Posts

திருப்பள்ளியெழுச்சி

Image
நான் தினமும் காலையில் விழிக்கும் பொழுது... அருகில் நீ இன்னும்  நித்திரை கலையாதிருக்கின்றாய்... கலைந்து கிடக்கும் உன் கேசம்... அதில் முழுவதுமாய் வியாபித்திருக்கும்  பெண்ணே உன் வாசம்...! உன்னை எழுப்ப மனமில்லாமல் உன் முகம் பார்த்து காத்திருப்பேன்.. நான் முழித்தது உணர்ந்து மெல்லிதாய் விழித்தும் விழிக்காமல் கண்களைத் திறந்து மூடிக்கொள்வாய்.. "இன்னும் கொஞ்சம் நேரம்ப்பா" உன் குரல் கொஞ்சலாய் கெஞ்சும்... நெற்றிப் பொட்டு இடம் மாறி இமைதனில் ஒட்டிக் கொண்டிருக்கும்.. சிரித்துக் கொள்வேன்... வறண்டிருக்கும் உன் இதழ்களுக்கு முத்தங்களால் ஈரம் நனைத்திட்டு என்னை மெதுவாய் உன்னிடத்திலிருந்து  விடுவித்திக் கொள்ள முயற்சிப்பேன்... மீண்டும் என்னை  இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு செல்லமாய் வன்முறை செய்கின்றாய்..! என்னை தினசரி  கொல்லாமல் கொல்கின்றாய்..! "தோழியே ....காதலியே...!  போதும் எழுந்திடு..!" எனக் கரையும் உன் காதலனின்  திருப்பள்ளியெழுச்சி  உன் செவிதனில் விழவில்லையா?? நம் காதலின் செய்திகள் தரவில்லையா?? பா. மணிகண்டன்

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

Image
  சமீபத்தில் புதுச்சேரியில்  அரங்கேறிய நிகழ்வு, தலைநகரின் 'நிர்பயா' சம்பவம் விளைவித்த அதிர்வலைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல...! பிஞ்சுகளையும் புசிக்கத் தயங்கா காமுகர்களின் அரக்க குணம் போதை வஸ்துவின் புழக்கத்தால் தூண்டப்பட்ட ஒன்று எனக் காரணம் அறியப்பட்டாலும், பலியான அந்த குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தம் எப்படித் தேடுவது? என்ன பாவம் செய்தது  அந்தப் பெண் குழந்தை?? அதனைப் பாதுகாக்கத் தவறியது யார் குற்றம்? அதனைப் பெற்றோரா? இல்லை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்தச் சுயநல சமூகமா? சட்டம் ஒழுங்கை கண்காணிக்கத்  தவறிய காவல் துறையா? இல்லை அந்தக் காவலர்களை தங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாதுகாப்பு செய்திடப் பணித்த அரசியல்வாதிகளா? இல்லை இவற்றினையெல்லாம் அரங்கேற்றி வேடிக்கை பார்க்கும் அந்த மகா சக்தியா? இல்லை அப்படி ஒன்று தான் உளதா? கேவலமான இந்த அவலங்களைப் வெறும் செய்தியாக  கேட்டுக் கடந்து போகாமல், பாட்டன் பாரதிதாசன் சொன்னது போல... "பண்ணப் பழகடா பச்சை படுகொலை" எனும் அடிப்படையில், இதன் ஆணிவேர் எதுவோ, யாரோ.... அதனை பாரபட்சம் காட்டாது வேரோடு உடனடியாக...

வயசாயிடுச்சில்ல...!

Image
  ஆண்டு 1991..! மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறையும் கழிந்து புனித வளனார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு..  பதினேழு, பதினெட்டு வயது மட்டுமே நிரம்பிய என்னைப் போன்ற ஏராளமான இளைஞர் பலர் தங்கள் அரும்பு மீசை எட்டிப் பார்க்க முதல்நாள் அடியெடுத்து வைத்த நாள் இன்னும் பசுமையாய் நினைவுகளில்...! ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அமர்ந்து படித்த இயற்பியல் வகுப்பில் மர இருக்கைகளின் அரங்க அமைப்பு வகுப்பை மேலும் பிரமாண்டமாக காட்ட, மாணாக்கர்கள் ஆங்காங்கே  ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டிருக்க... திடீரென எனை நோக்கி நெடு நெடு உயரத்தில் ஓர் இளைஞன் திராவிட நிறத்தில் கண்களில் வசீகரம் மின்ன, உதட்டின் மெல்லிதாய் ஒரு சிறு  புன்னகையைய்த் தவழவிட்டுக் கொண்டு அருகில் வரவும், ஏதோ ஓர் சொல்லனா பரிச்சயம் இருவரிடத்தும் உணரப்பட்ட நிலையில், "ஃபிராங்க்ளின், பிரிட்டோ காலனி, மணிகண்டன், மலைகோட்டை" என கை குலுக்கிக் கொண்டு நலம் பரிமாற்றிக் கொண்டோம்..! இருவரும் பள்ளிப் பிராயத்தில்  பாராது "பார்த்துக்" கொண்டிருந்ததை அளவலாவிக் கொண்டோம்..! 10ஆம் வகுப்பில் மதிய இடைவேளை...

அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..!

Image
  அயோத்தி ராமன் ஓர் அவதார புருஷன்..! வடக்கில் பால ராமனாய் அவதரித்தவன், தெற்கில் பால "தன்வீ"யாயன்றோ  இன்று மீண்டும் உதித்தனன்..! மிதிலையின் அரசன் ஜனகனின் சுவீகார புத்ரியை சுயம்வரம் செய்திட சக்ரவர்த்தித் திருமகன் ராமன்  வில்லை உடைத்து அரங்கேறியது சீதா கல்யாண வைபோகம் அன்று! வில்லெனும் தன் அழகிய கண்களால் "தன்வீ" ராமன் காதலாய் சீதையை நோக்கிட அடையாரில் அரங்கேறியது  மழலையர் சீதா கல்யாணம் இன்று! இந்திய பெருநாட்டின்  மேன்மை மிகு அடையாளமாம் அயோத்தி ராமர் கோவில்தம் வசீகரத்தில் லயித்திருந்த எங்களின் கண்களுக்கு, தன் சின்னஞ்சிறு உடல் மொழியால் மேடையில் விந்தையாய் சீர்மிகு விருந்து வைத்தனள் எங்கள் இல்லத்து இளவரசி தன்வீ..! கற்சிலையேயாயினும் கடவுளாய் ராமன் அயோத்தியில் எழுந்தருளிய காட்சிதனை காணக் கோடி மக்கள் தவமிருக்க, இங்கே உயிர்பெற்ற சிலையாய் ராமன் தன்வீயாய் வலம்வரும் காட்சி கிடைத்திட என்ன தவம் நாங்கள் செய்தோமடா??

கொரிய நாட்டுப் பைங்கிளியே.!

Image
அகண்ட விழிகளால்  என்னை ஆட்கொண்ட கொரிய நாட்டுப் பைங்கிளியே.! கள்ளூரும் உந்தன் ஒற்றைப் பார்வைதனில் சிக்குண்டபின்னே பசியோ ருசியோ அறிகிலேனடி...! இதழ் விரித்து நீ பேசச் சிதறும் எச்சில் என் ஸ்பரிசம் பட்டால்  என் ஆத்மா அன்றோ புனிதமடையும்..! பார்த்தது போதும்.. பேசு... உன்னை மானசீகமாய்  காதல் கொண்டவனிடத்து  என்ன வேண்டுமானாலும் வினவு... உனக்காக கடல் கடந்து வந்தாவது உந்தன் காலடி சேர்த்து விட மாட்டேன்னா என்ன? சகியே..என் சக்தியே...! இவ்வுயிர் இருக்குமட்டும் உன் காதல் துதி பாடிட சலிக்க மாட்டேனடி பெண்ணே...!

அன்பே வா அருகிலே

"சித்ரா, நாளைக்கு காலையில, ஏர்லியரா கிளம்பணும், ட்ரைவரை நாலரை மணிக்கெல்லாம் வரச் சொல்லியிருக்கேன்.  மதுரையில் மீட்டிங் முடிச்சுட்டு, மேகமலை எஸ்டேட் வரை போகணும்.  ஷவரில், நனைவதற்கு முன் சொல்லி விட்டு, தாழிட, அவனை துண்டு கொடுக்கும் சாக்கில் இறுக்கி அணைத்தாள்.  "சித்து, தாலி குத்துதடி விடுடி" என்றவுடன் விருப்பமில்லாமல் விடுவித்தாள். அவர்களுக்கு திருமணமாகி 6 வாரங்களே ஆகின்றன.  OMR இல் பாஷ்யம் அப்பார்ட்மெண்ட் 14ஆவது தளத்தில், கடலைப் பார்த்த மாதிரி 4 BHK பிளாட் அவர்களுடையது.  கதிர், இன்போசிஸ் கம்பெனியில் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருக்கிறான்.  கல்யாணத்துக்கு முன், இரண்டு வருடங்கள் கனடாவில் ஒட்டாவா நகரில் ஆன்சைட் அசைன்மெண்டில் இருந்து வந்தான்.  அம்மாவின் பிடிவாதம் காரணமாக, கல்யாணத்திற்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டவன், சித்ராவை பார்த்ததும், முடிவை மாற்றிக் கொண்டவன்.   சித்ரா, கதிர் முதன் முதலில் பார்த்ததை நினைத்துக் கொண்டாள்.  மாலை 6 மணியளவில், மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள் என, வீடே அல்லோகலப்பட்டது.  "சென்னையிலிருந்து ட்ரைவ் பண்...

உயிர்ப்பறவை

இன்று பிப்ரவரி 14...  நேரம் மாலை 5:40... சென்னை 2028..! மேகா வந்து அரை மணி நேரமாகி விட்டது.  அடையாறு கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில், பாதி அழிந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு அவள் வந்து அரை மணிக்கும் மேலாகத் தான் ஆகி விட்டிருந்தது.  பாலத்தின் அடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.   "அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றது அந்த நீலப்பாவாடைச் சட்டை அணிந்திருந்த சிறுமி.  மேகா, இலேசாக புன்முறுவல் செய்தாள்.  முழுமையாய் அவளால் சிரிக்க முடியவில்லை.  காரணம், ஆகாஷ்.  மதியம் பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பும் போது, இன்று மாலை 5 மணிக்கு அவர்களுடைய பேவரிட் ஸ்பாட் - பட்டினப்பாக்கம் பழைய பாலத்தில் சந்திப்பது என்று ஆகாஷ் சொல்லியிருந்தான்.  அதனால் தான் நிற்கிறாள்.  அவன் வருகைக்காக காத்திருக்கிறாள்.   காற்று பலமாக வீசுகிறது  நெற்றியில் கற்றையாய் முடி மீண்டும் மீண்டும் விழ, அதை சரி செய்து சரி செய்து தோற்றுப் போனாள்.  வெளிர் நீல குர்தாவும், ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்தாள். கண்களில், "ரே பான்" அவளை மேலும் ந...