அன்பே வா அருகிலே
"சித்ரா, நாளைக்கு காலையில, ஏர்லியரா கிளம்பணும், ட்ரைவரை நாலரை மணிக்கெல்லாம் வரச் சொல்லியிருக்கேன். மதுரையில் மீட்டிங் முடிச்சுட்டு, மேகமலை எஸ்டேட் வரை போகணும். ஷவரில், நனைவதற்கு முன் சொல்லி விட்டு, தாழிட, அவனை துண்டு கொடுக்கும் சாக்கில் இறுக்கி அணைத்தாள். "சித்து, தாலி குத்துதடி விடுடி" என்றவுடன் விருப்பமில்லாமல் விடுவித்தாள். அவர்களுக்கு திருமணமாகி 6 வாரங்களே ஆகின்றன. OMR இல் பாஷ்யம் அப்பார்ட்மெண்ட் 14ஆவது தளத்தில், கடலைப் பார்த்த மாதிரி 4 BHK பிளாட் அவர்களுடையது. கதிர், இன்போசிஸ் கம்பெனியில் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருக்கிறான். கல்யாணத்துக்கு முன், இரண்டு வருடங்கள் கனடாவில் ஒட்டாவா நகரில் ஆன்சைட் அசைன்மெண்டில் இருந்து வந்தான். அம்மாவின் பிடிவாதம் காரணமாக, கல்யாணத்திற்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டவன், சித்ராவை பார்த்ததும், முடிவை மாற்றிக் கொண்டவன். சித்ரா, கதிர் முதன் முதலில் பார்த்ததை நினைத்துக் கொண்டாள். மாலை 6 மணியளவில், மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள் என, வீடே அல்லோகலப்பட்டது. "சென்னையிலிருந்து ட்ரைவ் பண்...