தாங்கிக் கொள்(ல்)வாயடி...!




தோழியே, என் காதலியே..!
என் மனச்சுமையை இறக்க
உன் மார்சுமையில் முகம் பதித்தேன், மூர்ச்சையானேன்!
விம்மும் உன் தேகத் தலையணைகளில்
என்னை அணைத்துப்
புதைத்துக் கொண்டு
மோட்சம் அன்றோ தந்தாய்...!

என் நெஞ்சக் குமுறல்களின்
வலி தாளாது நான் துவள
உன் பருவ மேடுகளில் 
வழிந்தோடிய என் கண்ணீர்
பொங்கும் உன் காம தகதகப்பில்
சுவடின்றி ஆவியாய்ப் போனதடி!

ஆடையாய் எனைப் 
போர்த்திக் கொண்டு,
மோகத் தடம்பதிக்க உன்
இடையின் இடைவெளியில்
நிரந்தரப் பள்ளத்தாக்கில் 
என் உயிரின் உதிரத்தை
வாஞ்சையாய்
நிரப்பிக் கொண்டாய்...!

எண்ணிலாத் துயர் வரினும்
என்னிலே துயர் வரினும்
உன் மேனிதன்னில்
கண் மூடிக் கிடந்தால் போதுமடி!
என் சாபமும் விரக தாபமும்
ஒன்றாய்ச் சேர்ந்துத் தீருமடி...!

சகியே..!
என்னைச் சகித்துக் கொண்டவளே..!
வா, எனை ஆசுவாசப்படுத்து!
அசுத்தமாயிருக்கும் என்
மனப் பிரதேசத்தை உன்
இதழின் ஈரத்தால் துடைத்துச் சுத்தப்படுத்து..!
நாளையின் புதிய விடியலாவது
நமக்கு நம்பிக்கை பாய்ச்சட்டும்..!


மணிகண்டன். பா













Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை