ஆனந்த ஜன்னல்கள்
சென்னை காட்டுபாக்கம் அருகாமையில்
மாங்காடு செல்லும் வழிதனில்
நகரச் சந்தடியிலிருந்து சற்றே ஒதுங்கி
பாஷ்யம் கட்டுமான குழுமத்தின்
"ஆனந்த ஜன்னல்கள் (HAPPY WINDOWS )" குடியிருப்பு
அமைதியாய் ஆளுமையாய் அழகாய்
அமையப் பெற்றுள்ளது!
மொத்தமாய் ஆறு கட்டிடங்கள்
தரைத் தளம் வாகன நிறுத்தத்திற்கு,
அதன் மேல் நான்கு தளங்கள் குடியிருப்பிற்கு என மொத்தம் 280 வீடுகள் !
ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகள்!
பூங்கா
உடற்பயிற்சி கூடம்
பல்பொருள் வளாகம்
உள் விளையாட்டு அரங்கம்
சூரிய சக்தி கொதிகலன்கள்
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
குடிநீர் சுத்திகரிப்பு மையம்
24மணி நேர மின்சார ஆளுமை
நீச்சல் குளம்
ஒன்பது நிலத்தடி நீர் கிணறுகள்
ஒரு டஜன் பிரத்யேக அறைகள்
நடைபயிற்சி சாலைகள்
இன்னும் பலப்பல வசதிகளைத்
தன்னகத்தே கொண்டிருக்கும்
இந்த குடியிருப்பு உண்மையிலேயே
ஆனந்தம் தவழும் ஜன்னல்களே !
மூன்றாம் கட்டிடத்தில் முதலாம் தளத்தில்
அமையப் பெற்றுள்ளது
இரு படுக்கையறைக் கொண்ட என் வீடு!
தெற்குப்புற வாசல்
தென்கிழக்கு மூலையில்
சூரியதிசை நோக்கி சமையலறை !
மூன்று பால்கனிகள்
இரண்டு ஒப்பனை அறைகள்
என 1177 சதுர அடிகள்
கொண்டிருக்கும் வீட்டில்
வெளிச்சத்திற்கு பஞ்சம் இல்லை!
அமைதியைத் தவிர வேறொன்றும் இல்லை!
பெங்களுர், போரூர், படப்பையைத் தொடர்ந்து
மாங்காட்டிலும் நான்காவதாய்
மற்றுமொரு இல்லம் அமையப் பெற
கருணை புரிந்த கடவுள்களுக்கு
கோடி நன்றிகள்!
Comments
Post a Comment