வயசாயிடுச்சில்ல...!
ஆண்டு 1991..! மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறையும் கழிந்து புனித வளனார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு.. பதினேழு, பதினெட்டு வயது மட்டுமே நிரம்பிய என்னைப் போன்ற ஏராளமான இளைஞர் பலர் தங்கள் அரும்பு மீசை எட்டிப் பார்க்க முதல்நாள் அடியெடுத்து வைத்த நாள் இன்னும் பசுமையாய் நினைவுகளில்...! ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அமர்ந்து படித்த இயற்பியல் வகுப்பில் மர இருக்கைகளின் அரங்க அமைப்பு வகுப்பை மேலும் பிரமாண்டமாக காட்ட, மாணாக்கர்கள் ஆங்காங்கே ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டிருக்க... திடீரென எனை நோக்கி நெடு நெடு உயரத்தில் ஓர் இளைஞன் திராவிட நிறத்தில் கண்களில் வசீகரம் மின்ன, உதட்டின் மெல்லிதாய் ஒரு சிறு புன்னகையைய்த் தவழவிட்டுக் கொண்டு அருகில் வரவும், ஏதோ ஓர் சொல்லனா பரிச்சயம் இருவரிடத்தும் உணரப்பட்ட நிலையில், "ஃபிராங்க்ளின், பிரிட்டோ காலனி, மணிகண்டன், மலைகோட்டை" என கை குலுக்கிக் கொண்டு நலம் பரிமாற்றிக் கொண்டோம்..! இருவரும் பள்ளிப் பிராயத்தில் பாராது "பார்த்துக்" கொண்டிருந்ததை அளவலாவிக் கொண்டோம்..! 10ஆம் வகுப்பில் மதிய இடைவேளை...