தோழர் முரளி ...!
தோழர் முரளி ...! மிஞ்சிப் போனால் என்ன ஒரு வருடம் இருக்குமா..? எனக்கு அவரும்; அவருக்கு நானும் அறிமுகமாகி...! ஏதோ பல வருடப் பழக்கம்போல் உணர்வு மேலிடத்தான் செய்கிறது, ஒவ்வொரு முறை அவரிடத்து பேசும் போதும், பழகும் போதும்! நண்பர்கள், நல விரும்பிகள் என எல்லோரையும் போல சிநேகிதர்கள் பலர் என் வாழ்க்கையிலும் வந்து போனாலும், பெரியதாய் சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு நட்பு வட்டாரம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை! அதற்கு காரணமாக இந்தத் தலைமுறை சங்கடங்களை குற்றம் சொல்வதா இல்லை சொல்லாமல் விடுவதா? புரியவில்லை ! பால்ய காலத்திலிருந்தே விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்குத் தான் நண்பர்கள் எனக்கு! பள்ளி பிராயத்திலிருந்தே, நண்பன் ஜோ! கல்லூரி காலத்திலிருந்து, நண்பன் பிராங்க்ளின், பணியிடத்தில், நண்பர் ராஜேஷ்! இப்பொழுது வசிப்பிடத்தில் தோழர் முரளி! எங்களது முதல் சந்திப்பு, இன்னும் எனக்கு பசுமையாய் நினைவிருக்கிறது...! அது ஒரு சிறு தூறல் பெய்து கொண்டிருந்த முன்பனிக் காலம்! வசிக்கும் குடியிருப்பின் பொதுப் பணிகளில் என்னை அதிகமாய் ஈடுபடுத்திக்கொண்டிருந்த கா...