மதம் பெயரில் அரசியல் எதற்கு?
கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்க் கடவுள் முருகனைத் துதித்து, தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசத்தில் வரும் சில வரிகளை விமர்சித்து பேசிய காணொளியைக் காரணம் காட்டி, எழுந்துள்ள எதிர்ப்பலையினால், அதனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டி, அந்த காணொளியைய் பார்த்தேன். அந்த நபர் குறிப்பிட்ட படி, கவசத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகளும், அதற்கான பொருளும் சரியே. ஆனால், அதை எடுத்துக்காட்டிய விதம், சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் வெளிப்பாடே, தற்போது ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலை. நானும் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் தான். ஆனால் எனக்கு அந்த நபர் மீது எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில், அது அவரது கருத்து சுதந்திரம். அதற்கு எதிர்வினையாற்றியாகிய வேண்டிய கட்டாயம் எவர்க்கும் தேவையுமில்லை. சில விஷயங்களை பெரிதுபடுத்துவதாலேயே அவற்றுக்கு அவசியமற்ற முக்கியத்துவம் கிடைத்து விடுகிறது. என்னுடைய பார்வையில், அந்த நபருக்காகவும், அவரது வெறுப்பாளர்களுக்காகவும், நான் சொல்ல விரும்புவது இதைத் தான். கடவுளிடம் ஒரு பக்தன்...