கபாலி
வெகுஜன, இணைய, பத்திரிக்கை மற்றும் வாய்ச்சொல்
விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு
திறந்த மனதோடு கபாலி படம் பார்க்க நேற்றுச் சென்றிருந்தேன்!
கனத்த மனதோடு திரும்பி வந்தேன்!
இப்படி ரஜினியைப் பார்த்து தான்
எவ்வளவு நாளாயிற்று!
சிறையில் புத்தகம் படிப்பதில் துவங்கி
இறுதியில் நிறைவாய் தன் குடும்பத்தினருடன்
மனதிற்குப் பிடித்தமான வாழ்க்கையைத் வாழத் துவங்கும் வரை
எவ்வளவு இயல்பாய், நேர்மையாய், யதார்த்தமாய்
அந்த கதாபாத்திரம் பயணிக்கிறது!!
"தன் அன்பு மனைவியைத் தேடுதல்"
எனும் ஒற்றை நோக்கத்திலிருந்து துளியும் பிறழாமல்
கண்ணில் தேடலையும் நெஞ்சில் வலியையும்
நடை உடை பாவனையில் மிடுக்கையும் தவற விடாது
அடுத்தடுத்த காட்சிகளில்
தன்னுடன் இருப்பவர்கள் முதல்
தன்னை திரையில் பார்க்க வந்திருக்கும் ரசிகர்கள் வரை
அனைவரையும் தன்னோடு அரவணைத்துச் செல்ல
வைத்திருக்கும் படியான ஒரு ஈர்ப்பினை
படத்தின் ஜீவநாடியாய் உலவ விட்டிருப்பத்தில்
இயக்குனர் பா ரஞ்சித் தன்னை அடுத்த கட்டத்திற்கு
எடுத்துச் சென்றிருப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்
என்றால் அது மிகையில்லை!
இது ரஜினி படமா இல்லை ரஞ்சித்தின் படமா என்றால்
என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு நல்ல படம்!
ரஜினியை அவரது வயதொத்த கதாபாத்திரமாய்
வாழச் செய்திருக்கும் ஒரு அரிய படம்!
எவ்வித எதிர்பார்ப்புகளுடன் இல்லாது சென்று வந்தால்
இது ஒரு மிகச் சிறந்த வெற்றிப் படம்!
Comments
Post a Comment