அஞ்சலி, அஞ்சலி, புஷ்பாஞ்சலி...!
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் இனி எப்போது? மன்றம் வருமோ தென்றல்? அந்தி மழை பொழியாதோ? வானுயர்ந்த சோலையில் நீ நடந்த பாதை எங்கே? இளைய நிலா இனி பொழியாதோ? தங்கத் தாமரை மலராதோ? சங்கீத ஜாதிமுல்லையை ஏன் காணவில்லை? ரோஜாவை தாலாட்டுமா தென்றல்? மௌனமானதே நேரம்..! கடவுள் அமைத்து வைத்த மேடையில் யாருக்கு இனி அஞ்சலி, புஷ்பாஞ்சலி? போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமேயென ஜீவ சுகம்பெற ராக நதியினில் நீந்தச் சென்றனையோ? எஸ் பி பி அய்யா...! நீரின்றி இனி அமையுமோ இசை உலகு? இப் பிரபஞ்சம் முழுமையும் உன் குரல் ஒலித்தாலும் இனி உம்மை நேரில் பார்ப்பது போல் வருமோ? குழந்தை போல் சிரிக்கும் உன் முகம்தனை இனி காண்பது எப்போது? காலனின் பசிக்கு உன் இசையை காணிக்கை ஆக்கச் சென்றாயா? நீங்குமோ எங்கள் துயரம்? தாங்குமோ இந்த பூலோகம்? பா. மணிகண்டன்