அபர்ணா F 22
காலை 6 மணி...! திருச்சி ஆண்டார்த் தெரு! முகத்தில் வெயில் படவும் சோம்பல் முறித்து எழுகையில், மலைக்கோட்டையில் தீபாராதனையின் ஒளி தெரிந்தது! "பிள்ளையாரப்பா" கன்னத்தில் போட்டுக் கொண்டேன்! ஜன்னல் வழி தூரத்தில் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் தலை காயத் துவட்டுகிறாள் ஒரு பெண்! கூந்தல் முழுதாய் மறைக்க அவளது முகம் தெரியவில்லை, ஆனால் இளமை தெரிந்தது; உருவம் சரியாய் பதியவில்லை, ஆனால் பருவம் புரிந்தது! ஆர்வமதிகமாகி, விலகியிருந்த கைலி சரிசெய்து, முகத்தில் நீர்த் தெளித்து, "அம்மா காபி" என அவளுக்கு கேட்கும்படி சத்தமாய் கத்தினேன்! சத்தம் கேட்டு அந்தப் பாவையின் பார்வை எனை நோக்க, தரிசன திருப்தியில் ஒருகணம் எச்சில் விழுங்கிக்கொண்டே, அவளை வெறித்துப் பார்த்தேன்! தலையில் அடித்துக் கொண்டாள் ! கைகளில் முகம் புதைத்து சிரித்துக் கொண்டாள்! அசிங்கப்பட்டவனாய் கீழே பார்த்த போது கைலிக்கு பதில் போர்வையை சுற்றியிருந்தேன் ! அந்த வெட்கப் புன்னகை என்னைத் தாக்கி, வதம் செய்து, கிறங்கடித்து இதோ இன்றோடு தேதி பன்னிரெண்டு ஆகிறது! தினமும் காலையில் அவள் வருவாளா? தரிசனம் ...