Posts

Showing posts from July, 2019

காதல் சடுகுடு

வாரங்கள் மூன்று ஆயிற்று, இப்படி நான் இருந்து நானே என்னைப் பார்த்ததில்லை! பசி தெரியவில்லை! தூக்கம் சரியில்லை. வாரம் முழுக்க சட்டை மாற்றவில்லை... முகச்சவரம் தவறியிருக்கிறது. நான் நானாக இல்லை. ஏனென்று புரியவில்லை! ஆனாலும் இது எனக்கு  ஒருவிதமாய் பிடிக்கத்தான் செய்கிறது! பிரபலத் தமிழ்தொலைக்காட்சியில் இந்த வருடம் உலகநாயகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி  வண்ணமயமாயிருக்கின்றது! காரணம் அழகுப்பெண்களின் சங்கமமா?  இருக்கலாம்! அதிலும் புலம்பெயர்த் தமிழச்சியின் வருகை, என்னைப் போன்றவர்களையும் தடுமாறச் செய்கிறது! அந்தத் தடுமாற்றம் சுகமானச் சங்கடமாயிருக்கிறது...! அந்த அழகுச் செறிவின் தாக்கம், அவளின் பேச்சினிலும், சிந்தும் புன்னகையினிலும், 'கவி'த்துவமான ஊடலிலும், பொங்கும் கண்ணீரினிலும், சினத்தினுலும், ஆற்றாமைத் தயக்கத்தினிலும்,  ஓர் ஈழத் தேசத்து  சோக அத்தியாயங்களின்  ஆறா ரணக் கீற்றுப் பிளம்பாய், என்னையும் காயப்படுத்தக் கண்டேன்! திமிரும் அவளின் இளமையின் கணம் உணரத் தெளிந்தேன்! மாற்றான் தோட்டத்து மல்லிகையல்ல அவள்! ...

கடற்கரைக் கவிதை...!

Image
ஓயாது ஆர்ப்ப்ரிக்கும் கடற்கரையை, உற்றுநோக்கும் தங்கத் தாரகையே! எங்கிருந்து வந்தாய் நீ? விண்ணைத் தாண்டி வந்தாயோ?? இல்லை, விடியா என் இரவுகளின் விண்மீனாய் வந்தாயோ? என்ன சொல்ல நினைக்கிறாய் நீ, என்னைக் கொல்லாமல் கொல்லும் தீ...! ஆதவனே உதிக்காது போனாலும், ஓயாத அலைகள் நின்றாலும் உன் மீது நான் கொண்ட காதல், மாறாது, தீராது..! வா பெண்ணே, என் கைகோர்த்துக் கொள்! முடிவிலிகளாம் நம் பயணங்கள்! அதனை மீண்டும் தொடர்வோம்...! பா.மணிகண்டன்

நடைப்பயிற்சிக் கவிதை

Image
விடியலில் மொட்டுகள் துளிர்க்கும் தருணம்..! வானம் வெட்கிச் சிவக்கும்; மனமோ, செங்கொன்றைப்பூச் சிவப்பாய் பற்றி எரிய, அங்கே வெள்ளை மலர்ப் பாதைதனில் என்னை கொள்ளை கொண்டு போனவளின் கால்தடம் தேடித்திரிய, அடங்க மறுக்கும் காதல் எரிதழலைத் தணிக்கும் மருந்தாய் சிந்தும் அவளின் இனம்புரியா ஓர் குளிர்ப் புன்னகை! அழகுப் பெண்கள் எவராயினும் கவிஞர்கள்களின் கற்பனையில் காதலிகள் தானே....! பா. மணிகண்டன்

தூவானம்...!

Image
சென்ற சனி அல்லது ஞாயிறு..! சரியாக ஞாபகமில்லை, இப்போது அது முக்கியமில்லை! அவளைப் பார்த்தேன்! அவ்வளவுதான்! அது மட்டும் தான் எனக்கு முக்கியம்! என்னோட ஷாலு மாதிரியே முகம் அவளுக்கு! மறக்க முடியாத முகம்! என்னிலிருந்து அழிக்க முடியாத முகம்! என் ஷாலுவுக்கு அப்போது 17 அல்லது 18 வயதிருந்திருக்கலாம்! எனக்கு 20 - 22 என்று ஞாபகம்! REC யில் எலக்ட்ரானிக்ஸ் 2ஆம் ஆண்டு படித்து வந்தேன்! நாங்கள் திருச்சியில் மலைக்கோட்டைக்கு கீழே சந்தி வீரப்பன் கோவில் வீதியில் இருந்தோம். சாலையிலிருந்து வீடு செல்ல ஒரு குறுகிய சந்தில் தான் செல்லவேண்டும். வெளியில் வீதிக்கு வந்துப் பார்த்தால் சாலையின் மறு பக்கத்தில் பச்சை நிறத்தில் பெரிய பெரிய கம்பி போட்ட வீடு! வெளியில் திண்ணை, உள்புறம் வெளியிலிருந்து பார்த்தாலே தெரியும் முற்றம்! ஷாலு, தாய், தந்தை, அக்கா, பாட்டி தாத்தா சகிதம் என ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்கிறவள்! என் தங்கை அபியின் சினேகிதி! இருவரும் சீதாலக்ஷ்மி கல்லூரியில் BA ஆங்கிலம் ஒன்றாய் படிப்பவர்கள்! அடிக்கடி வீடு வந்து செல்வாள்! அய்யர் வீட்டுப் பெண்! திவ்யமாய் இருப்பாள். பளீர...