Posts

அந்த ஏழு நாட்கள்...!

Image
முதல் நாள்: அதிகாலை 3 மணிக்கெல்லாம் புறப்பட்டு விடலாம் அம்பைக்கு என முன்கூட்டியே திட்டமிருந்ததால் வழக்கத்துக்கு மாறாகத் தூக்கம் வர மறுத்தது! ஒரு மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானேன்! மனோ, என் சத்தங்களின் இடையூற்றில் லேசாக அரைத் தூக்கக் கலக்கத்தோடு நடுநிசியில் பிசாசு போல் நடமாடும் என்னை அசிங்கமாய்ப் பார்த்தாள்! கலைந்தக் கூந்தலும் வெற்று நெற்றியுமாய் அழகான இராட்சஷியாய் தெரிந்தாள்! சபரி எஸ்டேட் சென்று மாமாவையும் கலாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து அம்பை நோக்கி வெர்னா காரில் ஒரு வழியாக கிளம்பினோம்! வழியில் பெரம்பலூர் தாண்டி ஆர்யா உணவு விடுதியில் அமோகமாய் காலைச் சாப்பாடு! இலவச கேசரியும், ஏழு வகை "தொட்டுக்க" வகையறாக்களும் இன்னமும் நாவில் சுவைத் தெரிகிறது ! மதியம் 12:30 மணியளவில் அம்பாசமுத்திரம் ஊர் வாயிலைத் தொட்டதும் ஏதோ ஒரு பரவசமும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது! மதிய உணவை சந்திரா வீட்டில் முடித்துக் கொண்டு அகிலனையும், சபரீசையும் அழைத்துக் கொண்டு குமார் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கொட்டிக் கிடக்கும் இயற்கையின் கொள்ளை...

அபியும் நானும் ...!

Image
அபி என் உடன் பிறவா சகோதரி....! அபியைப் பற்றி நினைவுகூற ஒரு கால் நூற்றாண்டாவது நான் பின்னோக்கிச் செல்ல வேண்டும், பரவாயில்லை! அபிக்காக செல்லலாம்! அப்போது நாங்கள் திருச்சியில் வாழ்ந்து வந்தோம்! அபியை நான் முதன் முதலில் பார்த்தது இன்னும் எனக்குள்  பிரகாசமாய் ...! அவளது தந்தையும், எனது தந்தையின் உயர் அதிகாரியுமான "திரு. சங்கரன்" சார், அவரது மனைவியும், கனரா வங்கி ஊழியருமான "திருமதி. மீனாக்ஷி" அவர்கள், "சத்ய நாராயணன்" எனும் "சதீஷ்" - அவர்களது செல்ல மகன், "நிரஞ்சனா" எனும் "அபி" - ஒரு குட்டி தேவதை...! என அந்த பிராமணக் குடும்பம் குடியேறியிருந்த வீடு, திருச்சியில் தெப்பகுளம் பார்த்த மாதிரி ஒரு அக்ரஹாரத்தில், அந்தப் பகுதியின்  அதீத விசாலமானதும் மிகப் பெரிய மொட்டைமாடியினைக் கொண்டதுமாகமாய் பிரமாண்டமாகத் அப்பொழுது தெரிந்தது! அங்கே தான் முதன் முதலாய் அபியும் சதீஷும் எனக்கு அறிமுகமானார்கள்! சதீஷ் பரம சாது! அபியோ மகா வாலு! தெற்றுப்பல், பெரிய விழிகள், செம கலர், கொழுக் மொழுக் என ரகளையாய் இருப்பாள்! அடிக்கடி செல்...

சென்னை முதல் தனுஷ்கோடி வரை....!

Image
சென்னை முதல் தனுஷ்கோடி வரை....! இந்த வருடத்தின் துவக்கம் கண்டிப்பாக ஒரு வித்தியாசத் துவக்கமாகவிருக்கவேண்டுமென விரும்பி, எனது நீண்ட நாள் பிரார்த்தனையாகிய பழநி பாதயாத்திரைதனை ஆண்டின் முதல் நாள் பழநியில் காலடி படும்படி சென்ற ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிதனில் எனது யாத்திரைதனை துவக்கினேன் ! விரும்பியபடி 01.01.2014 அதிகாலை 3.00 மணியளவில் பழனி சென்று அடைந்தேன்! பால தண்டாயுதபாணியை தரிசனம் செய்தேன்! அதனைத் தொடர்ந்து நகரத்தார் கோவில்கள் ஆகிய பிள்ளையார்பட்டி, அரியக்குடி, குன்றக்குடி திருத்தலங்களுக்கும், செட்டிநாடு நகரங்களாகிய காரைக்குடி மற்றும் தேவகோட்டைக்கும் விஜயம் செய்து, இறுதியாக இராமநாதபுரம், மண்டபம், இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய ஊர்களுக்கும் சென்று வந்தேன்! ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு ஞாபகம்! பலப் பல அனுபவம்! நகரத்தாரின் கட்டிட கலை நுணுக்கங்கள் என்ன; இராமேஸ்வர பாலத்தின் பிரமிப்பு என்ன; தனுஷ்கோடி கிராமத்தின் ஆறா வடுக்கள் என்ன என்ன...! காரைக்குடியில் நான் படித்த பள்ளியை பார்த்த போது ஒரு இனம் ...

என்றென்றும் உன் நினைவுகளில் . . . !

Image
 பாரதி! அப்பாவின் மூத்த மகன்! அம்மாவின் செல்ல மைந்தன்! தம்பி தங்கைகளின் அன்புச் சகோதரன்! எங்களுக்கு எல்லாமுமாம் இருந்தவன்! முப்பது வயதுக்கு முன்பே இறந்தும் போனவன்! பாரதி யாரவன்? அவன் ஒரு தனி மனிதன் மட்டும் தானா? இல்லை! இல்லை! அவன் ஒரு சரித்திரம் தாண்டிய சகாப்தம்! ரத்தமும் சதையுமாய் இயங்கி வந்த ஒரு உன்னத மனிதனை காலன் அவசர அவசரமாய் அழைத்துக் கொண்டு போய் இதோ வருடங்கள் பதினான்கு ஓடிப் போய்விட்டன! அப்பா தான் அவனுக்கு எல்லாம்! அவனை அப்பாவும், அப்பாவை அவனும், உயிருக்கு உயிராய் நேசம் செய்தது கூடவே இருந்த எங்களுக்குத் தான் தெரியும்! அப்பா, தன மகன்  என்னவெல்லாம் ஆக வேண்டுமென கனவு கொண்டிருந்தாரோ, எல்லாவற்றையும், ஒன்று விடாமல் செய்து முடித்தான் என்றால் அது மிகையில்லை! தேவகோட்டையில் "டி பிரிட்டோ", காரைக்குடியில், "எல் எப் ஆர் சி " குழித்துறையில் அரசுப் பள்ளி! திருச்சியில் உருமு தனலக்ஷ்மி மற்றும் புனித வளனார் பள்ளி ...! என அவன் படித்த பள்ளிகளில் எல்லாம் வகுப்பில் முதல் மாணவனாய்த் திகழ்ந்தது  மட்டுமின்றி, கலை இலக்கிய போட்டிகளிலெல்லா...
Image
கடவுளின் சொந்த நாடு ! சமீபத்தில் கேரளா சென்று வந்தேன்! ஒரு வேலை நிமித்தமாக, எர்னாகுளம் வரை ! நண்பர் ராஜேஷ் அவரது "புதுசேரி இல்லத்தில்" தங்கிக் கொண்டு, கேரளாவின் முக்கிய சில பகுதிகளை கண்டு வந்தேன்! குருவாயூர் கோவில், மமியூர் கோவில், அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, வாழச்சால் நீர்வீழ்ச்சி , குமரகம் ஏரி, கொச்சி துறைமுகம், "லு லு" மால், சாவக்காடு கடற்புறம் என்று சுற்றி வந்தேன்! கேரளா! பிரபஞ்சத்தின் பிராணவாயு உற்பத்தியாகும் பிரதேசம் எனலாம்! எங்கெங்கு காணினும் இயற்கை, சிறுமியாய் , குமரியாய், அழகியாய் , ராட்சஸியாய், அழகிகளின் அவதாரங்களாக என்னை படுத்தி எடுத்தது என்பதே உண்மை! போய் வாருங்கள்! புத்துணர்வு நிச்சயம்!

என் பார்வையில் " கடல்"

Image
                                                        சமீபத்தில் வெளியான கடல் திரைப்படம் பற்றிய பல தரப்பு விமர்சனங்களைப் படித்து மனம் கலங்கி, என் ஆதர்ச நெறியாளுனர் திரு. மணிரத்தினம் அவர்களது ஆத்மார்த்த ரசிகனாய் எனது கருத்துக்களை பதிவு செய்வது கடமையென உணர்கிறேன். கடல் . . . . !  சமுத்திரம் எவ்வளவு ஆழமும், கொந்தளிப்பும், சீற்றமும், அழகும் மற்றும் அமைதியும் கொண்டதோ அது போலவே இத்திரைப்படமும் என்பதே என் வாதம். புனித விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பெரும்பான்மை கருத்துக்களை எனக்குத் தெரிந்து இத்துனை நேர்த்தியாக எவராலும், காட்சி ஊடகத்தில், திறம்பட சொல்லியிருப்பர்களா என்றால் இல்லை என்பதே உண்மை! சம காலத்துடன் பொருத்தி, கதையின் தன்மைக்கேற்ப பின்புலத்தில், நிஜக் கடலையே ஒரு கதாபாத்திரமாய் உருவாக்கி, அதன் நிற ...
Image
வணக்கம் ரெண்டாயிரத்துப் பதிமூன்று !     எத்தனைப் பதிவுகள் கடந்த நான்கு வருடங்களாக எழுதியிருந்தாலும் , இந்த ஆண்டின் முதல் பதிவை நான் எழுத முற்படுகையில் , வழக்கமான உற்சாகம் ஏனோ இல்லாது போனதிற்கு " ஆண் " எனும் என் இனத்தின் மீதே வெறுப்பு கூட ஒரு காரணமாயிருக்கலாம் !     தலைநகரின் சமீபத்திய நிகழ்வு , ஒரு ஆணாய் என்னை வெட்கப்பட வைக்கிறது என்றால் மிகையில்லை ! மிருக மனம் படைத்த ஆண் நடமாட்ட சமுத்திரத்தில் , ஒரு பெண் தனியே சுதந்திரமாய் நடமாட முடிகிற வரையில் , " நமக்கு சுதந்திரம் என்பது இல்லை " என்று காந்தி சொன்ன வார்த்தைகள் இன்னும் நிதர்சனமாய் , நம்மை ஒட்டுமொத்தமாய் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கிறது !     பெண்கள் இல்லாத வாழ்க்கை என்பது இல்லை ! பெண்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பதே உண்மை ! மனைவியே ஆனாலும் " புரிதல் " என்பது இல்லாது போனால் அங்கேயே சமூக பிரக்ஞை பிறழ்ந்து போகிறது !     ஊடகங்களில்...