மேள சப்தத்தை கேட்க, பார்க்க மற்றும் படிக்க உங்களை அழைக்கிறேன்!
இளைப்பாறல்கள்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கொஞ்சம் தேநீர்! நிறைய ஆசுவாசம்! பொங்கிய வியர்வை அடங்கும்! புத்துணர்வு பிறக்கும்! நாளை வரும்! நல் வேளை வரும்! நலமாய் நாலு சேதி வரும்! நம்பிக்கை தானே வாழ்க்கை! இளைப்பாறல்கள்! இனிதே; இனிதே!
தங்கத் தாரகை திகட்டாத பூமழை விண்மீன் வானிலே ஒளிரும் புன்னகை அன்பின் சிகரம் நீ அழகின் உச்சம் நீ காந்தக் கண்ணினால் கவரும் கவிதை நீ உன்னைப் பார்த்த அந்த முதல் பொழுது மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன் எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன் நீ பேசும் ஓர் மௌன மொழி ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை இந்த பூமி எங்கும் பூக்களடி நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...
அக்னி குஞ்சொன்று கண்டேன்! இன்று அதிகாலை என் வீட்டின் முகவறையில் தங்க ஜ்வாலையாக அக்னி குஞ்சொன்று பிரவேசிக்கக் கண்டேன்! கண்டதும் பேரானந்தம் கொண்டேன்! கைகளினில் அள்ளி மேனி முழுமையும் பூசிக்கொண்டேன்! முப்பாட்டன் பாரதியே என்னைத் தழுவியதாய் எண்ணி, உடல் சிலிர்த்து போனேன்! சமூக கோபங்கள் ரணங்களாய் எரித்தாலும், அவன் தழுவியதில் அவையாவும் சாம்பலாய் பறக்கக் கண்டேன்! ஆம், பாரதி ஒரு அமரன்! அவன் கண்டெடுத்த அக்னி குஞ்சொன்றை பார்க்கப் பெற்றதனால், நானும் அவனுடன் சேர்ந்து அமரனாகிப் போனேன்!
வணக்கம். இது எனது முதல் இடுகை. கன்னி முயற்சி என்பதால் பிழையேதும் இருப்பின் மன்னிக்கவும். இன்று நான் மீண்டும் பிறந்ததை உணரும் தருவாயில், என்னில் என்னை மீண்டும் கண்டுகொண்டதை அறியும் பொழுதில், ஏறக்குறைய வெற்றி பெற்று விட்டேன் என்றே சொல்லலாம்! "பதிவுதனில் இணைவதன் வாயிலாய்... மத்தளத்தின் ஒலி, வெறும் சத்தமாய் இல்லாமல், இசையாக இருக்க வேண்டுமென்பதே எனதாசை! " .... மீண்டும் ஒலிக்கும்!
Comments
Post a Comment