" பேசாம கம்ம்னு கிளம்பி வந்துடுங்கன்னா! பொங்கல் இதோ இன்னும் 362 நாட்கள்ல ஓடி வந்துடப் போகுது! மறுபடியும் ஜாலி தான்!

திண்டுக்கல் பிரியாணி

Image
திண்டுக்கல் பிரியாணி திண்டுக்கல் என்றால் நினைவுக்கு வருவது பூட்டு - இது அந்தக் காலம்! இப்போது காலம் மாறி விட்டது! திண்டுக்கல் என்றால், இப்போதெல்லாம் பிரியாணி தான்! எல்லா நேரமும், விடியற்காலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு பன்னிரண்டு மணி வரை, நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில், சூடான பிரியாணி கிடைக்கிறது. சாப்பிடனும்னு உங்களுக்குத் தோன்றினாலே போதும்! பிரியாணி தயார்! தலப்பாக்கட்டி, வேணு கடை, பொன் ராம், ஜே பி, இப்படி கடைப்பெயர்கள் அங்கே பிரபலம்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை! ஆனால், எல்லாமே அருமை! திண்டுக்கல் சென்றால், அவசியம் பிரியாணியை ஒரு பிடி பிடித்து வாருங்கள்! நமக்கு ஜென்ம பலன் உறுதி!

நாளை அக்டோபர் 25!

Image
நாளை அக்டோபர் 25! முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால், திருச்சி தில்லைநகர் சகுந்தலா நர்சிங் ஹோமில், அன்புத் தாய் தேவ மனோகரிக்கு பிறந்தது ஒரு அழகிய ஆண் குழந்தை! சரி அதுக்கு என்ன இப்போ? நீங்கள் கேட்பது புரிகிறது! ஒன்றுமில்லை அந்த குழந்தை பெரிதாய் ஒன்றும் சாதிக்க விட்டாலும் ஏதோ இந்த பதிவை எழுதும் மட்டுமாவது கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறது! அவ்வளவுதான்!

பசுமையான அந்த பத்து வருடங்கள்!

Image
பசுமையான அந்த பத்து வருடங்கள்! 1985 ஆம் ஆண்டு, முதன் முதலில் காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி மாநகருக்கு எங்கள் ஜாகை மாற்றப்பெற்றது! அப்பா, முனிசிபல் பொறியாளராய் இருந்தவர், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாற்றம் பெற்றார்! அப்பாவுக்கு ஒரு பழக்கம். எங்கெல்லாம் அவருக்கு மாற்றல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எங்களையும் உடன் கூட்டிக்கொண்டு சென்று விடுவார்! திருச்சி வரும் முன்னர், நான் காரைக்குடி, மார்த்தாண்டம், சென்னை அம்பத்தூர், தேவகோட்டை என்றெல்லாம் சுற்றியிருக்கிறேன்! அப்பாவுக்கு நன்றி! நான் ஒரு கலா ரசிகனாய் இருப்பதற்கு ஒருவேளை இது கூட அச்சாரமாய் இருந்திருக்கலாம்! திருச்சியில், முதலில் நாங்கள் செக்கடித் தெருவில், பாப்பாக்கா வீட்டு மாடியில், நான்கு புறமும் சுவர், தலைக்கு மேல் மூங்கில் கீற்று கொட்டகை, தகர டின் தடுப்பு குளியல் மற்றும் கழிவறை, மழை வந்தால் ஆங்காங்கே சொட்டும் தண்ணீரை நிரப்ப அலுமினிய பாத்திரங்கள், வெயில் அடித்தால் தரை எங்கும் ஜொலிக்கும் சூரிய வெளிச்ச வைரங்கள் என ஒரு அட்டகாசமான சூழலில் தான் வாழத் துவங்கினோம்! அந்த வீட்டுக்கு வராத நண்பர்களும், உறவினர்களும் இல்லை; அந்த வீட்ட...